ஆகாயத்தை தொட்ட வெங்காயத்தின் விலை சற்று குறைந்தது!! எவ்வளவு..?

இன்று முதல் புதிய வெங்காயம் சந்தைக்கு வரத் தொடங்கியது வெங்காயத்தின் வருகை அதிகரித்துள்ளதால், ​​விலைகள் படிப்படியாக குறைக்கப்படும்.

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 25, 2019, 09:22 PM IST
ஆகாயத்தை தொட்ட வெங்காயத்தின் விலை சற்று குறைந்தது!! எவ்வளவு..? title=

நாசிக்: நாட்டின் மிகப்பெரிய வெங்காய சந்தையான லாசல்கானில் வெங்காயம் விலை ரூ 350 குறைந்துள்ளது. வெங்காயத்தின் விலை கடந்த வெள்ளிக்கிழமை விட இன்று மலிவாகிவிட்டது. லாசல்கான் மண்டியில் ஒரு குவிண்டால் வெங்காயத்தின் சராசரி விலை 7 ஆயிரம். விவசாயிகளின் இலாபம் குறைந்தாலும், அதன் நேரடி நன்மை வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். கடந்த வாரம் லாசல்கானில் ரப்பி வெங்காயம் குவிண்டாலுக்கு விலை 7950 ரூபாயை எட்டியது. ஆனால் திங்களன்று வெங்காயத்தின் விலை குறைந்துள்ளது. அதாவது லாசல்கான் மண்டியில் இன்று ஒரு குவிண்டல் வெங்காயத்தின் விலை 7 ஆயிரம் 600 ரூபாய் ஆக குறைந்தது. அதாவது விலை 350 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

ஒரு குவிண்டால் வெங்காயத்தின் சராசரி விலை ரூ 7000 வரை நிலையானதாக உள்ளது. அதே நேரத்தில் சிவப்பு வெங்காயத்தின் சராசரி விலை ரூ 6000 ஆக உள்ளது. திங்களன்று, ரப்பி வெங்காயம் மற்றும் சிவப்பு வெங்காயத்தின் வருகை லாசல்கான் மண்டியில் அதிகரித்தால், விலைகள் நிலையானதாக இருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.

லாசல்கான் மண்டி சமிதியின் இயக்குனர் ஜெயலதத்தா ஹோல்கர் கூறுகையில், திங்களன்று, லசல்கான் மண்டி திறந்தவுடன் வெங்காயத்தின் விலை குறைந்தது. இதற்கு முக்கிய காரணம், புதிய வெங்காயம் இன்று முதல் சந்தைக்கு வரத் தொடங்கியது. இப்போது வெங்காயத்தின் வருகை அதிகரித்துள்ளதால், ​​விலைகள் படிப்படியாக குறைக்கப்படும். எனவே நவி மும்பையில் உள்ள சில்லறை சந்தையில் வெங்காயத்தின் விலை 80 வரை இருந்தது. ஆனால் மண்டியில் விலை குறைக்கப்பட்டதால் சில்லறை வெங்காயத்தின் விலையும் குறைந்துள்ளது. இதன் நேரடி பயன் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் என்றார்.

ஒருபுறம் தொடர்ந்து பெய்த மழை சிவப்பு வெங்காயத்தை பாழாக்கிவிட்டது. அதே நேரத்தில், மறுபுறத்தில் மழை இல்லாத காரணத்தால் ரபி வெங்காய உற்பத்தியும் இந்த ஆண்டு குறைந்துள்ளது. இத்தகைய சூழ்நிலை காரணமாக தான் வெங்காயத்தின் விலை சந்தையில் அதிகரித்துள்ளது. ஆனால் இந்த ஆண்டு நல்ல மழை பெய்யும் என்பதால், விதைக்கப்படும் வெங்காய பயிரின் உற்பத்தி அதிகரிக்கும். எதிர்காலத்தில் வெங்காயத்தின் விலை வெகுவாகக் குறையக்கூடும்.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று மகாராஷ்டிராவின் தேவ்லா பஜார் சமிதியில், வெங்காயத்தின் விலை 8000 ரூபாயை எட்டியுள்ளது. நாசிக் மண்டலத்தில் விலை அதிகரிப்பு காரணமாக வெங்காயத்தின் விலை அனைத்து பெருநகரங்களிலும் 100 ரூபாயை தாண்டியது. நாசிக் மாவட்டத்தில் மொத்தம் 23 சந்தைக் குழுக்கள் உள்ளன. லாசல்கான் மற்றும் பிம்பில்கான் ஆகியவை மிகப்பெரிய வெங்காய சந்தையைக் கொண்டுள்ளன. தேவ்லா மண்டியில் குவிண்டால் வெங்காயத்திற்கு ரூ 8000 விலை நிர்ணியம் செய்யப்பட்டு இருந்தது. சத்தன மண்டியில் ரூ 70000, கலாவன் மண்டியில் ரூ.7500, பிம்பில்கான் மண்டியில் ரூ 7451 என குவிண்டலுக்கு வெங்காயம் விற்கப்பட்டது. புதிய சிவப்பு வெங்காய வர இன்னும் 15 நாட்கள் ஆகும். அத்தகைய சூழ்நிலையில், வெங்காயம் அடுத்த வாரம் வரை ஒரு குவிண்டால் 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செல்லலாம் என வியாபாரிகள் தெரிவித்திருந்தனர். 

ஆனால் இன்று முதல் சந்தைக்கு புதிய வெங்காயங்கள் வரத் தொடங்கி உள்ளதால், மண்டியில் விற்கப்படும் குவிண்டால் விலை குறைக்கப்பட்டதால் சில்லறை வெங்காயத்தின் விலையும் குறைந்துள்ளது. இதன் நேரடி பயன் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். இந்த விலையானது படிப்படியாக குறைக்கப்படும். தற்போது பல நகரங்களில் 70 ரூபாய்க்கு வெங்காயம் விற்கப்படுகிறது. அது மேலும் குறைய வாய்ப்பு உள்ளது.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News