Who Pays The Loan After A Borrower's Death: வங்கியிலோ அல்லது நிதி நிறுவனதிடம் இருந்து கடன் வாங்கியவர் ஒருவேளை இறந்துவிட்டால் அந்த கடனுக்கு யார் பொறுப்பு? அந்த கடனை யார் திருப்பி செலுத்த வேண்டும்? அல்லது கடனை செலுத்த வேண்டாமா? அந்த கடன் தள்ளுபடி செய்யப்படுமா? போற்ற தகவல்கள் குறித்து அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியம். அதுக்குறித்து பார்ப்போம்.
எளிதாக கிடைக்கும் கடன் வசதி
தற்போது டிவி, பிரிட்ஜ் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களில் இருந்து கார், வீடு வாங்குவது வரை கடன் வசதி எளிதாக கிடைக்கின்றது. தங்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் கடனில் வாங்கலாம். அதேநேரம் கடனை திருப்பி செலுத்தும் திறன் உங்களிடம் இருக்க வேண்டும்.
எத்தனை வகை கடன்கள் கிடைக்கிறது?
தனி நபர் கடன், வீட்டுக் கடன் மற்றும் கார் கடன் என பல கடன்கள் வழங்கப்படுகின்றது. நமது தேவைக்கேற்ப இந்த கடன்களை தேர்வு செய்யலாம். மாதாந்திர இஎம்ஐகள் மூலம் தவனை முறையில் கடனை அடைக்கலம்.
கடன் வாங்கியவர் மரணம் அடைந்தால்? கடன் என்னவாகும்?
ஒருவேளை கடனை திருப்பிச் செலுத்துவதற்கு முன்பே கடன் வாங்கியவர் மரணம் அடைந்தால், அந்த கடன் என்னவாகும்? அதற்கு யார் பணம் செலுத்த வேண்டும்? உங்களுக்காக கடன் வாங்கியவர் இறந்துவிட்டால் கடனுக்கு யார் பொறுப்பு? போன்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
கடன் விதிமுறைகள்
அதாவது நிறுவனங்கள் வழங்கும் வெவ்வேறு கடன்களின் கொள்கைகள் மற்றும் விதிகள் வேறுபட்டுள்ளன. சில சமயங்களில் கடன் வாங்கியவரின் வாரிசு அல்லது இணைக்கடன் வாங்கியவர் நிலுவைத்தொகையை செலுத்த வேண்டும். சில கடன்களில் வங்கி அல்லது நிதி நிறுவனம் விதிமுறைகளின் படி பணம் செலுத்த ஏற்பாடு செய்கின்றது.
வீட்டுக் கடனை திருப்பி செலுத்த வேண்டுமா?
வீட்டுக் கடன் திருப்பி செலுத்தும் விதிப்படி பார்த்தால், வீட்டுக் கடனில் வீட்டின் சொத்தை வங்கியில் அடமானம் வைக்கப்படுகிறது. கடன் வாங்கியவர் இறந்துவிட்டால் நிலுவையில் உள்ள கடனை கடன் வாங்கியவர் அல்லது குடும்பத்தின் வாரிசு செலுத்த வேண்டும்.
வீட்டை விற்பதன் மூலம் கடனை அடைப்பதற்கான வழியும் வழங்கப்படுகின்றது. பெரும்பாலான வங்கிகள் மூலம் வீட்டுக் கடன் காப்பீட்டு வழங்குகின்றன. கடன் வாங்கியவர் இறந்துவிட்டால் மீதமுள்ள தொகை காப்பீட்டு கோரிக்கை மூலம் திருப்பி செலுத்தப்படும்.
தனிநபர் கடனை திருப்பி செலுத்த வேண்டுமா?
தனிநபர் கடன் திருப்பி செலுத்தும் விதிகள் என்னவென்றால், தனிநபர் கடன்களில் விதி வேறுபட்டது. தனிநபர் கடன் என்பது மிக ஆபத்துள்ள கடன்தான். எனவே கடன் வாங்கியவர் இறந்துவிட்டால், அவருடன் சேர்ந்து அந்த கடனும் ரத்து செய்யப்படும். அதாவது கடன் வாங்கியவரின் வாரிசு அல்லது வேற எவரும் கடனை அடைக்க வேண்டியதில்லை.
கிரெடிட் கார்டு கடனை திருப்பி செலுத்த வேண்டுமா?
தனி நபர் கடனை போலவே கிரெடிட் கார்டு கடன்களும் இதில் அடங்கும். கிரெடிட் கார்டு கடன் வாங்கியவர் இறந்துவிட்டால், கடனை செலுத்தும் பொறுப்பு வாரிசு அல்லது மூன்றாம் தரப்பினருக்கு மாற்றப்படாது. இந்த கடனை வங்கியே திருப்பி செலுத்துகின்றது.
கார் கடனை திருப்பி செலுத்த வேண்டுமா?
கார் லோன் மூலம் தவணை முறையில் கார் வாங்கும் போது கடன் வாங்கியவர் கடனை திருப்பி செலுத்துவதற்கு முன்பே ஒருவேளை மரணம் அடைந்தால், அந்த காருக்கான கடனை இறந்தவரின் குடும்பம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படும். குடும்ப உறுப்பினர்களால் கடனை செலுத்த முடியாத நிலையில் ஏற்பட்டால், அந்த காரை பறிமுதல் செய்து அதன் மூலம் கடனை அடைக்கப்படும்.
வாரிசுகளுக்கு கடன் பொறுப்பை தவிர்ப்பது எப்படி?
ஒரு கடன் வாங்குபவர் தனது கடன் சுமை தனது வாரிசுகளுக்கு வராமல் இருக்க ஒரு திட்டம் உள்ளது. கடன் வாங்கும்போது கடன் வாங்கியவர் காப்பீடு செய்யப்பட வேண்டும். இப்படி செய்தால் அந்த நபர் இறந்தவுடன் கடன் வாங்கியவரின் குடும்பம் கடனை திருப்பிச் செலுத்த வேண்டியதில்லை. காப்பீட்டு பிரீமியத்திலிருந்து நிலுவைத் தொகையை வங்கி மீட்டெடுக்கிறது. ஒவ்வொரு வங்கியிலும் கடன் காப்பீட்டு வசதி உள்ளது.
கடன் காப்பீட்டுத் திட்டங்கள்
நோய், காயம் அல்லது இறப்பு போன்ற எதிர்பாராத சூழ்நிலைகளில் கடனை திருப்பி செலுத்துவதற்கு இந்த காப்பீடு உதவுகிறது.
மேலும் படிக்க - இனி கல்விக்கடன் பெறுவது மிகவும் எளிது! இந்த ஆவணம் இருந்தால் மட்டும் போதும்!
மேலும் படிக்க - ‘இந்த’ 5 கெட்ட பழக்கம் இருந்தால்..எவ்வளவு முயற்சி செய்தாலும் முன்னேற முடியாது!
மேலும் படிக்க - உங்கள் திருமண உறவை காப்பாற்ற 80/20 ரூல்ஸ் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ