சீனாவின் மிக பெரிய நிறுவனங்களில் ஒன்றான எவர் கிராண்ட் திவால் ஆனதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது சீனாவின் பொருளாதாரத்தில் கடும் சிக்கலை ஏற்படுத்தும் என்பதோடு, சர்வதேச அரங்கிலும் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. இதன் மதிப்பு சுமார் 300 பில்லியன் டாலர்கள்.
நம் தேசத்தில் உள்ள விரல் விட்டு எண்ணக் கூடிய மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களை போல சீனாவின் மதிப்பு மிக்க ஒரு நிறுவனமாக உள்ளது ரியல் எஸ்டேட் நிறுவனமான எவர்கிராண்ட். தற்போது சீனா முழுவதும் சுமார் 280க்கும் மேற்பட்ட நகரங்களில் 1,300 க்கும் மேற்பட்ட ரியல் எஸ்டேட் திட்டங்களை செயல்படுத்தி வரும் எவர்கிராண்ட் ரியல் எஸ்டேட் நிறுவனம் 300 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் கடன் வாங்கியுள்ளது. அதற்கு 84 மில்லியன் அமெரிக்க டாலர் வட்டி செலுத்த வேண்டும் என்ற நிலையில், நிதி நெருக்கடி காரணமாக வட்டி செலுத்த இயலாது என கூறியுள்ளதோடு முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப அளிப்பதற்கு பதிலாக சொத்துக்களை திரும்ப அளித்து வருகிறது.
பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனஙக்ள் செலுத்த வேண்டிய கடன் நிலுவைத் தொகை தொடர்பாக,கடந்த ஆண்டு, சீன அரசு புதிய விதிகளை கொண்டு வந்தது. இதன் காரணமாக எவர் கிராண்ட் நிறுவனம் சொத்துக்களை பெரும் தள்ளுபடியில் விற்க நேரிட்டது. இப்போது, அதன் கடன்களுக்கான வட்டி யை கூட செலுத்த முடியாமல் திணறி வருகிறது என்று IANS செய்தி வெளியிட்டுள்ளது.
ALSO READ | அதிசயம்! இறந்த 45 நிமிடத்திற்கு பின் ‘உயிர்த்தெழுந்த’ பெண்..!!
இந்த நிச்சயமற்ற தன்மை இந்த ஆண்டு எவர்கிராண்டேவின் பங்கின் விலை சுமார் 85 சதவிகிதம் சரிந்துள்ளது. அதன் கடன் பத்திரங்களின் மதிப்பையும் உலகளாவிய கடன் மதிப்பீட்டு நிறுவனங்கள் பெருமலவு குறைத்து விட்டன.
Evergrande சுமார் 171 உள்நாட்டு வங்கிகள் மற்றும் 121 பிற நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்கியுள்ளது என்று பொருளாதார நிபுணர் புலனாய்வு பிரிவின் (EIU) மேட்டி பெக்கிங் கூறியுள்ளதாக IANS செய்தி அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. Evergrande கடனை திரும்ப கொடுக்க தவறினால், அதற்கு கடன் வழங்கிய வங்கிகள் மற்றும் பிற நிறுவனங்கள், குறைவாக கடன் கொடுக்க வேண்டிய நிலைக்கு ஆளாகலாம்.
உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக உள்ள சீனாவுக்கு, நாட்டின் மிகப்பெரிய நிறுவனத்தின் இந்த கடன் நெருக்கடி மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். இதன் மூலம் வெளிநாடுகள், இனி சீனாவில் பணத்தை முதலீடு செய்ய மிகவும் யோசிக்கும் நிலை உருவாகக் கூடும்.
ALSO READ | Canada Election: பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ‘வெற்றி’; ஆனால் ‘பெரும்பான்மை’ வெற்றி இல்லை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR