Covaxin Myth Busted: பாரத் பயோடெக்கின் கோவாக்சினில் புதிதாகப் பிறந்த கன்றுக்குட்டி சீரம் (விலங்கின் உடலில் இருக்கும் நீர்த்த பகுதி) இருப்பதாக சமூக ஊடகங்களில் வரும் செய்திகளை புதன்கிழமை (ஜூன் 16) மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்தது.
ஒரு அறிக்கையில், மத்திய சுகாதார அமைச்சகம் (Health Ministry) இதுபோன்ற செய்திகளை கடுமையாக மறுத்து, "உண்மைகள் மாற்றப்பட்டு தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளது.
புதிதாகப் பிறந்த கன்றுக்குட்டியின் சீரம் வெரோ செல்களைத் தயாரிக்கவும் வளர்ப்பதற்கும் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. பல்வேறு வகையான போவின் மற்றும் பிற விலங்கு சீரம் ஆகியவை வெரோ செல் வளர்ச்சிக்கு உலகளவில் பயன்படுத்தப்படும் நிலையான செறிவூட்டல் மூலப்பொருள் ஆகும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.
“தடுப்பூசிகளின் (Vaccines) உற்பத்திக்கு உதவும் உயிரணுக்களை உருவாக்க வெரோ செல்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த நுட்பம் பல தசாப்தங்களாக போலியோ, ரேபிஸ் மற்றும் இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசிகளில் பயன்படுத்தப்படுகிறது. " என்று அமைச்சக அறிக்கை மேலும் தெரிவித்துள்ளது.
ALSO READ: ₹150 என்ற விலை கட்டுபடியாகாது; மத்திய அரசு அதிகரிக்க வேண்டும்: Bharat Biotech
இந்த செயல்முறையை மேலும் விளக்கிய, சுகாதார அமைச்சகம், “இந்த வெரோ செல்கள், வளர்ச்சிக்குப் பிறகு, தண்ணீர் கொண்டும், ரசாயனங்கள் கொண்டும் (தொழில்நுட்ப ரீதியாக பஃபர் என்றும் அழைக்கப்படுகின்றன) கழுவப்படுகின்றன. புதிதாகப் பிறந்த கன்றுக்குட்டியின் சீரத்தை நீக்க இவ்வாறு செய்யப்படுகின்றது. அதன்பிறகு, இந்த வெரோ செல்களில் வைரஸ் வளர்ச்சிக்கு கொரோனா வைரஸ் செலுத்தப்படுகின்றது." என்று தெரிவித்துள்ளது.
இறுதிகட்ட தடுப்பூசி தயாரிப்பில், கன்றுக்குட்டியின் சீரம் இல்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெளிவாக தெரிவித்துள்ளது. வைரஸ் வளர்ச்சியின் செயல்பாட்டில் வெரோ செல்கள் முற்றிலும் அழிக்கப்படுகின்றன. அதன்பிறகு இந்த வளர்ந்த வைரஸும் கொல்லப்பட்டு (செயலிழக்கச் செய்யப்பட்டு) சுத்திகரிக்கப்படுகிறது. கொல்லப்பட்ட இந்த வைரஸ் பின்னர் இறுதி தடுப்பூசி தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றது.
மேலும் இறுதி தடுப்பூசி உருவாக்கத்தில் கன்றுக்குட்டியின் சீரம் பயன்படுத்தப்படுவதில்லை. ஆகையால் இறுதியாக உருவாக்கப்படும் தடுப்பூசியில் (கோவாக்சின்) புதிதாகப் பிறந்த கன்றுக்குட்டியின் சீரம் இல்லை. கன்றுக்குட்டியின் சீரம் இறுதிகட்ட தடுப்பூசி உற்பத்தியின் ஒரு மூலப்பொருளும் அல்ல, ”என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கோவாக்சின் (Covaxin) ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட பாரத் பயோடெக் உருவாக்கிய ஒரு உள்நாட்டு COVID-19 தடுப்பூசி ஆகும்.
ALSO READ: COVID தடுப்பூசி பக்க விளைவால் ஒருவர் உயிர் இழப்பு: உறுதி செய்தது அரசு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR