ஏ.ஆர்.ரஹ்மானை பிரிய காரணம் இதுதான்! சாய்ரா பானு வெளியிட்ட பரபரப்பு ஆடியோ..

AR Rahman Wife Saira Banu Audio About Divorce : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை அவரது மனைவி விவாகரத்து செய்வதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது அது குறித்த ஆடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டிருக்கிறார்.   

Written by - Yuvashree | Last Updated : Nov 24, 2024, 02:32 PM IST
  • ஏ.ஆர்.ரஹ்மான் மனைவி வெளியிட்ட ஆடியோ
  • அவர் தங்கமான மனிதர் என பேச்சு
  • விவாகரத்துக்கு காரணம் என்ன?
ஏ.ஆர்.ரஹ்மானை பிரிய காரணம் இதுதான்! சாய்ரா பானு வெளியிட்ட பரபரப்பு ஆடியோ.. title=

AR Rahman Wife Saira Banu Audio About Divorce : சில நாட்களுக்கு முன்பு, ஏ.ஆர்.ரஹ்மானை பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவித்தது, ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தான் அவரை பிரிவதற்கான காரணம் குறித்து சாய்ரா பானு ஒரு ஆடியோவை வெளியிட்டிருக்கிறார்.

ஆடியோவில் கூறியிருப்பது..

ஏ.ஆர்.ரஹ்மானை, பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார். இந்த செய்தி, கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் கொழுந்து விட்டு எரிந்து வருகிறது. இதற்கான உண்மை காரணம் என்ன என்பது குறித்த தெரியாமலே, பலர் ஏ.ஆர்.ரஹ்மானை குறை சொல்ல ஆரம்பித்து விட்டனர். இந்த நிலையில், சாய்ரா பானு ஒரு தனியார் ஊடகத்திற்கு ஆடியோவை அனுப்பியிருக்கிறார். 

ஆடியோவில் கூறியிருப்பது:

“சாய்ரா ரஹ்மான் பேசுகிறேன். நான் இப்போது பாம்பேயில் இருக்கிறேன். கடந்த இரண்டு மாதங்களாக உடல் நிலையும் மனநிலையும் சரியாக இல்லை. இதன் காரணமாகத்தான் நான் ஏ.ஆர்.ரஹ்மானிடம் இருந்து பிரேக் எடுக்க விரும்பினேன். ஆனால், ஒட்டுமொத்த யூடியூபர்களுக்கும் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். தயவு செய்து அவரைப்பற்றி தவறாக சொல்லாதீர்கள். அவர் தங்கமானவர், இந்த உலகிலேயே சிறந்த மனிதர். எனது உடல் நிலை காரணமாக சென்னையில் இருந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இப்போது பாம்பே வந்து ட்ரீட்மெண்டில் இருக்கிறேன். 

சென்னையில் இருக்கும் ரஹ்மானின் பிசியான வேலைக்கு நடுவே என்னால் ட்ரீட்மெண்ட் பார்க்க முடியாது. அவருக்கும் குழந்தைகளுக்கும் தொல்லை கொடுக்க கூடாது என்பதால்தான் இந்த முடிவை எடுத்தேன். அவர் ஒரு நல்ல மனிதர். அவரை அப்படியே விட்டுவிடுங்கள். என் வாழ்க்கையையே அவரை நம்பி கொடுத்திருக்கிறேன். அவரும் நானும் அந்த அளவிற்கு இருவரையும் நேசிக்கிறோம். இன்னும் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. ட்ரீட்மெண்ட் முடிந்தவுடன் சென்னைக்கு வருவேன். அதுவரை, அவர் குறித்து அவதூறு பரப்பாமல் இருங்கள்” என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார். 

ஏ.ஆர்.ரஹ்மான் கொடுத்த நோட்டீஸ்!

ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்குழுவில் இருந்த பெண் ஒருவர், ரஹ்மானின் விவாகரத்து அறிவிப்பிற்கு அடுத்த நாளே, தனது கணவரை பிரிவதாக அறிவித்திருந்தார். இதையடுத்து இவரையும் ரஹ்மானையும் வைத்து சில ஊடகங்கள் கதைகளை ஜோடிக்க ஆரம்பித்தன. இதையடுத்து, ஏ.ஆர்.ரஹ்மான் தன் மீது அவதூறு பரப்பிய ஊடகங்களுக்கு வக்கீல் நோட்டீஸ் கொடுத்தார். இதையடுத்து, அவரது மனைவி வெளியிட்டுள்ள ஆடியோவும் தற்போது வைரலாகி வருகிறது. 

மகனும் கண்டனம்..

ஏ.ஆர்.ரஹ்மானின் மகனும் இரண்டு நாட்களுக்கு முன்பு இது போன்ற வதந்திகளுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார். தன் தந்தை, குழந்தை போன்றவர் என்றும், அவர் குறித்து அவதூறு பரப்பும் ரீதியிலான செய்திகளை பார்க்கும் போது வேதனையாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இதற்கு சில திரை பிரபலங்களும் ஆதரவு தெரிவித்திருந்தனர். சிகிச்சையில் இருக்கும் சாய்ரா பானு சென்னைக்கு வந்தவுடன் இந்த நிலை சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க | “என் அப்பா அப்படிப்பட்டவர் இல்லை” ஏ.ஆர்.ரஹ்மான் மகன் போட்ட பரபரப்பு பதிவு!!

மேலும் படிக்க | தன்னை பற்றிய வீடியோக்களை உடனே நீக்க வேண்டும்! ஏஆர் ரகுமான் நோட்டீஸ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News