Jana Nayagan Second Look Nan Aanai Ittal : அரசியல் பணிகளில் முழு நேரமாக இறங்க இருக்கும் நடிகர் விஜய், தனது கடைசி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் டைட்டில் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று காலை வெளியானது. இந்த நிலையில் தற்போது செகண்ட் லுக்கும் வெளியாகி இருக்கிறது.
தளபதி 69 படத்தின் பெயர்:
நடிகர் விஜய்யின் கடைசி மற்றும் 69வது படத்தின் பெயர் என்னவாக இருக்கும் என்பது குறித்து கடந்த சில வாரங்களாகவே பல தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், குடியரசு தினமான இன்று, இப்படத்தின் பெயர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
தளபதி 69 படத்திற்கு ‘ஜன நாயகன்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் நடிகர் விஜய், மக்களுடன் செல்ஃபி எடுத்துக்கொள்வது போன்ற புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது. இது வெளியான சில மணி நேரங்களிலேயே, அடுத்ததாக செகண்ட் லுக்கும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
செகண்ட் லுக்:
Nan Aanai ittal……..
Adhu…….#JanaNayaganSecondLook#NanAanaiittal#JanaNayaganVijay#Thalapathy @actorvijay sir #HVinoth @thedeol @prakashraaj @hegdepooja @_mamithabaiju @anirudhofficial @Jagadishbliss @LohithNK01 @sathyaDP @PradeepERagav @RIAZtheboss #ஜனநாயகன் pic.twitter.com/ffkx40TqEA— KVN Productions (@KvnProductions) January 26, 2025
எம்.ஜி.ஆர் ஸ்டைலில்:
மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.இராமச்சந்திரனை விஜய் பின்பற்றுவதாக இதற்கு முன்னர் எத்தனையோ தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஆனால், இப்போது முதன் முறையாக நடிகர் விஜய் தான் எம்.ஜி.ஆர் வழியில் தான் நடக்கிறார் என்பதை காட்டும் வகையில் கையில் சாட்டையுடன் “நான் ஆணையிட்டால்” என்ற போஸ்டரை வெளியிட்டிருக்கிறார். இது, சினிமா வாழ்க்கையில் மட்டுமல்ல, விஜய்யின் அரசியல் வாழ்க்கையிலும் இது திருப்பத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
ரசிகர்கள் வரவேற்பு:
தளபதி 69 படத்திற்கு ஜன நாயகன் என பெயர் வைத்திருப்பதற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு அளித்துள்ளனர். பலரும் இந்த படத்திற்கு ‘நாளைய தீர்ப்பு’ என பெயர் வைக்கப்படும் என எதிர்பார்த்தனர். ஆனால், இந்த அதை தவிடுபொடியாக்கி, புதுமையாக விஜய்யின் அரசியல் எண்ட்ரிக்கு தூண்டுகாேளாக அமையும் வகையில் இந்த பெயரை வைத்துள்ளனர். இந்த வரவேற்பு சமூக வலைதளங்களில் மட்டுமல்ல, நேரிலும் பலர் இதனை கொண்டாடி வருகின்றனர்.
ஊடகங்களுக்கு பேட்டியளித்த தமிழக வெற்றிக் கழகத்தின் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் விக்னேஷ்,இந்த நேரத்தில் தளபதியின் ஜனநாயகன் போஸ்டர் வெளியாகி உள்ளதை உற்சாகமளித்து இருப்பதாகவும்,எங்களை விமர்சனம் செய்பவர்களுக்கு மக்கள் பணி செய்து பதில் அளிக்க எங்கள் தலைவர் உத்தரவிட்டுள்ளதாக கூறிய அவர்,சட்டத்திற்கு உட்பட்ட மக்களின் பிரச்னைகளுக்கு போராடுவதே த.வெ.க.தலைவர் விஜய் எங்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளதாக அவர் தெரிவித்தார்...
இதில் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பாபு,அருண்பாண்டியன் கிரீஷ் பாலாஜி உட்பட பல்வேறு அணி சார்ந்த தொண்டர்கள்,பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.
ரிலீஸ் எப்போது?
நடிகர் விஜய் படங்கள், சொன்னால் சொன்ன தேதியில் ரிலீஸாகி விடும். அந்த அளவிற்கு படத்தின் வேலைகள் கணக்கச்சிதமாக முடிந்து விடும். ஆனால், ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவதாக கூறப்பட்டது. அதிகாரப்பூர்வமாக, படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கிடையில்தான் ரிலீஸ் தள்ளிப்பாேவதாக தகவல்கள் வெளியானது. இருப்பினும் இது குறித்த உறுதிப்படுத்தப்பட்ட அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.
மேலும் படிக்க | தளபதி 69 படத்தின் பெயர் ஜனநாயகன்! First look வெளியானது..
மேலும் படிக்க | ‘ஜன நாயகன்’ என்றால் என்ன? யாரை இப்படி அழைக்க வேண்டும்? தளபதி 69 டைட்டில் அர்த்தம்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ