சென்னை: கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாட்டு மக்களை பாடாய் படுத்தி வருகிறது. தொற்று பாதித்த மக்களுக்கு ஒரு புறம் அவசர கதியில் சிகிச்சை நடைபெற்று வருகின்றது. அதே வேளையில் மற்றொரு புறம் நோய் தடுப்பு முயற்சியாக தடுப்பூசி செயல்முறையும் முழு முனைப்புடன் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.
இதுவரை கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் (Covishield) தடுப்பூசிகள் நாடு முழுவதும் செலுத்தப்பட்டு வருகின்றன. சமீபத்தில் இந்தியாவில் மூன்றாவது தடுப்பூசியாக ரஷ்ய தடுப்பூசியான ஸ்புட்னிக்-வி அங்கீகரிக்கப்பட்டது. இந்தியாவின் சில பகுதிகளில் ஸ்புட்னிக்-வி மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்திலும் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி மக்களுக்கு கிடைக்கவுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ஜூன் மாதம் முதல் சென்னை உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள அப்போலோ மருத்துவமனைகளில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ரஷ்ய தடுப்பூசியான ஸ்புட்னிக்-வி-க்கு இந்திய அரசு அனுமதி அளித்ததையடுத்து, இதன் முதல் டோஸ் ஹைதராபாதில் போடப்பட்டது. கஸ்டம் ஃபார்மா சர்வீசசின் உலகளாவிய தலைவர் தீபக் சாப்ரா, ஹைதராபாதில் டாக்டர் ரெட்டிஸ் ஆய்வகத்தில் ஸ்புட்னிக் வி (Sputnik V) தடுப்பூசியின் முதல் டோசை இன்று போட்டுக்கொண்டார். இந்தியாவில் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை முதலில் செலுத்திக்கொண்டவர் என்ற பெருமையைப் பெற்றார் தீபக். இதைத்தொடர்ந்து விசாகப்பட்டினத்தில் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.
ALSO READ: இந்தியாவில் முதல் ஸ்புட்னிக் வி ரஷ்ய தடுப்பூசி செலுத்தப்பட்டது: செலுத்திக்கொண்டது யார்?
தற்போது ஸ்புட்னி-வி தடுப்பூசி, ஜூன் இரண்டாவது வாரம் முதல் சென்னை உட்பட பல்வேறு இடங்களில் உள்ள அப்போலோ மருத்துவமனைகளில் செலுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியியுள்ளது.
இது குறித்து அப்போலோ குழும மருத்துவமனைகளின் நிர்வாக துணைத் தலைவர் ஷோபனா காமினேனி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். இதில் அவர் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் இரண்டு கோடி ஸ்புட்னிக்-வி தடுப்பூசி மருந்துகள் வழங்கப்படும் என கூறினார். ஏற்கனவே நாட்டின் பல இடங்களிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் துவங்கி நடைபெற்று வருவதாகவும், ஜூன் மாதம் முதல் இது வேகம் பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஸ்பூட்னிக் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும்
தடுப்பூசி செயல்முறையில் மத்திய மற்றும் மாநில அரசுடன் தொடர்ந்து ஒத்துழைத்து வருவதாக தனியார் துறையின் மிகப்பெரிய தடுப்பூசி நிறுவனமான அப்போலோ குழுமம் தெரிவித்துள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகளோடு, கோவாக்சின் (Covaxin) மற்றும் கோவிஷீல்ட் தயாரிப்பாளர்களுக்கும் அவர்கள் அளித்த ஒத்துழைப்புக்காக ஷோபனா கமினேனி நன்றி தெரிவித்துள்ளார். இந்தியாவில், ஸ்பூட்னிக்-வி தடுப்பூசியை டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் பரிசோதனை செய்துள்ளது. இந்தியாவின் தடுப்பூசி செயல்முறையில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி மே மாத துவக்கத்திலிருந்து செயல்முறையில் உள்ளது. இந்த தடுப்பூசி இந்தியாவில் பெரிய அளவில் தயாரிக்கப்பட உள்ளது.
ALSO READ: Sputnik V தடுப்பூசி மருந்து உற்பத்தி இந்தியாவில் தொடங்கியது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR