கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையான அக்னி -5 ஏவுகணையை இந்தியா சோதிக்க உள்ள நிலையில் சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் இந்த ஏவுகணை சோதனை குறித்து பதற்றத்தில் உள்ளன. இந்தியா ஏற்கனவே ஏழு முறை அக்னி -5 ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சீனா, பாகிஸ்தான் பதறும் காரணத்தை தெரிந்து கொள்ளலாம்.
அக்னி -5 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை (Agni-V ICBM) பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) மற்றும் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் (BDL) ஆகியோரால் இணைந்து உருவாக்கப்பட்டது. இந்த ஏவுகணை 5000 முதல் 8000 கிமீ வரை சென்று தாக்க வல்லது.
அக்னி-வி என்னும் கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை (ICBM) 50 ஆயிரம் கிலோ எடை கொண்டது. இது 17.5 மீட்டர் நீளம் மற்றும் 6.7 அடி விட்டம் கொண்டது. இதில் 1500 கிலோ எடையுள்ள அணு ஆயுதத்தை எடுத்து செல்ல வல்லது. அக்னி-வி யின் வேகம் ஒலியின் வேகத்தை விட 24 மடங்கு அதிகம். அதாவது, இது ஒரு வினாடியில் 8.16 கிலோமீட்டர் தூரத்தை கடக்கிறது. இந்த ஏவுகணை மணிக்கு 29,401 கிலோமீட்டர் வேகத்தில் சென்று தாக்கும் திறன் கொண்டது. (புகைப்பட ஆதாரம்: DRDO)
அக்னி-5 ஏவுகணை செலுத்த இலக்கு மாறாமல் துல்லியமாக தாக்கும். மொபைல் லாஞ்சர் பயன்படுத்தப்படுவதால் லாரியில் ஏற்றி சாலை வழியாக எந்த இடத்திற்கும் கொண்டு செல்லலாம்.
அக்னி-5 ஏவுகணை செலுத்த இலக்கு மாறாமல் துல்லியமாக தாக்கும். மொபைல் லாஞ்சர் பயன்படுத்தப்படுவதால் லாரியில் ஏற்றி சாலை வழியாக எந்த இடத்திற்கும் கொண்டு செல்லலாம்.
இந்த ஏவுகணையை இந்தியா ஏவினால், அது ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்காவின் சில பகுதிகளுக்கு சென்று தாக்கும் அளவு திறன் பெறது. ஏவுகணையில் ஒன்றிற்கு பதிலாக பல ஆயுதங்களை வைத்து இலக்கை நிர்ணயிக்கலாம். அதாவது, ஒரு ஏவுகணை ஒரே நேரத்தில் பல இலக்குகளைத் தாக்கும். (புகைப்பட ஆதாரம்: DRDO)
அக்னி -5 (Agni-V ICBM) முதல் வெற்றிகரமான சோதனை 19 ஏப்ரல் 2012 அன்று நடந்தது. இதைத் தொடர்ந்து 15 செப்டம்பர் 2013, 31 ஜனவரி 2015, 26 டிசம்பர் 2016, 18 ஜனவரி 2018, 3 ஜூன் 2018 மற்றும் 10 டிசம்பர் 2018 ஆகிய நாட்களில் வெற்றிகரமான சோதனைகள் நடத்தப்பட்டன. மொத்தத்தில் அக்னி -5 ஏவுகணையின் 7 வெற்றிகரமான சோதனைகள் நடந்துள்ளன. (புகைப்பட ஆதாரம்: DRDO)
இந்த ஏவுகணையில் MIRV தொழில்நுட்பம் காரணமாக, சீனா பதற்றத்தில் உள்ளது. இரண்டு முதல் 10 ஆயுதங்களை கொண்டு இலக்கு நிர்ணயிக்க முடியும். அதாவது, ஒரே ஏவுகணையானது ஒரே நேரத்தில் 2 முதல் 10 வெவ்வேறு இலக்குகளை பல நூறு கிலோமீட்டர் பரப்பளவில் குறிவைத்து தாக்க முடியும்.
அக்னி -5 வெற்றிகரமான சோதனைக்கு சீனா மற்றும் பாகிஸ்தான் தவிர, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா இந்தியாவை பாராட்டியுள்ளன. அதி நவீன ஏவுகணைகள் கொண்ட, சீனா, ரஷ்யா, பிரான்ஸ், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா சேரும்.