‘இந்த’ 5 இடங்களில் கம்முன்னு இருந்தா..வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும்!

Stay Silent In These 5 Places : பல நேரங்களில், நாம் பேசும் விஷயங்கள்தான் நமக்கு பிரச்சனையாக இருக்கும். அதனால், சில இடங்களில் சில நேரங்களில் பேசாமல் இருப்பதே நல்லது. அவை என்னென்ன இடங்கள் தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Nov 24, 2024, 12:15 PM IST
  • சைலண்ட்டா இருக்க வேண்டிய இடங்கள்
  • 5 இடங்களில் பேசாமல் இருக்க வேண்டும்
  • அவை என்னென்ன இடங்கள் தெரியுமா?
‘இந்த’ 5 இடங்களில் கம்முன்னு இருந்தா..வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும்!  title=

Stay Silent In These 5 Places : பேச்சுத்திறமை என்பது அனைவருக்கும் அமைந்து விடாது. ஆனால், பல நேரங்களில் நம்மை பிரச்சனையில் சிக்க வைப்பதும், அந்த பிரச்சனையில் இருந்து விடுவிப்பதும் நாம் பேசும் பேச்சாகத்தான் இருக்கும். இப்படி நன்றாக பேசத்தெரிந்தவர்கள் கண்டிப்பாக தங்கள் தொழில் வாழ்க்கையிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் வெற்றி பெற்றவர்களாக இருப்பார்கள். ஆனால், நாம் ஒரு சில இடங்களில் வாயை மூடிக்கொண்டு பேசாமல் இருப்பதுதான் நல்லது. அப்படிப்பட்ட இடங்கள் என்னென்ன தெரியுமா?

ஒருவர் புலம்பும் போது:

நமக்கு தெரிந்தவர் அல்லது நம்முடைய நண்பர், அவரது வாழ்க்கை பிரச்சனைகளை நம்மிடம் புலம்பி தீர்ப்பார். இப்படி, ஒருவர் நம்மிடம் வந்து புலம்பும் போது அவர்கள் நம்மிடம் தீர்வு கேட்டு வர மாட்டார்கள். மனதில் இருப்பதை ஒருவர் கேட்க மாட்டாரா என்ற ஏக்கத்துடன் வருவார்கள். எனவே, அவர்கள் அப்படி புலம்பும் போது நாம் காது கொடுத்து கேட்க வேண்டுமே தவிர, குறுக்க பேசக்கூடாது. அவர்கள் பேச சொன்னால், உங்களிடம் தீர்வு கேட்டால் மட்டும் பேச வேண்டும். 

அவமதிக்கும் போது:

உங்களை ஒருவர் பர்சனல் ஆக அட்டாக் செய்கிறார் என்றால், அவருக்கு உங்கள் மீது அளவுகடந்த வன்மம் இருக்கிறது என்று அர்த்தம். இப்படி ஒருவர் உங்களை அவமதிக்கும் போது நீங்கள் அதற்கு பதில் பேசினால் கண்டிப்பாக அது எரியும் தீயில் எண்ணெயை ஊற்றுவது போல இருக்கும். இப்படி செய்தால், உங்களுக்கு தன்னம்பிக்கை இல்லை என்று அவர் நினைத்துக்கொள்வார். எனவே, யார் உங்களை சண்டைக்கு அழைத்தாலும், வன்மத்துடன் பேசினாலும் அதை ஒரு பார்வையால் கடந்து விட்டு அடுத்த வேலையை பார்க்க வேண்டும். 

ரகசியம் பேசும் போது:

“இருவருக்குள்ளும் இருக்கும் வரைதான் அது ரகசியம், மூன்றாம் நபருக்கு சென்று விட்டால் அது செய்தி” என ஒரு சொல்லாடல் இருக்கிறது. ஒருவர் உங்களிடம், “இந்த விஷயத்தை யாரிடமும் கூறக்கூடாது” என்று ரகசியத்தை கூறினால், அதை யாரிடமும் சொல்லாமல் இருப்பதுதான் உங்களுக்கும், சம்பந்தப்பட்ட நபருக்கும் நல்லது. அப்படி, ஒரு ரகசியம் உங்களை அசௌகரியமக உணர வைக்கிறது என்றால், அது போன்ற விஷயங்களை உங்களிடம் கூற வேண்டாம் என சம்பந்தப்பட்ட நபரிடம் நீங்கள் தெரிவித்து விட வேண்டும்.

மேலும் படிக்க | உங்களை வார்த்தையால் அட்டாக் செய்பவரை சைலண்டா வாயை மூட வைக்கலாம்! 5 வழிகள்..

சண்டையில்..

கோபத்தில் நாம் வார்த்தையை விடுவது மனித இயல்பு. வெறுப்பின் உச்சத்தை எட்டும் போது, நாம் நம்மையே அறியாமல் பல வார்த்தைகளை விவாதங்களில் விட்டுவிடும். எனவே, ஒருவர் உங்கள் மீது கோபப்பட்டு கத்தினாலும், அந்த சண்டை பெரிய சண்டையாக மாறினாலும் கண்டிப்பாக நீங்கள் அந்த இடத்தில் அமைதியாக சென்று விடுவது நல்லது. அல்லது, அந்த சூழ்நிலை கொஞ்சம் கூல் டவுன் ஆனவுடன் பேச வேண்டும். 

போதுமான விஷயம் தெரியாத போது..

முழு உண்மை தெரியாமல் நாம் பேசும் போது அந்த பேச்சு, நமக்கே ஆப்பாக மாறலாம். நீங்கள் ஏதேனும் தவறாக பேசி விட்டால், யாருக்கேனும் தவறான அட்வைஸ் கொடுத்து விட்டால் உங்கள் மீது பிறர் நம்பிக்கை இழந்து விடுவர். எனவே, ஒன்றும் தெரியாமல் பேசுவதற்கு, “எனக்கு அதைப்பற்றி போதுமான விவரம் தெரியாது” என்று கூறிவிட்டு அமைதியாக இருந்து விடலாம். இது, நீங்கள் நேர்மையாகவும் உண்மையாகவும் இருப்பதை காண்பிக்கும்.

மேலும் படிக்க | சைக்காலஜி ட்ரிக்: நீங்கள் கேட்கும் உதவிக்கு எல்லாரும் Yes சொல்லனுமா? ‘இதை’ செய்யுங்கள்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News