‘இந்த’ 5 கெட்ட பழக்கம் இருந்தால்..எவ்வளவு முயற்சி செய்தாலும் முன்னேற முடியாது!

Bad Habits Will Never Help You Grow : நம்மில் பலருக்கு வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், நம்மிடம் இருக்கும் கெட்ட பழக்கங்கள் நம்மை முன்னேற விடாமல் தடுக்கும். அவை குறித்து இங்கு பார்ப்போம்.   

Written by - Yuvashree | Last Updated : Nov 24, 2024, 05:40 PM IST
  • முன்னேற்றத்தை கெடுக்கும் 5 தீய பழக்கங்கள்
  • இன்றே விட்டொழியுங்கள்..
  • அவை என்னென்ன தெரியுமா?
‘இந்த’ 5 கெட்ட பழக்கம் இருந்தால்..எவ்வளவு முயற்சி செய்தாலும் முன்னேற முடியாது! title=

Bad Habits Will Never Help You Grow : யாருக்குதான் வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற ஆசை இருக்காது? வாழ்க்கை மேம்பட வேண்டும் என்றால், நாம் சில ஹெல்தியான விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். ஆனால், நாம் என்னதான் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும், சில கெட்டப்பழக்கங்கள் இருந்தால், நம்மால் முன்னேறவே முடியாது. அவை என்னென்ன தெரியுமா? 

1.வேலையை தள்ளிப்போடுதல்:

முக்கியமாக இருக்கும் ஏதேனும் ஒரு விஷயத்தை, அல்லது வேலையை பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என தள்ளிப்போடுவது, சோம்பேறித்தனத்தின் அறிகுறிகளுள் ஒன்று. இது, கடைசி நேரத்தில் வேலையை முடிக்கும் நிலைக்கு உங்களை கொண்டு சென்றுவிடும். கூடவே பதற்றம், மற்றும் செய்த வேலையை சரியாக செய்ய முடியாதை நிலையையும் இது ஏற்படுத்தும். இதை தவிர்க்க, பெரிய வேலையை சிறிது சிறிதாக செய்து முடிக்கலாம். கொடுக்கப்பட்டிருக்கும் காலக்கெடுவிற்கு சில நாட்களுக்கு முன்னர் நீங்கள் ஒரு காலக்கெடுவை வைத்து அதற்கு அந்த வேலையை செய்து முடிக்கலாம். 

2.பிறரை குறை கூறுதல்:

ஒரு சிலர், தாங்கள் செய்த தவறுக்கு கூட, பிறரை பொறுப்பேற்க சொல்வர். தனது தோல்விக்கு காரணம் வேறு யாரோ என்று நினைத்துக்கொள்ளும் இவர்கள், தான் தான் அந்த பிரச்சனை என்பதை அறிந்து கொள்வதே இல்லை. இதனால், தாங்கள் என்ன தவறு செய்கிறோம் என்பது கூட அவர்களுக்கு தெரியாது. இதனால், தற்போது எந்த நிலையில் இருக்கின்றனரோ, அந்த நிலையில் இருந்து அவர்களால் வளரக்கூட முடியாது. எனவே, இது போன்ற பழக்கம் உங்களுக்கும் இருந்தால், உங்கள் வாழ்வில் நடக்கும் விஷயங்களை சரிசெய்ய, சாவி உங்கள் கையில்தான் இருக்கிறது என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்.

3.மாற்றம் குறித்த பயம்:

ஒரு சிலர், தங்கள் வாழ்வில் புதிய விஷயங்களை விரும்பவே மாட்டார்கள். இவர்களுக்கு தானும், தன்னை சுற்றி இருக்கும் விஷயமும் அப்படியே இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இவரால், தனது comfort zone-ஐ விட்டு வெளியவே வர முடியாது. இதனால், தனது தொழில் வாழ்க்கையிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் முன்னேறாமலேயே இருந்து விடுகின்றனர். இப்படிப்பட்டவர்கள், புதிய மாற்றங்களினால் வரும் ஆபத்துகளை விரும்புவதில்லை. இதை தவிர்க்க, முதலில் சின்ன சின்ன மாற்றங்களை தங்களுக்குள் தாங்களே ஏற்படுத்திகொள்ள வேண்டும். 

மேலும் படிக்க | ஆண்கள் vs பெண்கள்: இருவரில் நன்றாக தூங்குவது யார்? ரிப்போர்ட்!

4.சுய ஒழுக்கமின்மை:

சுய ஒழுக்கம் என்பது அனைவருக்கும் அவசியமான ஒன்று. இது இருந்தால்தான் நம்மால், சரியான விஷயத்தை, சரியான நேரத்தில் அடைய முடியும். இது, ஃபிட்னஸ் ஆக இருந்தாலும் சரி, தொழிலில் முன்னேற வேண்டுமென்று நினைத்தாலும் சரி, எதுவாக இருந்தாலும் சுய ஒழுக்கம் அவசியம். இதற்கு தினசரி இலக்குகள், அடையக்கூடிய இலக்குகள் ஆகியவற்றை எட்ட உதவும். 

5.சிறிய மகிழ்ச்சிகளை தேடுவது:

ஒரு சிலர், சின்ன சின்ன மகிழ்ச்சிகலுக்காக பெரிய பெரிய இலக்குகளை கோட்டை விட்டுவிடுவோம். இதனால், நம் நேரம் வீணாவதோடு, நம்மை தேடி வரும் வாய்ப்புகளை இழந்து விடுவோம். இந்த பழக்கத்தில் இருந்து விடுபட, உங்களுக்கு நிரந்தர மகிழ்ச்சியை கொடுக்கும் விஷயங்களை மட்டும் வாழ்வில் பின்பற்ற வேண்டும். உங்களுக்கு இன்ஸ்டண்ட் ஆக மகிழ்ச்சியை கொடுக்கும் விஷயங்களுக்கான நேரத்தை குறைத்துக்கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க | உங்கள் திருமண உறவை காப்பாற்ற 80/20 ரூல்ஸ் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News