Tamilnadu Rain Alert | தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை தீவிரமடைய தொடங்கியுள்ளது. வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதால் டெல்டா உள்ளிட்ட தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும். இதனையொட்டி சென்னை வானிலை ஆய்வு மையும் ஆரஞ்சு அலெர்ட் விடுத்துள்ளது. அதிகபட்சமாக 20 சென்டி மீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிவிப்பில், "தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு கனமழை பெய்யும். நவம்பர் 25, 26, 27, 28 ஆகிய 4 நாட்கள் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 12 முதல் 20 செமீ வரை மழை பொழிவிற்கு வாய்ப்பு உள்ளது. இதனால், ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. தெற்கு அந்தமான் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவியது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் படிக்க | சென்னையை நோக்கி வரும் மேகங்கள்... கனமழைக்கு வாய்ப்பு - நாளை பள்ளிகளுக்கு விடுமுறையா?
இந்த காற்றழுத்த தாழ்வானது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த இரு தினங்களில் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். காற்றழுத்த தாழ்வு பகுதி நகர்ந்து நவம்பர் 25 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலத்தில் கவனம் செலுத்தி, அடுத்த 2 நாட்களில் தமிழ்நாடு இலங்கை கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக, தமிழ்நாட்டில் வரும் 25 முதல் 28ம் தேதி வரை 4 நாட்கள் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது." என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்தெந்த மாவட்டங்களில் மழை இருக்கும்?
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதேபோல் உள் மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புயல் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காற்றழுத்த தாழ்வுப்பகுதி இலங்கையை நோக்கி நகர்வதால் தமிழ்நாட்டுக்கு புயல் பாதிப்பு இல்லை. இருப்பினும் வருவாய் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மழை குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ