பாரத் பயோடெக்கின் கோவாக்சினில் புதிதாகப் பிறந்த கன்றுக்குட்டி சீரம் இருப்பதாக சமூக ஊடகங்களில் வரும் செய்திகளை புதன்கிழமை (ஜூன் 16) மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்தது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசி போட்டுக்கொள்வது பற்றி பலருக்கு பலவித அச்சங்கள் உள்ளன. உயிருக்கு ஆபத்து வந்து விடுமோ, அல்லது, பெரிய பக்க விளைவு ஏதாவது ஏற்பட்டு விடுமோ என்ற கலக்கம் மக்களிடையே இருந்து வருகிறது.
குழந்தைகளுக்கான இந்த தடுப்பு மருந்து, செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதிக்குள் விநியோகத்திற்கு தயாராக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. சமீபத்தில் அதிபர் விளாடிமிர் புடினுடனான சந்திப்பின் போது ஜின்ட்ஸ்பர்க் இவ்வாறு கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் தேவையா இல்லையா என்பதை தெரிந்துகொள்ள இன்னும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டி இருக்கலாம். இந்த தகவலை அளித்த, உலக சுகாதார நிறுவனம் (WHO) உலகம் முழுவதும் இது பற்றிய ஆராய்ச்சி நடந்து வருவதாகக் கூறியது.
கொரோனா தடுப்பூசியை ஊக்குவிப்பதற்காக சில பொதுத்துறை வங்கிகள் வைப்புத்தொகைக்கு அதிக வட்டி விகிதங்களை வழங்கியுள்ளன. இந்த சலுகை ஒரு குறிப்பிட்ட காலத்திற்காக கொண்டு வரப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி செலுத்த பதிவு செய்யும் தளமான கோவினில் தமிழ் மொழி சேர்க்கப்படாதது குறித்து தமிழக அரசு இந்திய அரசிடம் விளக்கம் கோரியது. இந்த போர்டலில் தமிழ் மொழியையும் சேர்க்குமாறு தமிழக அரசு வலியுறுத்தியதை அடுத்து இரண்டு நாட்களில் தமிழும் போர்ட்டலில் சேர்க்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட தடுப்பூசி உற்பத்தியாளர் Biological-E நிறுவனத்துடன் 30 கோடி கோவிட் -19 தடுப்பூசி டோஸ்களை பெறுவதற்கான ஏற்பாடுகளை மத்திய சுகாதாரா அமைச்சகம் இறுதி செய்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை இப்போது மெதுவாக கட்டுப்பாட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. ஒரு நாள் தொற்று எண்ணிக்கையில் நிலையான சரிவு காணப்படுகிறது.
தமிழகத்திலும் கடந்த சில நாட்களாக மக்கள் மிகுந்த ஆர்வத்தோடு தடுப்பூசி செலுத்திக்கொள்ள வந்துகொண்டிருக்கும் வேளையில், ஏற்கனவே இருந்த தடுப்பூசி தட்டுப்பாடு இன்னும் அதிகமாகியுள்ளது. தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு உள்ளதாக அரசும் தெரிவித்துள்ளது.
உலக அளவீட்டின்படி, கடந்த 24 மணி நேரத்தில், இந்தியாவில் 1 லட்சம் 53 ஆயிரம் 485 பேர் கொரோனா வைரஸால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 3129 பேர் உயிர் இழந்தனர். இதைத் தொடர்ந்து இந்தியாவில் கொரோனா தொற்றால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 கோடி 80 லட்சம் 46 ஆயிரம் 957 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது ஸ்புட்னி-வி தடுப்பூசி, ஜூன் இரண்டாவது வாரம் முதல் சென்னை உட்பட பல்வேறு இடங்களில் உள்ள அப்போலோ மருத்துவமனைகளில் செலுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியியுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, அரசு பல வித நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மே 24 முதல் தளர்வுகளற்ற ஊரடங்கு அமலில் உள்ளது. பல வித முறைகளில் மக்களுக்கு தொற்று குறித்த விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருகின்றது.
ஆரோக்கிய சேது செயலி இனி தடுப்பூசி நிலை குறித்த புதுப்பித்தல்களையும் உங்களுக்கு அளிக்கும். உங்கள் அருகில் உள்ளவர்களில் எத்தனை பேர் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டு விட்டார்கள் என்பதையும் இனி அறிய முடியும்.
கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாட்டு மக்களை பாடாய் படுத்தி வருகின்றது. பல மாநிலங்களில் ஒற்றை நாள் தொற்றின் அளவு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு உள்ளது. தமிழகத்திலும் தொற்றின் அளவு மிக அதிகமாகவே உள்ளது.
தடுப்பூசி உற்பத்தி செய்யும் நிறுவனமான மாடர்னா அடுத்த ஆண்டுக்குள் இந்தியாவில் ஒற்றை டோஸ் கொரோனா தடுப்பூசியை அறிமுகப்படுத்தக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிலருக்கு தடுப்பூசி போட்ட பிறகு காய்ச்சல், உடல் வலி, தலைவலி, சோர்வு போன்ற சிறிய பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. நிபுணர்களின் படி, நாம் உட்கொள்ளும் உணவில் கவனம் செலுத்தினால், இந்த பக்க விளைவுகளை குறைக்கலாம்.
18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்கள் கோவின் (CoWIN) போர்ட்டல் மூலம் அப்பாயிண்ட்மெண்ட் பெற்று தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்ற விதி இருந்தது. எனினும், இந்த விதியை இப்போது மத்திய சுகாதார அமைச்சகம் மாற்றிவிட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.