உத்தரகண்ட்டில் அத்துமீறி நுழைந்ததா சீன ராணுவம்; உண்மை நிலை என்ன..!!!

உத்தரகாண்டின் பராஹோட்டி 100 சீன மக்கள் விடுதலை இராணுவ வீரர்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 29, 2021, 10:58 AM IST
உத்தரகண்ட்டில் அத்துமீறி நுழைந்ததா சீன ராணுவம்; உண்மை நிலை என்ன..!!! title=

சீன உடனான எல்லைப் பகுதியில் அமைந்துள்ள உத்தரகண்ட் மாநிலத்தின் பாராஹோட்டி என்ற பகுதிக்குள், சீன ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வெளியானது. இந்த தகவலை உத்தரகாண்ட் முதல்வர் மறுத்துள்ளார்.

உத்தரகண்ட் (Uttarakhand) மாநிலத்தின் முதலமைச்சர் புஷ்கர் சிங் டாமி (Pushkar Singh Dhami), கடந்த மாதம் பராஹோட்டி செக்டாரில் (Barahoti sector) 100 சீன வீரர்கள்  எல்லை கட்டுபாட்டு கோட்டை (LAC) தாண்டி வந்ததாக கூறும் தகவலை நிராகரித்தார். 

எல்லைப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருக்கும் நிலையில், மத்திய அரசு தீவரமாக கண்காணித்து வருவதாகவும், அப்படி ஏதேனும் அத்துமீறல் இருந்தால், அதை ஊடகங்களுடன் பகிர்ந்து கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ALSO READ | பீரங்களையும் ஏவுகணைகளையும் அகற்றி எல்லையில் இருந்து பின் வாங்குகிறது சீனா.!!!

முன்னதாக, ஆகஸ்ட் 30 ஆம் தேதி உத்தரகாண்டின் பராஹோட்டி 100 சீன மக்கள் விடுதலை இராணுவ வீரர்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. படைகள் குதிரைகளில் வந்ததாகவும் மூன்று மணி நேரம் இந்திய எல்லைக்குள் தங்கியிருந்ததாகவும் செய்திகள் வெளியாகின.

சீனத் (China) தரப்பு LAC பகுதியில் பெருமளவில் உள்கட்டமைப்பு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. கிழக்கு லடாக் (Ladakh) பகுதியில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, இந்தியா கிட்டத்தட்ட 3,500-கிலோமீட்டர் நீளமுள்ள எல்லை கட்டுபாட்டு பகுதியை ( LAC) உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.

பாங்காங் ஏரி பகுதியில் ஏற்பட்ட கடும் மோதலை அடுத்து, கிழக்கு லடாக் பகுதியில் கடந்த ஆண்டு மே 5 ம் தேதி இந்திய மற்றும் சீன ராணுவத்தினருக்கு இடையே எல்லையில் மோதல் ஏற்பட்டது. இந்திய - சீன எல்லையில் உள்ள லடாக் பகுதியில் சென்ற ஆண்டு சீனத் தரப்புடன் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதை அடுத்து பதற்றம் அதிகரித்தது. இரு தரப்பினரும், பல்லாயிரக்கணக்கான துருப்புக்களையும் கனரக ராணுவ வாகனங்களையும் நிலை நிறுத்தி இருந்தன. 

பின்னர் இரு தரப்பினருக்கும் இடையில், தொடர்ச்சியான நடந்த இராணுவ மற்றும் இராஜதந்திர பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு கோக்ரா பகுதியில் படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டன. 

ALSO READ | சீனா, ரஷ்யா & பாகிஸ்தான் தூதர்கள் தாலிபானை சந்தித்தது ஏன்... !!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News