பெரியாரே எங்களுக்கு மண்ணுதான்... மீண்டும் மீண்டும் அட்டாக் செய்யும் சீமான்!

Seeman Periyar Issue: பெரியார் செய்தது ஒன்றும் புரட்சிகரம் கிடையாது என்றும் எதற்கெடுத்தாலும் பெரியார் மண் என்று கூறுகின்றனர், ஆனால் பெரியாரே ஒரு மண்ணு தான் என்று நான் கூறுகிறேன் என்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Jan 26, 2025, 04:20 PM IST
  • தமிழகத்தில் முதன் முதலில் இந்தி பள்ளியை திறந்தவர் பெரியார் தான் - சீமான்
  • இனி பெரியார் மண் என்று கூறினால் கொலைவெறி வந்துவிடும். இது தமிழ் மண் - சீமான்
  • சமூகத்தை சீரழித்தவர் பெரியார் - சீமான்
பெரியாரே எங்களுக்கு மண்ணுதான்... மீண்டும் மீண்டும் அட்டாக் செய்யும் சீமான்! title=

Seeman Periyar Issue Latest News Updates: புதுக்கோட்டை நாம் தமிழர் கட்சி நிர்வாகி இல்ல காதணி விழாவில் இன்று (ஜன. 26) கலந்து கொள்ள வந்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்,"நாடாளுமன்றத் தேர்தலில் என்னுடன் பல கட்சிகள் பேரம் பேசின. அவை இன்னும் பேரம் பேசிதான் வருகின்றன.

பெரியாரைப் பார்த்துதான் பிரபாகரன் தனது படையில் பெண் புலிகளை சேர்த்தார் என்று கூறுவது பிரபாகரனை சிறுமைப்படுத்துவது. பழ. நெடுமாறன் ஏன் அந்த கருத்தை இவ்வளவு காலம் கூறவில்லை. பழ. நெடுமாறன் தான் பார்த்து பேச வேண்டும். பெரியாரைப் பார்த்துதான் பிரபாகரன் அனைத்தும் செய்தார் என்று கூறுபவர்கள், பெரியாரிடம் இருந்து வந்து நேரடி அரசியல் களத்தில் இறங்கியவர்களான அண்ணாவும், கருணாநிதியும் ஏன் அந்த செயல்பாடுகளை செய்யவில்லை.

திராவிடனுக்கு ஒரு தலைவர்... தமிழனுக்கு பல தலைவர்கள்

இதுகுறித்து பழ. நெடுமாறனிடம் பதில் உள்ளதா...? நான் யாரைப் பார்த்தும் பதற்றப்படவில்லை, என்னை பார்த்துதான் பலர் பதற்றம் அடைந்துள்ளனர். உலகத் தமிழினம் என்னை மன்னிக்காது என்று கூறுகின்றனர். உங்களையே மன்னிக்கும் தமிழினம் என்னை மன்னிக்காதா...?" என்றார்.

மேலும், பெரியார் விவகாரத்தில் பாஜக உங்களை ஆதரித்து வருகிறது என்ற கேள்விக்கு சீமான்,"நான் கேட்டேனா... ஆதரவு நான் கேட்டேனா?. நீங்கள் யாரை வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்னை வென்று பாருங்கள். திராவிடனுக்கு ஒரு தலைவர்தான். ஆனால் தமிழனுக்கு பல தலைவர்கள் அடங்கிய பட்டியல் உள்ளது.

மேலும் படிக்க | அண்ணாமலை vs நயினார் நாகேந்திரன் ; தமிழக பாஜகவில் முற்றும் கோஷ்டி மோதல் - பிண்ணனி என்ன

'பெரியாரே ஒரு மண்தான்'

வேங்கை வயல் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு எனக்கு நம்பிக்கை இல்லை. மற்றொரு புலனாய்வு இந்த வழக்கில் தேவைதான் அது சிறப்பு புலனாய்வு குழுவாக இருக்க வேண்டும். சிபிஐ விசாரணை வேண்டுமென்றால் எதற்காக மாநிலத்திற்கு சுயாட்சி கேட்க வேண்டும். தமிழகத்தில் முதன் முதலில் இந்தி பள்ளியை திறந்தவர் பெரியார் தான். இந்திக்கு எதிராக போராடுபவர்களை பெட்ரோல், டீசல் ஊற்றி எரியுங்கள் என்று கூறியது பெரியார் தான். எதற்கெடுத்தாலும் பெரியார் மண், பெரியார் மண் என்று கூறுகின்றனர். ஆனால் பெரியாரே ஒரு மண்தான்.

பெரியார் விவகாரத்தில் பாஜகவை தவிர அனைத்து கட்சிகளும் என்னை எதிர்ப்பதை நான் வரவேற்கிறேன். பெரியார் கூறிய பிராமணியத்தை எதிர்ப்பதாக இருந்தால் ஒரு பிராமணப் பெண் முதலமைச்சராக இருந்தபோது, அவருக்கு சமூக நீதி காத்த வீராங்கனை என்று பட்டம் கொடுத்தது யார்?. அவரை 'அம்மா, அம்மா' என்று வணங்கி இருந்தது யார்?

பெரியார் எதிர்த்த பிராமண பெண் முதல்வராக இருந்த போதுதான் 69 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தார், சட்டப் பாதுகாப்பை அவர்தான் கொடுத்தார். அருந்ததியர் ஒருவரை சபாநாயகர் ஆக்கியது அந்த பிராமண பெண்தான். நான் தற்போது பெரியாரை பற்றி பேசுவது ஒரு புள்ளி தான். என்னை விட அதிகம் பேசியவர்கள்தான் பேரறிஞர் அண்ணாவும், கருணாநிதியும்..." என்றார்.

'பெரியார் மண் என்று கூறினால் கொலைவெறி வரும்'

திமுக அடுத்த முறையும் ஆட்சிக்கு வரும் என்று கூறுகின்றது என்ற கேள்விக்கு,"இதற்காக தான் நாங்கள் சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறோம். 2026 தேர்தலில் திமுக வெற்றி பெறுவதற்கு வாய்ப்பில்லை ராஜா. உண்மையையும் நேர்மையும் எடுத்து வைக்கும் போது இந்த சலசலப்பு ஏற்படத்தான் செய்யும். ஒரு மிகப்பெரிய தவறான கோட்பாட்டை தகர்த்தெறிந்து புதிய கோட்பாட்டை கொண்டு வர வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அதற்கு பல்வேறு இடையூறுகள் வர தான் செய்யும். 

மேலும் படிக்க | பிரபாகரனை உருவ கேலி செய்தவர் சீமான் - நடிகை விஜயலட்சுமி

இதற்காக அச்சப்பட மாட்டேன். திராவிட சித்தாந்தம் ஆகியவற்றை தகர்த்தெறிய நான் முயற்சிக்கும்போது, வெற்றி பெற்று தமிழ் தேசியத்தை கொஞ்சம் கொஞ்சமாக புகுத்தி வரும் என்னை நினைத்து பலருக்கு ஆட்டம்தான் காணும். அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது. பெரியார் செய்தது ஒன்றும் புரட்சிகரம் கிடையாது. எதற்கெடுத்தாலும் பெரியார் மண் பெரியார் மண் என்று கூறுகின்றனர், ஆனால் பெரியார் ஒரு மண் தான் என்று நான் கூறுகிறேன். இனி பெரியார் மண் என்று கூறினால் கொலைவெறி வந்துவிடும். இது தமிழ் மண்" என்றார்.

விஜய் குறித்து சீமான்...

தம்பியின் விஜய்யின் செயல்பாடு எப்படி உள்ளது என்ற கேள்விக்கு, விஜய்யை தற்போது விட்டுவிடுவோம் என பதில் அளித்தார். மேலும், தற்போது பெருந்தலைகள் நாங்கள் மோதிக்கொண்டுள்ளோம் என்றும் அவர் குறித்து தற்போது எதுவும் பேச வேண்டாம் என்றார். மேலும், அவரை இதில் எடுக்க வேண்டாம் என்றார். 

'சமூகத்தை சீரழித்தவர் பெரியார்'

மேலும், பேசிய சீமான்,"கனிம வள கொள்ளையை எதிர்த்து போராடிய ஜகபர் அலி கொலை செய்யப்பட்டுள்ளார். இதுதான் சட்டம் ஒழுங்கு லட்சணமா... திராவிட மாடலா... தேர்தலுக்கு முன்பு ஸ்டெர்லைட் விவகாரத்தில் குற்றவாளிகளை தண்டிக்கப்படுவார்கள் என்று திமுக கூறியது. அதேபோன்று பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று திமுக கூறியது. அதேபோன்று கொடநாடு கொலை வழக்கில் உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று கூறியது. ஆனால் ஆட்சிக்கு வந்து இவ்வளவு ஆண்டு காலமாகியும் ஏன் கைது செய்யப்படவில்லை, நடவடிக்கை எடுக்கப்படவில்லை. திமுகவிற்கும் அதிமுகவிற்கும் ஒரு வேறுபாடும் கிடையாது. கொடியில் மட்டும்தான் வேறுபாடு.

இன்னும் நான் வாயையே திறக்கவில்லை கொஞ்சம் தான் திறந்து உள்ளேன். ஒன்று ஒன்றாக பேசுவேன் அதற்கு எல்லாம் நீங்கள் பதில் அளிக்க வேண்டும். சமூகத்தை சீரழித்தவர் பெரியார். என்னோடு வாதிட வாருங்கள். இதுவரை ஏன் பெரியார் நூல்களை பொதுவுடமை ஆக்கவில்லை. பூட்டி பூட்டி வைத்துக் கொள்கிறீர்கள். ஏன் இதுவரை பெரியார் புத்தகங்களை கண்ணில் காட்டவில்லை. 2026இல் நான் கூட்டணி வைத்துள்ளேன், எட்டு கோடி மக்களோடு..." என்றார்.

மேலும் படிக்க | வேங்கைவயல் விவகாரம்... நடந்தது இதுதான் - தமிழ்நாடு அரசின் விரிவான விளக்கம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News