New Announcement | புதிய ₹500 நோட்டுகள் குறித்து ஆர்பிஐ புதிய அறிவிப்பு!

Reserve Bank of India Latst News: ₹500 நோட்டுகள் சார்ந்து ஆர்பிஐ சார்பில் புதிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதுசார்ந்த விவரங்களை தெரிந்துக்கொள்ளுங்கள். 

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 25, 2024, 09:56 AM IST
New Announcement | புதிய ₹500 நோட்டுகள் குறித்து ஆர்பிஐ புதிய அறிவிப்பு!  title=

Rs 500 Notes New Rules: நாடு முழுவதும் கரன்சி நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் கொண்டு வருவதற்கு இந்திய ரிசர்வ் வங்கிக்கு முழு அதிகாரம் உள்ளது. நோட்டுகள் மற்றும் நாணயங்களின் புழக்கமும் வினியோகமும் இந்திய ரிசர்வ் வங்கியால் செய்யப்பட்டு வருகிறது. 

இந்திய ரிசர்வ் வங்கியின் உத்தரவு

இத்தகைய சூழலில் ரிசர்வ் வங்கி அவ்வப்போது பல்வேறு வகையான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மேலும் புதிய நோட்டுகளை வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் தற்போது இந்திய ரிசர்வ் வங்கி புதிய உத்தரவை போட்டுள்ளது.

ஆர்பிஐ புதிய வழிகாட்டுதல்கள் 2024

சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி ₹500 நோட்டுகளுக்கான புதிய வழிகாட்டுதல்கள் 2024 வெளியிட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய விதிகளின் படி, பழைய கிழிந்த ₹500 நோட்டுகள் அனைத்து வாடிக்கையாளர்கள் தங்கள் நகரின் ரிசர்வ் வங்கி கிளையை தொடர்பு கொண்டு மாற்றிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

புதிய நோட்டுகள் வெளியீடு

சில ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அரசாங்கம் நாட்டில் புழக்கத்தில் இருந்த ₹500 மற்றும் ₹1000 நோட்டுகளை தடை செய்தது. அதற்கு பதிலாக புதிய ₹2000 மற்றும் ₹500 நோட்டுகளை வெளியிட்டது. 

₹2000 நோட்டுகளுக்கு தடை

ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக ₹2000 நோட்டுகளை தடை செய்யப்பட்டன. தற்போது ₹500 நோட்டு புழக்கத்தில் இருந்து வருகிறது. அதன்படி இந்தியாவில் ₹500 நோட்டுகள் மட்டுமே அதிகபட்ச ரூபாய் நோட்டாக உள்ளது.

கிழிந்த, சிதைந்த ரூபாய் நோட்டை மாற்றிக்கொள்ளலாம்

இந்த நோட்டுகள் கிழிந்தோ அல்லது சிதைந்திருந்தாலோ ரிசர்வ் வங்கியை தொடர்பு கொண்டு மாற்றிக் கொள்ள முடியும். இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின் படி, நோட்டுகளை மாற்ற விரும்பக்கூடிய அனைத்து நுகர்வோரும் பின்வரும் கூடிய முக்கிய அம்சங்களை மனதில் கொள்ள வேண்டும்.

ரூபாய் நோட்டை மாற்றுவதற்கு முன் நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டியது

நீங்கள் மாற்ற விரும்பக்கூடிய நோட்டில் ரிசர்வ் வங்கி ஆளுநரின் கையொப்பம் தெளிவாக இருக்க வேண்டும். நோட்டில் எண் தெளிவாக இடம் பெற்றிருக்க வேண்டும். உறுதிமொழி விதி ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும். நோட்டில் அசோகத்தூர் அல்லது மகாத்மா காந்தி சிலை இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

மேலும் படிக்க - 10 ரூபாய் நாணயம், 100 ரூபாய் நோட்டு செல்லுமா? செல்லாத? ரிசர்வ் வங்கி எச்சரிக்கை!

மேலும் படிக்க - இந்திய ரூபாய் மதிப்பு அதிகமாக உள்ள நாடுகள் என்ன என்ன தெரியுமா?

மேலும் படிக்க - எழுதினால் ரூபாய் நோட்டுகள் செல்லாது? - உண்மையை தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News