Onion Prices Latest Update: கடந்த ஆண்டு, வெங்காயத்தின் விலை ஒரு கிலோவுக்கு 100 ரூபாயை எட்டியது, அதன் பின்னர் அரசாங்கம் பல உடனடி நடவடிக்கைகளை எடுத்தது, இது விலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.
வெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிகரித்தால், ரேஷன் கடைகள் மூலம் வெங்காயத்தை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே ராஜு தெரிவித்தார்.
கிலோவுக்கு 20 ரூபாயாக விற்கப்பட்டு வந்த வெங்காயம் இப்போது கிலோ 100 ரூபாய் என்ற விலையை எட்டியுள்ளது. வெங்காயத்தின் விலை உயர்ந்து, தரம் குறைந்திருந்தாலும், மக்கள் தொடர்ந்து வெங்காயத்தை வாங்கி வருவதால் இதன் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது.
நாட்டின் பல்வேறு மண்டலங்களில் வெங்காயத்தின் விலை குறையத் தொடங்கியுள்ளது. விரைவில், நாட்டில் வெங்காய விலை நெருக்கடி குறையும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.