புதுடெல்லி: வெங்காயத்தின் விலையில் மத்திய அரசின் தலையீட்டிற்குப் பிறகு, விலைகள் குறையத் தொடங்கியுள்ளன. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களிடம் உரையாற்றிய போது, நாட்டின் பல்வேறு மண்டலங்களில் வெங்காயத்தின் விலை குறையத் தொடங்கியுள்ளது. விரைவில், நாட்டில் வெங்காய விலை நெருக்கடி குறையும் எனக் கூறியுள்ளார்.
டெல்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நிதியமைச்சர், "வெங்காயத்தின் விலை குறித்து ஒவ்வொரு 1-2 நாட்களுக்கு ஒருமுறை அமைச்சர்கள் குழு கூடு ஆலோசனை செய்து வருகிறது என்று கூறினார். சந்தைகளில் வெங்காயத்தின் விலை குறைந்து வருகிறதா? இல்லையா? என்பதை குறித்து அமைச்சர்கள் குழு கண்காணித்து வருகிறது. ஆனாலும் வெங்காயத்தின் விலையில் பெரிய மாற்றம் இன்னும் ஏற்படவில்லை. ஆனால் இப்போது விலைகளில் சரிவு ஏற்பட்டு உள்ளது எனக் கூறினார்.
ஒரு கேள்விக்கு பதிலளித்த நிதியமைச்சர், அமைச்சர்கள் குழு நடைமுறையில் உள்ள விலைகளின் அடிப்படையில் வெங்காயத்தை இறக்குமதி செய்வது குறித்து பரிசீலிக்கும் என்று கூறினார். அதேவேலையில் அவர் கறுப்பு சந்தைப்படுத்தல் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.
சமீபத்தில் வெங்காயத்தின் விலைகள் அதிகரித்து வருவது குறித்து அவர் தெரிவித்த கருத்து பெரும் புயலைக் கிளப்பியது. நான் வெங்காயத்தை உட்கொள்வதில்லை. அதனால் விலை பற்றி எனக்கு கவலையில்லை என்று நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார் குறுப்பிடத்தக்கது.
குத்ரே பஜாரில் வெங்காயத்தின் விலை இன்னும் குறையவில்லை. டெல்லி, நொய்டா போன்ற பகுதிகளில், ஒரு கிலோ வெங்காயம் 100 அல்லது அதற்கு அதிகமான விலையில் விற்கப்படுகிறது.
முன்னதாக இன்று காலையில் பாராளுமன்ற கேள்வி நேரத்தின் போது சில கேள்விகளுக்கு பதிலளித்த வேளாண் அமைச்சர் தோமர் கூறியது, 12,660 மெட்ரிக் டன் வெங்காயம் இறக்குமதிக்கான ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவிற்கு இந்த வெங்காயம் வரும் டிசம்பர் 27 முதல் கூடுதல் வெங்காயம் வரத் தொடங்கும். இதன் மூலம், இப்போது இறக்குமதி செய்யப்படும் மொத்த வெங்காயத்தின் அளவு சுமார் 30,000 மெட்ரிக் டன் எட்டும் எனவும், இதன் காரணமாக வெங்காயத்தில் விலை பெருமளவில் குறையும் எனவும் கூறினார்.
தோமர் விவசாயத்தில் காலநிலை மாற்றத்தின் விளைவுகளை விரிவாக விளக்கினார். அதன் விளைவுகளை குறைப்பதில் அரசாங்கம் செயல்பட்டு வருவதாகவும், இதற்காக பல திட்டங்களும் ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.