டாக்கா: அண்டை நாடான பங்களாதேஷ இஸ்லாமிய நாடாக உள்ள நிலையில், பாகிஸ்தானைப் போல இங்கும் இந்துக்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
இருப்பினும், இங்குள்ள பழங்கால சிவன் கோவிலுக்கு வந்து தரிசிக்க தொலைதூரத்திலிருந்தும் மக்கள் வருகிறார்கள். இந்த பழங்கால கோவிலின் அதிசய அக்னி குண்டம் தான் இதற்கு காரணம், இங்கு சுடர் எப்போதும் அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறது. இது விஞ்ஞானிகளை கூட ஆச்சரியப்படுத்தும் வகையில் உள்ளது.
பங்களாதேஷ் இந்து அமைப்பு இது குறித்து கூறுகையில், இந்த கோவிலில் இருக்கும் அக்னி குண்டத்தில் தீ அணையாமல் எரிந்து கொண்டிருக்கும் என்றும் அந்த சுடர் எங்கிருந்து வருகிறது என இதுவரை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் கூறியுள்ளது.
Agnikund Mahadev Temple. It is an ancient temple of Mahadev located in Chittagong. There is always a flame of the fire coming out of this temple. No archaeologist has yet identified the source of the fire. pic.twitter.com/nLzrUDThSO
— Bangladesh Hindu Unity Council (@UnityCouncilBD) September 21, 2021
ALSO READ | மகாளய பட்சம்: முன்னோர்கள் ஆசி பெற கடைபிடிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்
பங்களாதேஷ் இந்து கவுன்சில் செவ்வாய்க்கிழமை இந்த அதிசய சிவாலயத்தின் சில படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டது. ' மகாதேவன் அக்னி குண்டம்’ பற்றிய தகவலை அளித்த இந்த கவுன்சில் 'அக்னிகுண்டன் உள்ள இந்த சிவனின் பழமையான கோவில் சிட்டகாங்கில் அமைந்துள்ளது என கூறியுள்ளது.
தொல்பொருள் ஆராய்ச்சியாளராலும் இதன் காரணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. பகிரப்பட்ட படங்களில், கோவிலின் அக்னி குண்டம் ஒன்றில் எரியும் நெருப்பைக் காணலாம். அந்த ட்விட்டர் பதிவிற்கு கருத்து தெரிவித்துள்ள பலர், அடிப்படைவாதிகள் கோவிலுக்கு தீங்கு விளைவிக்காமல் இருக்க வேண்டும் என அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
கம்போடியாவிலும் பல பெரிய கோவில்கள் உள்ளன. மிகப் பெரிய கோவிலாகக் கருதப்படும் பழமையான விஷ்ணு கோவில் இங்கு உள்ளது. இந்த கோவில் 12 ஆம் நூற்றாண்டில் கம்போடிய மன்னர் சூரியவர்மாவால் நிறுவப்பட்டது. இந்த கோவிலின் அகலம் 650 அடி மற்றும் நீளம் இரண்டரை மைல்.
ALSO READ | அன்னை மகாலட்சுமியின் அருளுடன் வீட்டில் என்றென்றும் செல்வம் செழிக்க வேண்டுமா..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR