இன்றைய வேகமான வாழ்க்கையில், மன அழுத்தம் மற்றும் பதட்டம் ஆகியவற்றால் பாதிக்கப்படாத நபர்களை காண்பது மிகவும் அரிது. பணிச்சுமை, வீட்டுப் பொறுப்புகள் மற்றும் தனிப்பட்ட பிரச்சனைகள் மற்றும் மோசமான வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் ஆகியவை மூளையின் செயல்திறனை பாதித்து, மன ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கின்றன. வாழ்க்கையில், முன்னேறவும், வெற்றிகளை குவிக்கவும், மன ஆரோக்கியம் மிகவும் முக்கியம்.
உடல் ஆரோக்கியம் போலவே, மன ஆரோக்கியம் மிக அவசியம். உங்கள் மனநலம் மோசமடைந்து வருவதை சரியான நேரத்தில் அடையாளம் காண்பது எளிதானது அல்ல. ஆனால் நமது எண்ணங்கள், உபயோகிக்கும் வார்த்தைகள் மற்றும் பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் மூலம் மனநலம் மோசமடைந்து வருவதை அடையாளம் காணலாம், பிரச்சனை மோசமடைவதற்கு முன்பே சிகிச்சையளிப்பதன் மூலம் பல பிரசனைகளை தவிர்க்கலாம். மூளைக்கு உடனடி டீடாக்ஸ் நடவடிக்கை தேவை என்பதைக் குறிக்கும் சில அறிகுறிகளைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
மூளை - மனதில் சேரும் டாக்ஸின்களை நீக்குதல்
மனதில் இருந்து எதிர்மறை எண்ணங்கள் மற்றும் பாதிப்பை உண்டாக்கும் உணர்ச்சிகளை நீக்குவது மூளை மற்றும் மனதை டீடாக்ஸ் செய்வதாகும். மூலையில் ஆற்றலை அதிகரித்து, மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வு ஆகியவற்றிலிருந்து விடுபட உதவும் ஒரு செயல்முறை (Health Tips) இது.
மனநலத்தை மேம்படுத்த டீடாக்ஸ் மருந்து தேவைப்படலாம் என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்
1. மனதில் நிறைந்திருக்கும் எதிர்மறை எண்ணங்கள்
2. உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த இயலாத நிலை.
3. பிறருடன் பேசுவதில், கந்துரையாடுவதில் சிக்கல்
4. தன்னமிக்கை குறைதல்
5. சோர்வு மற்றும் குழப்பம்
மூளையை டீடாக்ஸ் செய்ய நீங்கள் செய்ய வேண்டியவை
தியானம் மற்றும் யோகா பயிற்சி
மூளையையும் மனதையும் டீடாச் செய்ய சிறந்த மற்றும் பயனுள்ள வழிகள் தியானம் மற்றும் யோகா. இதனை தொடர்ந்து பயிற்சி செய்வது மனதை அமைதிப்படுத்தவும், மன அழுத்தத்தை குறைக்கவும் உதவும்.
மனதிற்கு பிடித்தத்தை செய்தல்
உங்களுக்கு பிடித்த பொழுபோக்கு அல்லது மிகவும் பிடித்த செயல்களில் ஈடுபடுவதன் மூலம், மனதில் தோன்றும் தவறான மற்றும் எதிர்மறையான எண்ணங்களை நீக்கலாம். நீங்கள் புத்துணர்ச்சி அடைவீர்கள்.
ஆரோக்கியமான உணவு
ஆரோக்கியமான உணவு ஒரு நபரை உடல் ரீதியாக ஆரோக்கியமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், மன ஆரோக்கியத்தையும் பராமரிக்க முக்கியமானது. எனவே, மன நலம் சார்ந்த பிரச்சனைகளிலிருந்து விடுபட உணவு முறையை மேம்படுத்த வேண்டும்.
மேலும் படிக்க | Osteoporosis: எலும்புகளை சல்லடையாய் துளைக்கும்... சில ஆபத்தான பழக்கங்கள்
போதுமான தூக்கம்
தூக்கமின்மையால், மன அழுத்தம் மற்றும் பதட்டம் ஏற்படுகிறது. எனவே, மன நலத்தை மேம்படுத்தவும், மூளையின் செயல் திறனை அதிகரிக்கவும், தினமும், 7-9 மணி நேரம் தவறாமல் தூங்குங்கள். இது மூளை சிறப்பாக செயல்பட உதவுகிறது.
இயற்கையில் சிறிது நேரம் செலவிடுங்கள்
இயற்கை சூழ்நிலையில், சிறிது நேரம் செலவிடுதல் உங்கள் மனதை அமைதிப்படுத்தவும் எதிர்மறை எண்ணங்களை அகற்றவும் உதவும்.
உதவ முடியும்.
உணர்வுகளை வெளிப்படுத்துதல்
மனதில் தோன்றும் எண்ணங்களை நெருக்கமானவர்களிடம் வெளிப்படுத்துவது மிகவும் முக்கியம்,. உங்கள் உணர்வுகளை உங்களுக்கு நெருக்கமான ஒருவருடன் பகிர்ந்து கொள்ளலாம் அல்லது ஒரு நாட்குறிப்பில் எழுதலாம்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | சுகர் லெவல் முதல் வெயிட் லாஸ் வரை... முளை கட்டிய வெந்தயத்தை அடிக்கடி சாப்பிடுங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ