ஆப்கானிஸ்தானிற்கான சர்வதேச விமான சேவைகளை மீண்டும் தொடங்குமாறு ஞாயிற்றுக்கிழமை தாலிபான் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. விமான சேவைகளை இயக்க, விமான போக்குவரத்து நிறுவனங்களுடன் முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் உறுதியளித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து ஆகஸ்ட் 30ம் தேதி, அமெரிக்க ராணுவம் முழுவதுமாக வெளியேறியதையடுத்து, காபூல் விமான நிலையம் தலிபான்களின் கட்டுப்பாட்டிற்குள் முழுமையாக வந்த நிலையில், விமான நிலையத்தில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டு விட்டதாக தாலிபான் அரசு கூறியுள்ளது.
தாலிபான்கள் சர்வதேச அங்கீகாரத்தை பெறுவதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கை வந்துள்ளது.
விமான நிலையத்திலிருந்து மிக குறைந்த எண்ணிக்கையிலான உதவி மற்றும் பயணிகள் விமானங்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் தலிபான்கள் தலைநகரைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் மட்டுமல்லாது ஆப்கான் நாட்டு மக்களும், தாலிபான்கள் கொடுங்கோல் ஆட்சிக்கு பயந்து தப்பியோடி முயற்சித்ததில், அங்கு பெரும் குழப்பமான சூழ்நிலை உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | Afghanistan: நெயில் பாலிஷ் பூசும் பெண்களின் விரல்களை துண்டிக்க தாலிபான் உத்தரவு
ஆப்கானிஸ்தானில் இருந்து அது மூடப்பட்டதிலிருந்து சாதாரண வணிக சேவைகள் மீண்டும் தொடங்கப்படவில்லை. சேதமடைந்த விமான நிலையம், பின்னர் கத்தார் மற்றும் துருக்கியில் இருந்து வந்த தொழில்நுட்ப குழுக்களின் உதவியுடன் பழுது பார்க்கப்பபட்டு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட சில விமான நிறுவனங்கள் மிக குறைந்த சேவைகளை வழங்கி வந்தாலும், விமான கட்டணங்கள் இயல்பை விட பல மடங்கு அதிகம் என்று கூறப்படுகிறதுது.
வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அப்துல் கஹார் பால்கி இது குறித்து கூறுகையில், சர்வதேச விமான சேவைகள் நிறுத்தப்பட்டதால் வெளிநாடுகளில் பல ஆப்கான் நாட்டவர்கள், நாட்டிற்கு வர முடியாமல் சிக்கி தவிக்கின்றனர் என தாலிபான் அரசின் வெளியுறவு அமைச்சகம் கூறுகிறது.
"காபூல் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள தொழில்நுட்ப பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு, உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகளுக்கு விமான நிலையம் முழுமையாக திறக்கப்படும். , அனைத்து விமான நிறுவனங்களுக்கும் புதிய அரசு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதியளிக்கிறது," என்று அவர் கூறினார்.
ALSO READ | அதிர்ச்சித் தகவல்! பெண்ணின் சடலங்களுடனும் உடல் உறவு கொள்ளும் தாலிபான்கள்..!!
ஆட்சியைப் பிடித்ததிலிருந்து, தாலிபான்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டனர். மேலும், ஆட்சிக்கு வந்த பிறகு பெண்கள் மீதான ஒடுக்கு முறை மற்றும் பழி வாங்கு நடவடிக்கைகள், அராஜக நடவடிக்கைகள், கொடூரமான வகையில் மரன தண்டனை நிறைவேற்றப்படும் என்ற அறிக்கைகள் ஆகியவற்றின் காரணமாக, சர்வதேச அளவில் பெரிதும் விமர்சிக்கப்பட்டதால், சர்வதேச அளவில் தங்களுக்கு அங்கீகாரம் வேண்டும் என நினைப்பதாக், அவர்கள் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்கள் என கூறப்படுகிறது.
ALSO READ | பாலியல் அடிமை முதல் தீக்குளிப்பது வரை; ஆப்கான் பெண் நீதிபதி விவரித்த திகில் சம்பவங்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR