Covishield மிகப் பெரிய செய்தி: 2 டோஸ்களுக்கான இடைவெளி 12-16 வாரங்களாக நீட்டிக்கப்பட்டது

கோவிஷீல்ட் தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாவது டோசுக்கு இடையிலான கால அளவு மாற்றப்பட்டுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் வியாழக்கிழமை செய்தியாளர் சந்திப்பில் இதை அறிவித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 13, 2021, 09:09 PM IST
  • கோவிஷீல்ட் தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாவது டோஸுக்கு இடையிலான கால அளவில் மாற்றம்.
  • கோவாக்சின் தடுப்பூசி செலுத்தலில் எந்த மாற்றமும் இல்லை.
  • மத்திய சுகாதார அமைச்சகம் வியாழக்கிழமை செய்தியாளர் சந்திப்பில் இதை அறிவித்துள்ளது.
Covishield மிகப் பெரிய செய்தி: 2 டோஸ்களுக்கான இடைவெளி 12-16 வாரங்களாக நீட்டிக்கப்பட்டது title=

புதுடெல்லி: கோவிஷீல்ட் தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாவது டோசுக்கு இடையிலான கால அளவை 6-8 வாரங்களிலிருந்து 12-16 வாரங்களாக அதிகரிக்கக் கோரிய கோவிட் -19 செயற்குழுவின் பரிந்துரையை இந்திய அரசு ஏற்றுக்கொண்டது. மத்திய சுகாதார அமைச்சகம் வியாழக்கிழமை செய்தியாளர் சந்திப்பில் இதை அறிவித்துள்ளது.

கோவாக்சின் குறித்து அமைச்சகம் இதைக் கூறியது

இந்த மாற்றங்கள் கோவிஷீல்டுக்கு மட்டுமே செய்யப்பட்டுள்ளன என்று அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. கோவாக்சின் தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாவது டோஸ்களுக்கு இடையில் எந்த மாற்றமும் இல்லை என்பதை மக்கள் மனதில் கொள்ள வேண்டும்.

நிகழ்நேர ஆதாரங்களின் அடிப்படையில் (குறிப்பாக இங்கிலாந்திலிருந்து வந்தவை) கோவிஷீல்ட் (Covishield) தடுப்பூசியின் இரண்டு டோஸ்களுக்கு இடையிலான கால அளவை நீடிப்பதற்கான கோவிட் -19 செயற்குழுவின் பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்க துறை முடிவெடுத்துள்ளது. ஆனால் இரண்டு டோஸ் கோவாக்சின்களுக்கு இடையிலான காலத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த எந்த பரிந்துரையும் இல்லை.

ALSO READ: Sputnik V தடுப்பூசி விற்பனை எப்போது தொடங்கும்; அரசு கூறுவது என்ன?

கலந்துரையாடிய பின்னர் NEGVAC உத்தரவை பிறப்பித்தது

சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தயாரித்த கோவிஷீல்டின் இரண்டு டோஸ்களுக்கு இடையிலான இடைவெளி தற்போது 6 முதல் 8 வாரங்கள் ஆகும் என்பது கவனிக்கத்தக்கது. "கோவிட் -19 செயற்குழுவின் பரிந்துரையை 2021 மே 12 அன்று நடைபெற்ற கூட்டத்தில் கோவிட் -19 தடுப்பூசி (Vaccine) தொடர்பான தேசிய நிபுணர் குழு (NEGVAC) ஏற்றுக்கொண்டது" என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. NEGVAC-கின் தலைவர் என்ஐடிஐ ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) மருத்துவர் வி.கே. பால் என்பது குறிப்பிடத்தக்கது. 

கொரோனா பணிக்குழுவில் இந்த உறுப்பினர்கள் உள்ளனர்

கோவிட் -19 (COVID-19) செயற்குழுத் தலைவர் டாக்டர் என். கே. அரோரா INCLEN அறக்கட்டளையின் இயக்குநராக உள்ளார். அதன் உறுப்பினர்களில் ஜிப்மரின் இயக்குநரும் டீனுமான டாக்டர் ராகேஷ் அகர்வால், வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் ககன்தீப் காங், வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி பேராசிரியர் டாக்டர் ஜே.பி.முல்லியால், புது தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மரபணு பொறியியல் மற்றும் உயிரியல் தொழில்நுட்பத்திற்கான சர்வதேச மையத்தின் (ஐ.சி.ஜி.இ.பி.) குழுத் தலைவர் நவீன் கன்னா, புதுடெல்லியின் தேசிய நோயெதிர்ப்பு நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் அமுல்யா பாண்டா மற்றும் டி.சி.ஜி.ஐ இந்தியா-வின் இயக்குனர் ஆகியோர் அடங்குவர்.

ALSO READ: COVID-19 Vaccine: தமிழ்நாடு உட்பட 14 மாநிலங்களுக்கு நேரடியாக "கோவாக்சின்" சப்ளை

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News