Watch Video: பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் மீது முட்டை வீச்சு

பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மேக்ரோன் (Emmanuel Macron) பொதுவில்  தாக்கப்  படுவது இது முதல் முறை அல்ல. முன்னதாக ஜூன் மாதத்தில், கூட்டம் ஒன்றில் ஒரு நபர் அவரது கன்னத்தில் அறைந்தார்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 28, 2021, 09:12 AM IST
  • அதிபரின் மெய்காப்பாளர்கள் அவரது தோள்களை அணைத்து அவரை பாதுகாப்பதைக் காணலாம்.
  • சம்பவ இடத்திலிருந்து, அந்த நபர் அழைத்துச் செல்லப்படுவதையும் வீடியோவில் காணலாம்
  • அந்த நபரின் விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
Watch Video: பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் மீது முட்டை வீச்சு title=

Paris: பாரிஸில் நடந்த ஒரு வினோதமான சம்பவத்தில், பிரெஞ்சு நகரமான லியோனில் நடந்த சர்வதேச உணவு வர்த்தக கண்காட்சிக்கு பிரெஞ்சு அதிபர் (French President) இம்மானுவேல் மக்ரோன் (Emmanuel Macron) சென்றபோது, ஒரு நபர் அவர் மீது முட்டையை வீசினார்.

சமூக வலைதளங்கள் முழுவதும் வைரலாகி வரும் இந்த சம்பவத்தின் வீடியோவில், இம்மானுவேல் மேக்ரோன் கூட்டத்தின் வழியாக நடந்து செல்லும் போது, அவர் மீது முட்டை வீசப்படுவதைக் காணலாம். அதிபரின் மெய்காப்பாளர்கள் அவரது தோள்களை பற்றிக் கொண்டு, அவரை பாதுகாப்பதையும் வீடியோவில் காணலாம்.

அந்த வீடியோ காட்சியில், ஒருவரை மற்ற மெய்க்காப்பாளர்கள் அழைத்துச் செல்வதையும் காணொளி காட்டுகிறது. மேக்ரோன் (Emmanuel Macron) "என்னிடம் சொல்ல ஏதாவது இருந்தால், அவர் வரலாம்" என்று கூறியதையும் அந்த இடத்திலிருந்த செய்தியாளர்கள் கேட்டனர். முட்டை வீசியவர் யார், அவர் எதற்காக வீசினார் என்பது குறித்த எந்த விவரங்களையும் அதிகாரிகள் வெளியிடவில்லை.

வைரல் வீடியோவை இங்கே பார்க்கவும்:

ALSO READ | இங்கிலாந்தில் கடும் எரிபொருள் நெருக்கடி; ராணுவத்தை ஈடுபடுத்த ஆலோசனை

பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மேக்ரோன் பொதுவில்  தாக்கப்  படுவது இது முதல் முறை அல்ல. முன்னதாக ஜூன் மாதத்தில், தென்கிழக்கு பிரான்சில் உள்ள ஒரு சிறிய நகரத்தில் பொதுமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டிருந்த போது ஒரு நபர் இமானுவேல் மேக்ரோன் முகத்தில் அறைந்தார். பின்னர் , மேக்ரோன், இதனை  முட்டாள்தனமான வன்முறை   நடவடிக்கை என கண்டனம் செய்தார். இந்த நடவடிக்கையை சித்தாந்த, கட்சி வேறுபாடுகளை கடந்து அனைத்து அரசியல்வாதிகளும், தலைவர்களும் கண்டனம் செய்து, மேக்ரோனுக்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர். 

மேக்ரோன், அவருக்கு முன்னால்  பதவியில் இருந்த அதிபர்களை போல்வே, பொதுமக்களுடன் உரையாடுதல், அவர்களை சந்திப்பதில் அதிக நேரத்தை செலவிடுகிறார். பிரெஞ்சு மொழியில்  crowd baths என்று அழைக்கப்படும், பொது மக்களுடன் நேரம் செலவழிக்கும் இந்த உத்தி, நீண்டகாலமாக பிரெஞ்சு அரசியலின் பிரதானமாக இருந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

பிரான்சின் அடுத்த அதிபர் தேர்தலுக்கு சுமார் ஆறு மாதங்கள் உள்ள நிலையில்,  43 வயதான அதிபர் மேக்ரோன், தேர்தல் குறித்த அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. ஆனால், விரைவில் அறிவிப்பு வெளியாகும் என ஆனால் அவ்வாறு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ | ‘கொடூர மரண தண்டனைகளுக்கு தயாராக இருங்கள்’ : மிரட்டும் தாலிபான்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News