பெற்றோரின் விளையாட்டின் மீதான மோகம் அப்பாவி குழந்தையை கொல்லும் என்று யாராவது கற்பனை செய்ய முடியுமா? ஆம், இது ஸ்காட்லாந்தில் ஒரு தம்பதி இரவில் தொலைக்காட்சியைப் பார்ப்பதிலும், மொபைலில் கேம்ஸ் விளையாடுவதிலும் மூழ்கி இருந்ததால், 19 மாத மகள் இறந்ததை கூட அறியாமல் இருந்துள்ளனர்.
பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மேக்ரோன் (Emmanuel Macron) பொதுவில் தாக்கப் படுவது இது முதல் முறை அல்ல. முன்னதாக ஜூன் மாதத்தில், கூட்டம் ஒன்றில் ஒரு நபர் அவரது கன்னத்தில் அறைந்தார்.
காபூல் விமான நிலையம் தலிபான்களின் கட்டுப்பாட்டிற்குள் முழுமையாக வந்த நிலையில், விமான நிலையத்தில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டு விட்டதாக தாலிபான் அரசு கூறியுள்ளது.
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையான அக்னி -5 ஏவுகணையை இந்தியா சோதிக்க உள்ள நிலையில் சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் இந்த ஏவுகணை சோதனை குறித்து பதற்றத்தில் உள்ளன. இந்தியா ஏற்கனவே ஏழு முறை அக்னி -5 ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சீனா, பாகிஸ்தான் பதறும் காரணத்தை தெரிந்து கொள்ளலாம்.
சார்க் மாநாட்டில் தலிபான்களை பங்கேற்க செய்யும் பாகிஸ்தானின் முயற்சியை இந்தியா முறியடித்த பின், சர்வதேச அரங்கில் தலிபான்கள் இடம் பெற செய்ய என பாகிஸ்தான் கடுமையாக முயற்சி செய்து வருகிறது.
சீனாவின் மிக பெரிய நிறுவனங்களில் ஒன்றான எவர் கிராண்ட் திவால் ஆனதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது சீனாவின் பொருளாதாரத்தில் கடும் சிக்கலை ஏற்படுத்தும் என்பதோடு, சர்வதேச அரங்கிலும் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
கனடா பொதுத் தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி தொடர்ந்து மூன்றாவது முறையாக அதிக இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்று இருப்பினும், இன்னும் பெரும்பான்மை பெறவில்லை.
ஆப்கானிஸ்தானுடனான நாட்டின் எல்லையில் இஸ்லாமிக் ஸ்டேட் (IS)பயங்கரவாத குழு இருப்பதை ஈரான் அனுமதிக்காது என்று ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி சனிக்கிழமை கடுமையாக எச்சரித்தார்.
உலகின் மிக பிரபலமான தொழிலதிபரும், உலக பணக்காரர்களில் ஒருவருமான எலன் மஸ்க் (Elon Musk) பொது மக்களை விண்வெளிக்கு அழைத்து செல்லும் லட்சிய திட்டமான இன்ஸ்பிரேஷன் 4 (Inspiration 4), என்னும் விண்வெளி சுற்றுலா பயணத்திற்கான மிஷனை தொடங்கினார்.
தாலிபான்கள் கடந்த ஆகஸ்ட் 15 அன்று எந்த வித எதிர்ப்பும் இல்லாமல் ஆட்சியைப் படித்தது, ஆனாலும், ஒரு மாதம் காலம் ஆன் நிலையில், அவர்களால் முறையாக ஒரு அரசினை அமைக்க முடியவில்லை.
வீட்டில் மீன் வலர்க்கும் சிலரை நாம் பார்த்திருக்கிறோம். அதற்கு அதிகபட்சம் 5-10 ஆயிரம் செலவழித்திருக்க வேண்டும். ஆனால் ஒரு மீனுக்கு கோடிகள் கொடுக்கத் தயாராக உள்ளவர்கள் உலகில் இருக்கிறார்கள் என்பதை அறிந்தால் ஆச்சர்யமாக இருக்கிறது இல்லையா... . இந்த மீனை பற்றி தெரிந்து கொள்வோம் ....
ஐநா அறிவித்துள்ள பயங்கரவாதிகளின் பட்டியலில் உள்ளவர்களை அமைச்சர்களாக நியமிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆப்கான் அரசை உலக நாடுகள் அங்கீகரிப்பதும் சாத்தியம் இல்லை என்ற நிலை தான் உள்ளது.
தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றி, அமெரிக்க படைகள் அங்கிருந்து முழுமையாக விலகி விட்ட போதிலும், அங்கு இன்னும் தாலிபான்களால் ஆட்சியை முறையாக அமைக்க முடியாத நிலை தான் உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.