ஸ்புட்னிக் தடுப்பூசியின் முதல் டோஸ் இந்தியாவில் வெள்ளிக்கிழமை செலுத்தப்பட்டது என்று அந்த மருந்தை இந்தியாவில் இறக்குமதி செய்யும் டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் கூறியுள்ளது.
கஸ்டம் ஃபார்மா சர்வீசசின் உலகளாவிய தலைவர் தீபக் சாப்ரா, ஹைதராபாதில் டாக்டர் டெட்டிஸ் ஆய்வகத்தில் ஸ்புட்னிக் வி (Sputnik V) தடுப்பூசியின் முதல் டோசை இன்று போட்டுக்கொண்டார். இந்தியாவில் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை முதலில் செலுத்திக்கொண்டவர் என்ற பெருமையைப் பெற்றார் தீபக்.
ரஷ்யாவிலிருந்து டாக்டர் ரெட்டிஸ் மே 1 அன்று இந்த தடுப்பூசியின் முதல் தொகுப்பைப் பெற்றது. அதில் 1.5 லட்சம் டோஸ் இருந்ததாக நிறுவனம் தெரிவித்துள்ளது. "நெறிமுறையின்படி, இந்த தொகுப்பு கசவுலியில் உள்ள மத்திய மருந்து ஆய்வகத்திற்கு (CDL) சோதனைக்காக அனுப்பப்பட்டது," என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. டாக்டர் ரெட்டிஸ் வியாழக்கிழமை சி.டி.எல் நிறுவனத்திடமிருந்து ஒழுங்குமுறை அனுமதியைப் பெற்றதாக கூறியுள்ளது.
First doses of Sputnik V administered in India. Deepak Sapra, Global Head of Custom Pharma Services at Dr Reddy's Laboratories receives the first jab of the vaccine in Hyderabad: Sputnik V#COVID19 pic.twitter.com/95eOT6gGWR
— ANI (@ANI) May 14, 2021
"ஒரு வரையறுக்கப்பட்ட துவக்க செயல்முறையின் ஒரு பகுதியாக, தடுப்பூசியின் செலுத்தல் தொடங்கப்பட்டுள்ளது. தடுப்பூசியின் முதல் டோஸ் இன்று (14 மே, 2021) ஹைதராபாத்தில் செலுத்தப்பட்டது" என்று நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ALSO READ: Sputnik V தடுப்பூசியின் விலை குறித்து Dr Reddy's வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கை
இறக்குமதி செய்யப்பட்ட டோஸ்களுக்கு ரூ .948 + 5% ஜிஎஸ்டி அல்லது ஒரு டோஸுக்கு ரூ .995.4 என்ற விலை நிர்ணயிக்கப்படும் என்றும் நிறுவனம் அறிவித்தது. உள்நாட்டு வழங்கல் தொடங்கிய பிறகு விலை குறைப்புக்கான சாத்தியக்கூறுகளும் ஆராயப்படும் என நிறுவனம் கூறியுள்ளது.
"தடுப்பூசியை (Vaccine) முறையாகவும் சரியான நேரத்திலும் வழங்க தேவையான நடவடிக்கைகளை சுமூகமாக மெற்கொள்ள நிறுவனம் இந்தியாவில் அதன் ஆறு உற்பத்தி பங்காளிகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறது" என்று நிறுவன அறிக்கை தெரிவிக்கின்றது.
ஸ்புட்னிக் வி தடுப்பூசி ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்தால் உருவாக்கப்பட்டது. டாக்டர்.ரெட்டிஸ் தவிர, ஆர்.டி.ஐ.எஃப், விர்சோவ் பயோடெக், கிளாண்ட் ஃபார்மா, பனகியா பயோடெக், ஸ்டெலிஸ் பயோஃபார்மா, ஷில்பா மெடிகேர் மற்றும் ஹெடெரோ பயோஃபார்மா ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து இந்தியாவில் இந்த தடுப்பூசியை உற்பத்தி செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது.
வரவிருக்கும் மாதங்களில் தடுப்பூசியின் அடுத்த டோஸ்களுக்கான தொகுப்புகளை எதிர்பார்ப்பதாக டாக்டர் ரெட்டிஸ் கூறியுள்ளது. "இதற்கிடையில், இந்திய உற்பத்தி கூட்டாளர்களிடமிருந்தும் ஸ்பூட்னிக் வி தடுப்பூசியின் வழங்கல் தொடங்கும்," என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
டி.ஆர்.எல் நிறுவனத்தின் இணைத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான ஜி.வி.பிரசாத் கூறுகையில், "இந்தியாவில் அதிகரித்து வரும் தொற்று எண்ணிக்கைக்கு மத்தியில், கோவிட் -19 க்கு (COVID-19) எதிரான போரில் தடுப்பூசி நமது மிகச் சிறந்த ஆயுதமாகும். இந்தியாவின் தடுப்பூசி செயல்முறையில் பங்களிப்பதே இப்போது எங்களது மிகப்பெரிய முன்னுரிமையாக உள்ளது. தடுப்பூசிகள்தான் இந்தியர்கள் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க உதவும்" என்றார்.
தடுப்பூசி இந்தியாவின் அனைத்து இடங்களையும் சென்றடையும் வகையில் பணிகளை மேற்கொள்ள தனது பங்குதாரர்களுடன் இணைந்து செயல்படப்போவதாகவும் டாக்டர் ரெட்டீஸ் தெரிவித்துள்ளது. வியாழக்கிழமை, சுகாதார அமைச்சகத்தின் செய்தியாளர் சந்திப்பின் போது நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதார) வி கே பால், அடுத்த வாரத்திற்குள் ஸ்பூட்னிக் வி இந்தியாவில் கிடைக்கும் என்று கூறினார்.
ALSO READ: Covishield மிகப் பெரிய செய்தி: 2 டோஸ்களுக்கான இடைவெளி 12-16 வாரங்களாக நீட்டிக்கப்பட்டது
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR