தற்போது, இந்தியாவில் ஏழு நிறுவனங்கள் சேர்ந்து 38.80 லட்சம் ரெம்டெசிவிர் டோஸ்களை உற்பத்தி செய்கின்றன. மேலும் ஏழு தளங்களில் 6 நிறுவனங்கள் மூலம் 10 லட்சம் டோஸ் கூடுதலாக உற்பத்தி செய்ய அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.
தற்போது கொரோனாவின் தாக்கமும், பாதிப்பும் அதிகரித்துள்ள நிலையில், இன்னும் ஆறே மாதத்திற்குள் மேலும் 5 தடுப்பூசிகள் புழக்கத்திற்கு வந்துவிடும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன
கொரோனாவின் தாக்குதலில் இருந்து தப்புவதற்காக தடுப்பூசி வந்துவிட்டாலும், அனைவருக்கும் உடனடியாக போட முடியாமல், முன்னுரிமை உட்பட பல தகுதிகளின் அடிப்படையில் நோய் தடுப்பு சக்தி மக்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் ஐபிஎல் போட்டிகளை நடத்துவதில் பிரச்சனை இருக்குமா என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளன. ஐ.பி.எல் போட்டிகளில் கலந்துக் கொள்ளும் கிரிக்கெட் வீரர்களுக்கு தடுப்பூசி போட இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக பி.சி.சி.ஐ (BCCI) பொருளாளர் துமால் தெரிவித்தார்.
கொரோனா இருப்பதாக கண்டறியப்பட்ட இரண்டு கொரில்லாக்களுக்கும் (gorillas) கடந்த ஒரு வாரமாக இருமல் இருந்தது. அதன் பிறகு விலங்குகளுக்கு COVID-19 பரிசோதனைகளை செய்யலாம் என சுகாதார நிபுணர்கள் முடிவு செய்தனர்.
பசிபிக் பகுதியில் அமைந்துள்ள வைரஸ் இல்லாத பலாவ் (Palau) நாடு, COVID-19 க்கு எதிராக தடுப்பூசி போடப்பட்ட முதல் நாடாக மாறக்கூடும். மேற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள நாடு பலாவ் குடியரசு. இங்கு சுமார் 18,000 மக்கள் தொகை வசிக்கின்றனர். கொரோனா வைரஸ் பாதிப்பு ஒன்றுகூட பதிவாகாத நாடு இது. அதேபோல், கொரோனா வைரஸுக்கு (Coronavirus) எதிராக தடுப்பூசி போட்ட முதல் நாடுகளில் இதுவும் ஒன்றாகும்.
தொற்றுநோயை ஏற்படுத்தும் கொரோனா வைரஸை ஜூலை மாதத்திற்குள் முடிவுக்கு கொண்டு வந்துவிடலாம் என்று அமெரிக்க நிபுணர் ஒருவர் கூறுகிறார். அதற்கு ஒரே ஒரு நிபந்தனை மட்டும் தான் என்றும் அவர் சொல்கிறார்… அவர் சொல்லும் நிபந்தனை என்ன தெரியுமா?
கொரோனா வைரஸ் தாக்கத்தால் பிற நோய்களுக்கான தடுப்பூசிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், போலியோ போன்ற பிற கொடிய நோய்களால் உலகெங்கிலும் உள்ள குழந்தைகள் உயிர் அபாயத்தில் உள்ளது என உலக சுகாதார அமைப்பு திங்களன்று எச்சரித்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.