தமிழ் திரையுலக நடிகர் ஹரீஷ் கல்யாண், தான் தடுப்பூசி செலுத்திக்கொண்ட படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். அனைவரும் சென்று தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தனது பதிவில் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில், தமிழ்நாட்டில் 34,875 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். தமிழகத்தில் கொரோனா தொற்றால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,99,225 ஐ எட்டியுள்ளது
மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் ட்வீட் செய்து, கருப்பு பூஞ்சை பற்றிய தகவல்களை அளித்தார். இந்த நோயின் விவரங்கள், யாருக்கெல்லாம் இதற்கான ஆபத்து உள்ளது, கருப்பு பூஞ்சையின் அறிகுறிகள் என்ன, நோயைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று விளக்கியுள்ளார்.
கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக குடும்ப உறுப்பினர்களை இழந்த குடும்பங்களுக்கு 50,000 ரூபாய் நிதி இழப்பீடு வழங்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஸ்பூட்னிக்-வி-யின் முதல் தொகுப்பு (சுமார் 1.5 மில்லியன் டோஸ்) மே 1 அன்று இந்தியாவை அடைந்தது. கடந்த வாரம் தடுப்பூசி விலையை வெளியிட்ட டாக்டர் ரெட்டீஸ் ஆய்வகம், மே 13 அன்று கசவுலி மத்திய மருந்து ஒழுங்குமுறை நிறுவனத்தால் இந்த தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று கூறியிருந்தது.
சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தனின் தலைமையில் திங்களன்று நடைபெற்ற கோவிட் -19 உயர் மட்ட அமைச்சரவைக் குழுவின் 26 வது கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
கொரோனா வைரஸின் இரண்டாவது அலையின் பிடியில் நாடு சிக்கியுள்ளது. கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது, இந்த வாரம் நோய்த்தொற்றின் எண்ணிக்கையில் வீழ்ச்சி காணப்பட்டாலும், ஆபத்து இன்னும் முழுமையாக விலகவில்லை. எனவே எச்சரிக்கையும் விழிப்புணர்வும் மிக முக்கியம்.
ஸ்புட்னிக் தடுப்பூசியின் முதல் டோஸ் இந்தியாவில் வெள்ளிக்கிழமை செலுத்தப்பட்டது என்று அந்த மருந்தை இந்தியாவில் இறக்குமதி செய்யும் டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் கூறியுள்ளது.
கேரளா, ஒடிசா, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், மேற்கு வங்கம், தமிழ்நாடு, புதுச்சேரி, அசாம் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கையின் போக்கில் உயர்வைக் காண முடிகிறது என்று அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
கோவிஷீல்ட் தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாவது டோசுக்கு இடையிலான கால அளவு மாற்றப்பட்டுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் வியாழக்கிழமை செய்தியாளர் சந்திப்பில் இதை அறிவித்துள்ளது.
அதிகரித்து வரும் தொற்று எண்ணிக்கைக்கு மத்தியில் கொரோனா தடுப்பு பணிகளுக்கு நிதி வழங்குங்கள் என்று வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சி தலைவர் ஆதிஷி, கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் என இரு தடுப்பூசிகளின் டோஸ்களையும் மத்திய அரசு டெல்லி அரசாங்கத்திற்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். அப்படி நடக்கவில்லை என்றால், தடுப்பூசி செயல்முறையை நிறுத்த வேண்டியிருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
சடலங்கள் உத்தர பிரதேசத்திலிருந்து வந்திருக்கலாம் என்று பக்சர் நிர்வாக அதிகாரிகள் நம்புகின்றனர். இருப்பினும், கங்கைக் கரையில் அமைந்துள்ள பிற கிராமங்களைச் சேர்ந்தவர்கள் சடலங்களை ஆற்றில் வீசியதாக உள்ளூர்வாசிகள் கூறினர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.