புதுடில்லி: டெல்லியில் 18-44 வயதுக்குட்பட்டவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி இருப்பில் இல்லை என்றும் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்படும் 125 மையங்களை மூட வேண்டி இருக்கும் என்றும் ஆம் ஆத்மி எம்எல்ஏ ஆதிஷி செவ்வாய்க்கிழமை (மே 11) தெரிவித்தார்.
ஒரு ஆன்லைன் மாநாட்டில், மத்திய அரசு செவ்வாய்க்கிழமை (மே 11) மாலைக்குள் டெல்லிக்கு 2.67 லட்சம் டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசிகளை அளிக்கும் என்று அவர் கூறினார்.
"நம்மிடம் 18-44 வயதினருக்கான கோவாக்சின் (Covaxin) தடுப்பூசிகளுக்கான இருப்பு தற்போது இல்லை. இவை செலுத்தப்படும் சுமார் 125 தடுப்பூசி மையங்களை செவ்வாய்க்கிழமை மாலைக்குப் பிறகு மூட வேண்டி இருக்கும்" என்று அதிஷி கூறினார்.
Delhi's Vaccination Bulletin for 11th May 2021. pic.twitter.com/yj03fCPRiB
— Atishi (@AtishiAAP) May 11, 2021
ALSO READ: #PIBFactCheck: 12+ குழந்தைகளுக்கு கோவேக்ஸின் அனுமதி? அரசு கூறுவது என்ன
ஆம் ஆத்மி கட்சி தலைவர் ஆதிஷி, கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் (Covishield) என இரு தடுப்பூசிகளின் டோஸ்களையும் மத்திய அரசு டெல்லி அரசாங்கத்திற்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். அப்படி நடக்கவில்லை என்றால், தடுப்பூசி செயல்முறையை நிறுத்த வேண்டியிருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
தேசிய தலைநகரில் மே 10 அன்று 1.39 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசி (Vaccine) டோஸ் வழங்கப்பட்டது. இது தடுப்பூசி செயல்முறை தொடங்கியதிலிருந்து மிக உயர்ந்த தினசரி எண்ணிக்கையாகும் என்றார் ஆதிஷி.
ஞாயிற்றுக்கிழமை மாலை வரை, டெல்லியில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள், சுகாதார மற்றும் முன்னணி ஊழியர்கள் என இவர்களுக்கு 4.65 லட்சம் அளவிலான கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் கிடைத்தன. 18-44 வயது பிரிவில் உள்ளவர்களுக்கு 2.74 லட்சம் டோஸ்கள் கிடைத்தன.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR