நாட்டின் 76வது குடியரசு தினம் இன்று (ஜன.26) கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பிரபல நடிகர் அஜித் குமார், நடிகை ஷோபனா உள்ளிட்ட 139 பேருக்கு பத்ம பூஷன் விருது அறிவித்து மத்திய அரசு கௌரவித்து உள்ளது. இதில் 13 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.
ஒவ்வொரு ஆண்டின் குடியரசு தனத்திற்கு முந்தைய நாள் இந்த விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியலை மத்திய அரசு வெளியீடு. அதன்படி இந்தாண்டு தேர்வானவர்களின் விருதை நேற்று (ஜன.25) அறிவித்தது.
இந்த நிலையில், நடிகர் அஜித் குமாருக்கு முன் பத்ம பூஷன் விருதை பெற்ற தமிழ் நடிகர்கள் யார் யார் என்பதை இத்தொகுப்பில் பார்க்கலாம்.
மேலும் படிங்க: பாதாம் பிசின் சாப்பிட்டால் இவ்வளவு நல்லாதா? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க!
சாதனை படைத்த அஜித் குமார்
நடிகர் அஜித் குமார் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர். இவர் நடிப்பில் மட்டுமின்றி கார் ரேஸிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். சமீபத்தில் துபாயில் நடந்த 24 எச் சீரிஸ் கார் ரேஸ் பந்தயத்தில் நடிகர் அஜித்குமாரின் அஜித்குமார் ரேஸிங் அணி 992 பிரிவில் 3வது இடத்தை பிடித்து மிகப்பெரிய சாதனை படைத்தது. இதற்கு அஜித் குமாருக்கு பகரும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இந்த நிலையில்தான், இவருக்கு மத்திய அரசு பத்ம பூஷன் விருது வழங்கி கௌரவித்து உள்ளது. இந்த விருது இந்தியாவின் மூன்றாவது பெரிய விருதாக கருதப்படுகிறது. பத்ம பூஷன் விருதை வென்ற அஜித் குமார் பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரெளபதி மும்மு மற்றும் தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து அறிவிக்கை வெளியிட்டிருந்தார்.
அஜித் குமார் உருக்கம்
அதில், இதனைக் காண என் மறைந்த தந்தை என்னுடன் இருந்திருக்க வேண்டும். தான் செய்யும் அனைத்திலும் அவரது வழிகாட்டுதல் இருக்கிறது என்பதில் அவர் பெருமை கொள்வார். கடந்த 25 ஆண்டுகளில் தனது அனைத்து மகிழ்ச்சிகளிலும், வெற்றிகளிலும் துணையாக அவரது மனைவி ஷாலினி பக்கபலமாக இருந்தார் எனக் குறிப்பிட்டிருந்தார்.
பத்ம பூஷன் விருதை பெற்ற தமிழ் நடிகர்கள்
- இந்த பத்ம பூஷன் விருதை நடிகர் அஜித் குமாருக்கு முன்னதாக நான்கு தமிழ் நடிகர்கள் பெற்றுள்ளனர். அதன்படி இந்த விருதை முதன்முதலில் வென்றவர் நடிகர் திலகம் சிவாஜி தான். இந்த விருதை அவர் 1984ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.
- இவருக்கு அடுத்தபடியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த விருதை 2000ஆம் ஆண்டு பெற்றார்.
- இவரை தொடர்ந்து உலக நாயகன் கமல்ஹாசன் 2014ஆம் ஆண்டு பெற்றார்.
- கமலஹாசனை அடுத்து புரட்சிக் கலைஞர் விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டது. அவரது மறைவுக்குப் பின் விருது அறிவிக்கப்பட்டதால் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் பெற்றுக் கொண்டார்.
இந்த நிலையில், பத்ம பூஷன் விருது நடிகர் அஜித் குமாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களின் வரிசையில் தற்போது அஜித் குமாரும் இணைந்துள்ளார்.
மேலும் படிங்க: பத்ம பூஷன் விருது... நடிகர் அஜித் குமார் உடனே சொன்னது என்ன தெரியுமா?