கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாட்டு மக்களை பாடாய் படுத்தி வருகின்றது. பல மாநிலங்களில் ஒற்றை நாள் தொற்றின் அளவு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு உள்ளது. தமிழகத்திலும் தொற்றின் அளவு மிக அதிகமாகவே உள்ளது.
இதனால் கடந்த மே 1 ஆம் தேதியில் இருந்து 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி (Corona Vaccine) செலுத்தப்பட்டு வருகிறது. ஒரு தடுப்பு மருந்து குப்பியை திறக்கும்பட்சத்தில் 10 பேருக்கு அதனை செலுத்த முடியும். ஒரு குப்பியை திறந்து குறிப்பிட்ட நேரத்திற்குள் 10 பேருக்கு செலுத்தவில்லை எனில், மீதமுள்ள மருந்து வீணாகி பயன்படுத்த முடியாமல் போகிறது. அந்தவகையிள் தற்போது நாடு முழுவதும் அதிக அளவில் கொரேனாா தடுப்பூசிகளை வீணடிப்பதில் தமிழகம் (Tamil Nadu) மூன்றாம் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் இதுவரை 15.5 சதவிகிதம் தடுப்பூசிகள் வீணடிக்கப்பட்டிருக்கிறது.
ALSO READ | உயிரிழந்த பத்திரிகையாளர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்
அடுத்ததாக தடுப்பூசி வீணடிப்பில் முதல் இரண்டு இடங்களில் ஜார்க்கண்ட் , சத்தீஸ்கர் மாநிலங்கள் உள்ளன. இதில், ஜார்க்கண்ட்டில் 30.2 சதவிகிதம் தடுப்பூசிகளும், சத்தீஸ்கரில் 37.3 சதவிகிதம் தடுப்பூசிகளும் வீணடிக்கப்பட்டுள்ளன. இந்த வரிசையில் அதிகபட்சமாக ஜார்க்கண்ட் மாநிலம் 37.3 சதவீத தடுப்பூசிகளை வீணடித்து முதலிடத்தில் உள்ளது. அதற்கு இடங்களில் சட்டீஸ்கர் ( 30.2 சதவீதம்), தமிழகம் (15.5 சதவீதம்), ஜம்மு - காஷ்மீர் (10.8 சதவீதம்), மத்திய பிரதேசம் (10.7 சதவீதம்) ஆகிய மாநிலங்கள் அதிகமாக தடுப்பூசிகளை வீணடித்துள்ளன.
States have been urged repeatedly to keep vaccine wastage below 1%, many States like Jharkhand (37.3%), Chhattisgarh (30.2%), Tamil Nadu (15.5%), Jammu & Kashmir (10.8%), Madhya Pradesh (10.7%) are reporting much higher wastage than the national average (6.3%): Ministry of Health
— ANI (@ANI) May 26, 2021
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR