திமுக கட்சியினரை தூண்டிவிட்டால் சீமான் சீமானாகப் போக முடியாது, கோமணம் இல்லாமல் போவார் ஜாக்கிரதை என்று சீமானுக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி எச்சரிக்கை.
பிரபாகரனுடன் தான் எடுத்த புகைப்படம் வெட்டி, ஒட்டியது என்றால், அதற்கான ஆதாரத்தை வெளியிடுங்கள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சவால் விடுத்துள்ளார்.
நீங்களாம் பெரிய எடிட்டரா என பிரபாகரனுடன் எடுத்த புகைப்படம் தொடர்பாகவும் அடிப்படையிலேயே பெரியார் பிழையானவர் எனவும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கோபமாக பேசியுள்ளார்.
நாம் தமிழர் கட்சி தொடங்கி பல ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு கட்சிக்கு ஒரு அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்த மைக் சின்னம் கிடைத்து இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.
பிரபாகரனுடன் சீமான் இருப்பது போன்ற புகைப்படத்தை எடிட் செய்து கொடுத்ததே நான் தான் என்று வெங்காயம் படத்தின் இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
சீமான், பெரியார் குறித்து சர்ச்சையான வகையிலும், அவமதிக்கும் வகையிலும் பேசிய நிலையில்அவரது பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழும்பி, நடிகை விஜயலட்சுமி சீமானை, கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.
Murasoli, Seeman | தந்தை பெரியாரை கொச்சைப்படுத்தி பேசிய சீமான் மீது திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளது. சீமான் பெயரை நேரடியாக குறிப்பிடாமல், பெரியாரை விமர்சித்த கழிசடை, புதுப் பிராணி என விளாசியுள்ளது.
Tamil Nadu Latest News Updates: சீமான் மீது கொடுக்கப்பட்டுள்ள புகார் அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Durai Murugan | பெரியாரை விமர்சனம் செய்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை அறிவிலி, தற்குறி என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் காட்டமாக விமர்சித்துள்ளார். அறிவிலிகளின் அவதூறுகளால் பெரியார் புகழை மறைக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.
சீமான் இனிமேல் பொதுவெளியில் மன்னிப்புக் கேட்டாலும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்றும், நிச்சயம் தண்டனை வாங்கி தருவேன் என்றும் திருச்சி சரக டி.ஐ.ஜி வருண்குமார் தெரிவித்துள்ளார்.
கேராளவில் தமிழக கழிவுகளை எடுத்து சென்று கொட்டினால் அந்த மாநிலத்தின் மக்கள் அதை எதிர்ப்பார்கள். நீ கடவுளின் தேசம் என்றால் நாங்க கண்றாவி தேசமா? என சீமான் கேள்வி.
தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சியில் இருந்து பலர் விலகி வருகின்றனர். கட்சிக்காக அயல்நாடுகளில் இருந்து வரும் நிதிக்கு உரிய கணக்கு வழக்குகள் இல்லை எனவும் பரபரப்பு குற்றச்சாட்டு.
தவெக தலைவர் விஜய்யோ, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானோ யாராக இருந்தாலும் எஃகு கோட்டையான திமுகவை உரசிப் பார்க்க முடியாது என்று அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
Actress Kasthuri: பிராமணர்கள் ஏதாவது குரல் கொடுத்தால் அவர்கள் மீது பொய் வழக்கு போடுகின்றனர் என்றும் திமுகவை எதிர்க்கும் அனைவரும் ஒரே குடையின் கீழ் சேர்ந்து செய்ய வேண்டும் என்றும் நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.