Who is Kalpana Murmu Soren: வெறும் 250 நாட்களில் கல்பனா ஜார்க்கண்டின் பிரபலமான அரசியல் தலைவியாக மாறினார். ஜார்க்கண்டில் எதிர்க்கட்சிகளின் வியூகங்களை தவிடு பொடியாக்கி அனல் பறக்கும் பரப்புரையால் மீண்டும் தனது கணவரை முதலமைச்சர் அரியணையில் அமர வைத்துள்ளார் கல்பனா சோரன் அவர் குறித்து பார்க்கலாம்.
நாடே வியந்து பார்க்கும் பெண்மணி
2019-இல் முதலமைச்சராக ஹேமந்த் சோரன் பதவி ஏற்ற சில நாட்களில் வெளியான படத்தில் கணவரின் அருகே மிக எளிமையாக அமர்ந்திருந்த கல்பனா சோரன் இன்று நாடே வியந்து பார்க்கும் பெண்மணியாக உருவெடுத்துள்ளார்.
கல்பனா சோரன் அரசியலுக்கு வர காரணம்
அரசியல் பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் மருமகளாக வந்தாலும் அரசியல் பக்கம் தலைகாட்டாமல் இருந்த கல்பனாவை ஜார்க்கண்ட் அரசியலின் ஆணி வேறாக மாற்றியது காலமும் சூழலும்.
ஹேமந்த் சோரனை கைது செய்த அமலாக்கத்துறை
ஹேமந்த் சோரனின் ஆட்சி நான்கு ஆண்டுகளைக் கடந்து தேர்தலை எதிர்நோக்கி இருந்த நிலையில், திடீரென அமலாக்கத் துறையால் அவர் கைது செய்யப்பட்டார். தலைவனை இழந்த கூட்டம் சிதறிவிடும் என எதிர்தரப்பு கணக்கு போட்டுக் கொண்டிருந்த வேளையில் அதிரடியாக அரசியலில் களம் புகுந்தார் கல்பனா சோரன்.
சம்பாய் சோரனுக்கு முதலமைச்சர் பதவி
ஹேமந்த் சோரன் சிறை சென்றபோது அவரது மனைவி கல்பனா முதலமைச்சர் ஆவார் எனக் கூறப்பட்ட நிலையில், ஒடிசாவை பூர்வீகமாகக் கொண்டவர் ஜார்க்கண்டில் முதலமைச்சர் ஆவதா என்ற குரல் ஒருபுறம் எழுந்தது. இதனால் முதலமைச்சர் பதவி சம்பாய் சோரனுக்கு வழங்கப்பட்டது.
கட்சியை கையில் எடுத்த கல்பனா சோரன்
முதலமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்றால் என்ன? கட்சி தான் முக்கியம் என தனது கணவர் சிறையில் இந்த போது கட்சியின் பொறுப்பை கையில் எடுத்தார். கணவர் ஹேமந்த் சோரனின் முகமாக தேர்தல் களத்தில் கம்பீரமாக எதிரொளித்தார். பொறியியல் பட்டதாரியான கல்பனா அரசியல் களத்தில் பொறிபரக்க மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
முதல் முறையாக தேர்தலில் போட்டி
அப்போது நடந்த காண்டே தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட கல்பனா சோரன் 27,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக சட்டப்பேரவைக்குள் அடியெடுத்து வைத்தார்.
மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதே கனவு
அதன் பின்னர் ஹேமந்த் சோரன் பிணையில் வெளிவந்து முதலமைச்சர் ஆனவுடன், இடைக்காலத்தில் முதலமைச்சராக இருந்த சம்பாய் சோரன் திடீரென பாஜகவில் இணைந்தார். இனி ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி ஆட்சியை பிடிப்பது கஷ்டம் மற்றும் பழங்குடி மக்களின் வாக்குகள் பிரியும் என பேசப்பட்டது. ஆனால் மறுபுறம், மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதே தங்களின் கோல் என களம் இறங்கினர் ஹேமந்த் கல்பனா தம்பதினர்.
ஹெலிகாப்டர் மேடம் என விமர்சனம்
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறிய கல்பனா சோரன் சட்டப்பேரவைத் தேர்தலின் போது நாள் ஒன்றுக்கு ஐந்து பொதுக்கூட்டங்கள் வீதம் பங்கேற்று மாநிலம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார். இதனை பார்த்த எதிர்கட்சி பாஜகவினர் கல்பனா சோரனை ஹெலிகாப்டர் மேடம் என்றும் விமர்சித்தனர்.
பெண்களை ஈர்த்த கல்பனா சோரன்
இவரது பேச்சு அரசியல் உரைகளாக அல்லாமல் பழங்குடி பெண்களை ஈர்க்கும் வகையில் எளிமையாக இருந்தது. இறுதிக்கட்ட பரப்புரை காலத்தில் கல்பனாவின் ஹெலிகாப்டருக்கு அனுமதி மறுக்கப்பட்டபோது, செல்போன் மூலமாக கூட்டத்தில் உரையாற்றி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
காண்டே தொகுதியில் மீண்டும் வெற்றி
தற்போது காண்டே தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்று எம்எல்ஏ பதவியை தக்க வைத்துள்ளார். கணவர் ஹேமந்த் சோரன் மீண்டும் ஆட்சியில் அமர்வது மட்டுமல்ல, ஜார்க்கண்ட் வரலாற்றில் முதல் முறையாக ஆளும் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்வதற்கும் முக்கிய காரணியாக மிளிர்கிறார் கல்பனா சோரன்.
ஜார்க்கண்டின் சிங்கப்பெண்
அரசியலில் நுழைந்த சில மாதங்களிலேயே புயல் போல ஜார்க்கண்ட் அரசியல் வரலாற்றை புரட்டி போட்டு ஜார்க்கண்டின் சிங்கப்பெண்ணாக வளம் வருகிறார் கல்பனா சோரன்.
ஜார்க்கண்ட் தேர்தல் முடிவுகள் 2024
ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரனின் கட்சி பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. மாநிலத்தில் மொத்தம் 56 இடங்களில் ஜேஎம்எம் தலைமையிலான இந்திய கூட்டணி வெற்றி பெற்றது. இதில் மைனா சம்மான் யோஜனா (Maina Samman Yojana) மிகப்பெரிய பங்களிப்பாக கருதப்படுகிறது.
மேலும் படிக்க - யார் இந்த ஹேமந்த் சோரன்? பாஜகவை ஜார்க்கண்டில் அலறி ஓட விட்டவர்..
மேலும் படிக்க - எங்கள் ஆட்சிக்காலத்தில் தவறு செய்துவிட்டோம்... ராகுல் காந்தி சொல்வது என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ