In Pics: ஸ்பெயினின் கேனரி தீவுகளில் கொழுந்து விட்டு எரியும் எரிமலை..!!

ஸ்பெயினின் கேனரி தீவுகளில் எரிமலை வெடித்ததால் பல வீடுகள் எரிந்து விட்டதாக அரசு அதிகாரிகள் கூறினர். ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்

1 /5

கானரி தீவான லா பால்மாவில் உள்ள லாஸ் லானோஸ் டி அரிடேனில் இருந்து பார்க்கும் போது, கும்ப்ரே வீஜா மலையில் கொழுந்து விட்டு எரியும் எரிமலை, புகை, சாம்பல் ஆகியவற்றை காணலாம். (புகைப்படம்: AFP)  

2 /5

கேனரி தீவுகள் எரிமலை ஆய்வு நிறுவனம், தீவின் தெற்கு முனை அகுகே பிற்பகல் 3 மணிக்குப் பிறகு எரிமலை வெடித்ததாக அறிவித்தது, இதற்கு முன்னதாக 1971 ஆம் ஆண்டில்  கடைசியாக எரிமலை வெடித்ததாக கூறப்படுகிறது. (புகைப்படம்: AFP)  

3 /5

85,000 மக்கள்தொகை கொண்ட லா பால்மா, ஆப்பிரிக்காவின் மேற்கு கடற்கரையில் உள்ள எட்டி எரிமலை தீவுகளில் ஒன்றாகும். ஸ்பெயினின் கேனரி தீவுகள் தீவில் உள்ள எட்டு எரிமலைத் தீவுகளில் ஒன்றான இதில், பாதுகாப்பிற்காக அங்குள்ள ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர். (புகைப்படம்: AFP)

4 /5

எரிமலைக்கு முன் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்பதிவு செய்யப்பட்டது.  கபேசா டி வக்கா எனப்படும் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. எரிமலை குழம்புகள் எல் பாரைசோ, அல்கலா மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலுள்ள நகராட்சிகளை வந்தடையும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். (புகைப்படம்: AFP)

5 /5

ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், எரிமலை வெடித்ததால் ஏற்பட்ட பாதி[ப்பை லா பால்மாவுக்கு சென்று ஆராய, ஐ.நா பொதுச்சபைக்காக நியூயார்க் செல்லும் பயணத்தை ஒத்திவைத்தார். (புகைப்படம்: AFP)