தேசிய தலைநகரில் செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய சுகாதார அமைச்சின் இணைச் செயலாளர் லவ் அகர்வால், "அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும்" என்றார்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிட் -19 தடுப்பூசி கோவாக்ஸினுக்கான அவசர பயன்பாட்டு அங்கீகாரத்தை (EUA) உலக சுகாதார நிறுவனம் அக்டோபர் மாதம் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பலர் ஊசி போட்டுக்கொள்ள பயந்து தடுப்பூசி மையங்களுக்கு செல்லாமல் தவிர்க்கிறார்கள். அப்படி, ஊசி போட்டுக்கொள்ள அஞ்சி நடுங்கும் ஒருவருடைய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் நிலை பற்றியும், எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் தமிழக சுகாதாரச் செயலர் அனைத்து ஆட்சியர்கள் மற்றும் சென்னை மாநகராட்சிக்கு செய்தி அனுப்பியுள்ளார்.
தமிழகத்தில் 20 லட்சம் தடுப்பூசிகளை நாளொன்றுக்கு போட வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அது தற்போது போடப்படும் தடுப்பூசி எண்ணிக்கையை விட மூன்று மடங்கு அதிகமாகும்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குநர் பல்ராம் பார்கவா எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா தொற்றால் இன்னும் ஆபத்து உள்ளது என்றும், அனைவருக்கும், முகக்கவசங்களும் தடுப்பூசியும் மிகவும் அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்
தமிழ்நாட்டில் ஒரு நகரத்தில் வாழும் அனைத்து மக்களுக்கும் கோவிட் தடுப்பூசியின் முதல் டோஸ் வெற்றிகரமாக போடப்பட்டுள்ளது. அந்த பெருமைக்குரிய நகரம் எது தெரியுமா?
நிபுணர்களுடனான ஆலோசனையின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு தற்போதுள்ள கோவிட் -19 கட்டுப்பாடுகளை செப்டம்பர் 15 வரை நீட்டித்துள்ளது. அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத ஊழியர்களின் மாத ஊதியத்தில் இருந்து 15 ஆயிரம் ரூபாய் பிடித்தம் செய்யப்படும் என்று அமெரிக்காவை சேர்ந்த டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனாவிலிருந்து பாதுகாக்க சில தடுப்பூசிகள் ஒற்றை டோஸே போதும் என்றால், சில தடுப்பூசிகள் இரண்டு டோஸ்கள் போட்டுக் கொள்ள வேண்டும்.ஆனால், சிலருக்கு மூன்று டோஸ்கள் தடுப்பூசி போட வேண்டும் என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...
கடந்த 100 ஆண்டுகளாக காசநோய்க்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் பிசிஜி தடுப்பூசி கோவிட் -19 நோய்த்தொற்றின் அபாயத்தைத் தடுக்க உதவும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது
கொரோனாவுக்கு எதிரான போரில் அடுத்த கட்ட முன்னேற்றமாக, கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய இரண்டு தடுப்பூசிகளையும் கலந்து பயன்படுத்துவது குறித்து அரசாங்கம் ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.