குடியரசு தினம் 2025: சிறந்த காவல் நிலையம் விருது எந்த மாவட்டத்திற்கு? முழு விவரம் இதோ!

Republic Day 2025: சென்னையில் இன்று நடைபெற்ற குடியரசு தின விழாவில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட பல்வேறு விருதுகள் மற்றும் பதக்கங்களை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.

Written by - Sudharsan G | Last Updated : Jan 26, 2025, 10:03 AM IST
  • சென்னை போர் நினைவுச் சின்னத்தில் ஆளுநர் ரவி கொடி ஏற்றி வைத்தார்.
  • பல்வேறு படை வீரர்களின் அணிவகுப்புகளையும் ஆளுநர் ஏற்றுக்கொண்டார்.
  • விருதுகளையும், பதக்கங்களையும் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவித்தார்.
குடியரசு தினம் 2025: சிறந்த காவல் நிலையம் விருது எந்த மாவட்டத்திற்கு? முழு விவரம் இதோ! title=

Republic Day 2025, Tamilnadu Government Awards And Medals: சென்னை மெரினா கடற்கரை அருகே காமராஜர் சாலையில் 76வது குடியரசு தின விழா (76th Republic Day) இன்று காலை நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

ஆளுநர் ஆர்.என். ரவி (Tamilnadu Governor RN Ravi) தேசிய கொடியை ஏற்றிவைத்து, பல்வேறு படைப்பிரிவினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பல்வேறு துறை மற்றும் திட்டம் சார்ந்த வாகனங்களின் அணிவகுப்புகளும் இடம்பெற்றன. மேலும், தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைஞர்கள் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களின் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடந்தேறியது. மேலும், தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்ட பல்வேறு விருதுகளை, முதலமைச்சர் ஸ்டாலின் (Tamilnadu Chief Minister MK Stalin) இன்றைய குடியரசு தின நிகழ்வின் மேடையில் விருதாளர்களுக்கு வழங்கினார்.

குடியரசு தினம் 2025: வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம்

வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம் தீயணைப்பு துறையை சேர்ந்த கே.வெற்றிவேலுக்கு வழங்கப்பட்டது. கடந்த டிசம்பர் 12ஆம் தேதி அடையாறு எம்ஜிஎம் மலர் மருத்துவமனை அருகே அடையாறு ஆற்றில் தத்தளித்து கொண்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரை காப்பாற்றிய வீரதீர செயலுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு -வின் குடியரசு தின உரையின் முக்கிய அம்சங்கள்..!

குடியரசு தினம் 2025: கோட்டை அமீர் விருது

மத நல்லிணக்கத்திற்காண கோட்டை அமீர் விருது இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த எஸ்.ஏ.அமீர் அம்சாவிற்கு வழங்கப்பட்டது. 'அப்பாஸ் அலி டிரஸ்ட்' என்ற பெயரில் சொந்தமாக ஆம்புலன்ஸ் வைத்து விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்டும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதரவற்றவர்களின் பிரேதங்களை சாதி, மத பேதமின்றி இலவசமாக நல்லடக்கம் செய்து வருகிறார், எஸ்.ஏ. அமீர் அம்சா.

நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது

அதிக உற்பத்தி திறன் பெறும் விவசாயிக்கான வேளாண்மை துறையின் நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது தேனி மாவட்டத்தை சேர்ந்த முருகவேல் என்பவருக்கு வழங்கப்பட்டது. 

குடியரசு தினம் 2025: காந்தியடிகள் காவலர் பதக்கம்

காந்தியடிகள் காவலர் பதக்கம் மொத்தம் 5 காவலர்களுக்கு வழங்கப்பட்டது. விழுப்புரம் மண்டல மத்திய நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் சின்னகாமணன்; விழுப்புரம் தாலுக்கா சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலைய தலைமை காவலர் மகா மார்க்ஸ்; துறையூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு தலைமை காவலர் கார்த்திக்; சேலம் மாவட்டம் ஆயுதப்படை இரண்டாம் நிலை காவலர் சிவா; சேலம் மாவட்டம் ஆயுதப்படை இரண்டாம் நிலை காவலர் பூமாலை ஆகியோருக்கு காந்தியடிகள் காவலர் பதக்கங்கள் வழங்கப்பட்டன. 

குடியரசு தினம் 2025: சிறந்த காவல் நிலைய விருதுகள்

சிறந்த காவல் நிலையத்திற்கான முதலமைச்சர் விருதுகளும் வழங்கப்பட்டன. சிறந்த காவல் நிலையத்திற்கான முதல் பரிசை மதுரையின் C3 எஸ்எஸ் காலனி காவல் நிலையம் பெற்றது. இரண்டாவது பரிசை திருப்பூர் மாவட்டத்தின் திருப்பூர் வடக்கு காவல் நிலையம் பெற்றது. மூன்றாவது பரிசை திருவள்ளூர் மாவட்டத்தின் திருத்தணி காவல் நிலையம் பெற்றது.

மேலும் படிக்க | குடியரசு தினத்திற்கும், சுதந்திர தினத்திற்கும் கொடியேற்றுவதில் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News