கொரோனா வைரஸின் மூன்றாவது அலைக்கு தனது அரசாங்கம் தயாராகி வருவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார். இதன் காரணமாக டெல்லிக்கு கூடுதல் தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன என்றும் அவர் மத்திய அரசிடம் கோரியுள்ளார்.
தமிழக சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. பாரபட்சம் இல்லாமல், கொரோனா அனைவரையும் தன் பிடியில் சிக்க வைத்துக்கொண்டிருக்கின்றது.
சென்னையில் மட்டும் நேற்று 6,738 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் சென்னையில் இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,77,042 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்திலேயே சென்னையில்தான் அதிகமானோர் இறந்துள்ளனர்.
ஆன்லைன் கேப் சேவையை வழங்கும் நிறுவனமான ஊபர் (UBER) ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தடுப்பூசி மையத்திற்கு செல்பவர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்க வேண்டாம் என முடிவெடுத்துள்ள இந்த நிறுவனம் இதன் மூலம், இந்திய அரசின் தடுப்பூசி செயல்முறைக்கு பெரும் உதவியை செய்துள்ளது.
கொரோனா தொற்று உலகம் முழுவதும் தீயாய் பரவி வருகிறது. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நோயாளிகளுக்கு ஆக்சிமீட்டர் ஒரு உயிர்நாடியாக இருந்து உதவுகிறது. ஒரு நல்ல ஆக்சிமீட்டரின் விலை சந்தையில் இரண்டாயிரம் ரூபாய் முதல் தொடங்குகிறது.
தடுப்பூசி குறித்து பலருக்கு இன்னும் பல சந்தேகங்கள் இருக்கின்றன. நிபுணர்களின் கூற்றுப்படி, சிலர் தடுப்பூசி போட்டுக்கொள்வதை தவிர்க்க வேண்டியது அவசியமாகும். யாரெல்லாம் தடுப்பூசி போட்டுக்கொள்ளக் கூடாது என்பதை இங்கே காணலாம்.
கொரோனா தொற்று நாடு முழுவதும் பெரும் அழிவை ஏற்படுத்தி வருகின்றது. இதற்கிடையில், கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் மும்முரமாக நடந்து வருகின்றன. இப்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.
மாநில சுகாதாரத் துறை செய்தி அறிக்கையின் படி, சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 1,17,405 ஆக உள்ளது. இன்று 17,164 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆன நிலையில், தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10,54,746 ஆக உள்ளது.
12 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்குமாறு ஃபைசர் மற்றும் பயோனோடெக் ஐரோப்பிய ஒன்றிய மருந்து கட்டுப்பாட்டாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன.
கொரோனாவின் கோரத் தாண்டவத்தில் நாடே திண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில், மே மாதம் முதல் தேதியில் இருந்து,18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்திருத்தது அனைவருக்கும் சற்றே ஆறுதலை கொடுத்ததது.
மே 1 முதல் தடுப்பூசி செலுத்திக்கொள்வோரின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும். இந்த நிலையில், தடுப்பூசி மையங்களில் மக்கள் கூட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆகையால், தடுப்பூசி மையங்களிலிருந்து கொரோனா தொற்று பரவக்கூடும் என்ற அச்சமும் மக்கள் மற்றும் சுகாதார நிபுணர்களின் மத்தியில் பரவலாக உள்ளது.
கொரோனாவின் இரண்டாவது அலை இந்திய மக்களை பாடாய் படுத்தி வருகிறது. இந்த நிலையில், கொரோனா தடுப்பூசி கொரோனாவுக்கு எதிரான போரில் நம்மை பாதுகாத்துக்கொள்ள சிறந்த வழியாக கருதப்படுகின்றது. தடுப்பூசி செயல்முறையை அரசாங்கம் தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.