2 அல்லது 3 நாட்களில் தமிழகத்தில் வெங்காயம் விலை குறையும்: தமிழக அரசு உறுதி

அடுத்த 3 நாட்களுக்குள் மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு தேவையான வெங்காயம் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Sep 23, 2019, 04:07 PM IST
2 அல்லது 3 நாட்களில் தமிழகத்தில் வெங்காயம் விலை குறையும்: தமிழக அரசு உறுதி title=

சென்னை: அடுத்த 3 நாட்களுக்குள் மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு தேவையான வெங்காயம் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் வெங்காயம் (Onion Prices) கிலோ ஒன்றுக்கு 70 ரூபாய் முதல் 80 வரை விற்பனையாகிறது. இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசு (Government of Tamil Nadu) போதிய முயற்சிகளை எடுத்து வருகிறது. வெங்காயம் விலை கடுமையாக உயர்ந்து உள்ளதால், பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர். இதன் விளைவு தமிழகம் மட்டுமில்லை நாடு முழுவதும் எதிரோலித்துள்ளது. அதாவது ஒரு கிலோ வெங்காயம் டெல்லியில் 65 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 56 ரூபாயாகவும், மும்பை மற்றும் பெங்களூருவில் 50 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

நாட்டின் மொத்த வெங்காய விளைச்சலில் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, குஜராத், ராஜஸ்தான் கிழக்கு மாவட்டங்கள், மத்திய பிரதேசத்தில் மேற்கு மாவட்டங்கள் ஆகியவைதான் மிக முக்கிய பங்காற்றுகின்றன. எனவே தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெங்காயம் விலையை கட்டுக்குள் கொண்டுவர நாசிக் மற்றும் ஆந்தரா போன்ற மாநிலங்களில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மேலும் பல இடங்களில் வெங்காயம் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஏற்கனவே வெங்காயத்தின் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு வெங்காயம் இறக்குமதிக்கான வரியை ரத்து செய்துள்ளது. மேலும் மத்திய அரசின் இருப்பில் இருந்து இதுவரை 16 ஆயிரம் டன் வெங்காயம் எடுக்கப்பட்டு, அந்தந்த மாநிலங்கள் தங்களது தேவைக்கு ஏற்ப விநியோகம் செய்து வருகிறது.

Trending News