எப்போதும் இல்லாத அளவிற்கு உச்சத்தை தொட்டுள்ளது வெங்காயம் விலை. இதனால் ஒரு கிலோ வெங்காயம் 200 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.
நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே செல்கிறது. விலை ஏற்றம் அடைந்துள்ளதால் சில ஓட்டல்களில் வெங்காயத்தை அதிகமாக சேர்த்து செய்யப்படும் உணவு வகைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால் விளைச்சல் பாதிப்பு காரணமாக தமிழகம் உள்பட நாடு முழுவதும் வெங்காயம் விலை உச்சத்தில் இருக்கிறது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒருகிலோ சின்ன வெங்காயம் 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. பெரிய வெங்காயம் கிலோ 180 ரூபாய்க்கு விற்பனையாகிறது. மதுரை காய்கறிச் சந்தையில் ஒருகிலோ சின்ன வெங்காயம் 140 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் 130 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
Tamil Nadu: Onions being sold for Rs 200 in Madurai. Moorthy, an onion trader says, "Customers who used to buy 5 kg onions are now buying only 1 kg onions." Jaya Subha, an onion buyer says, "I am spending Rs 350-400 per week only on buying onions." pic.twitter.com/z4ocCabCNr
— ANI (@ANI) December 8, 2019
வெங்காயத்தின் இந்த விலை உயர்வு அடுத்த இரண்டு மாதங்களுக்கு நீடிக்கும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.