மகாராஷ்டிராவில் ஆட்சி மாற்றம்!! கிலோ 80 ரூபாய்க்கு விற்கப்படும் வெங்காயம்

நவி மும்பை மற்றும் மும்பையில் சில்லறை விலையில் வெங்காயம் ஒரு கிலோ ரூ 80 வரை இருக்கும். சிவப்பு வெங்காயத்தின் விலை கிலோவுக்கு 60 ரூபாயாக இருக்கும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 23, 2019, 11:06 AM IST
மகாராஷ்டிராவில் ஆட்சி மாற்றம்!! கிலோ 80 ரூபாய்க்கு விற்கப்படும் வெங்காயம் title=

மும்பை: மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தின் மண்டி குழுக்களில் வெங்காயத்தின் விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ 8000 ஐ எட்டியுள்ளது. ரபி வெங்காயம் 8000 ரூபாயை எட்டியுள்ளது. இதன் காரணமாக, நவி மும்பை மற்றும் மும்பையில் உள்ள சில்லறை சந்தையில் வெங்காய விலை 80 ரூபாயை எட்டியுள்ளது. நிலைமை அப்படியே இருந்தால், மும்பையுடன் சேர்ந்து மகாராஷ்டிரா மாநிலம்  முழுவதும் வெங்காயம் ஒரு கிலோ 100 ரூபாய்க்கு மேல் செல்லலாம். நவி மும்பை மற்றும் மும்பையில் சில்லறை விலையில் வெங்காயம் ஒரு கிலோ ரூ 80 வரை இருக்கும். சிவப்பு வெங்காயத்தின் விலை கிலோவுக்கு 60 ரூபாயாக இருக்கும்.

மகாராஷ்டிராவின் தேவ்லா பஜார் சமிதியில் வெள்ளிக்கிழமை வெங்காயத்தின் விலை 8000 ரூபாயை எட்டியுள்ளது. நாசிக் மண்டலத்தில் விலை அதிகரிப்பு காரணமாக வெங்காயத்தின் விலை அனைத்து பெருநகரங்களிலும் 100 ரூபாயை தாண்டும் எனத் தெரிகிறது. நாசிக் மாவட்டத்தில் மொத்தம் 23 சந்தைக் குழுக்கள் உள்ளன. லாசல்கான் மற்றும் பிம்பில்கான் ஆகியவை மிகப்பெரிய வெங்காய சந்தையைக் கொண்டுள்ளன. தேவ்லா மண்டியில் குவிண்டால் வெங்காயத்திற்கு ரூ 8000 விலை நிர்ணியம் செய்யப்பட்டு உள்ளது. சத்தன மண்டியில் ரூ 70000, கலாவன் மண்டியில் ரூ.7500, பிம்பில்கான் மண்டியில் ரூ 7451 என குவிண்டலுக்கு வெங்காயம் விற்கப்படுகிறது. புதிய சிவப்பு வெங்காய வர இன்னும் 15 நாட்கள் ஆகும். அத்தகைய சூழ்நிலையில், வெங்காயம் அடுத்த வாரம் வரை ஒரு குவிண்டால் 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செல்லலாம்.

ஒருபுறம் தொடர்ந்து பெய்த மழை சிவப்பு வெங்காயத்தை பாழாக்கிவிட்டது. அதே நேரத்தில், மறுபுறத்தில் மழை இல்லாத காரணத்தால் ரபி வெங்காய உற்பத்தியும் இந்த ஆண்டு குறைந்துள்ளது. இத்தகைய சூழ்நிலை காரணமாக தான் வெங்காயத்தின் விலை சந்தையில் அதிகரித்துள்ளது. ஆனால் இந்த ஆண்டு நல்ல மழை பெய்யும் என்பதால், விதைக்கப்படும் வெங்காய பயிரின் உற்பத்தி அதிகரிக்கும். எதிர்காலத்தில் வெங்காயத்தின் விலை வெகுவாகக் குறையக்கூடும்.

Trending News