ஹூஸ்டன்: மனித விண்வெளி ஆய்வு 60 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது, இதுவரை 20 பேர் அதில் இறந்துள்ளனர். 2025ல் நிலவுக்கு ஒரு குழுவையும், அடுத்த தசாப்தத்தில் செவ்வாய் கிரகத்திற்கு விண்வெளி வீரர்களையும் அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது. விண்வெளிக்கு மனிதர்கள் செல்லும்போது, பல்வேறு விதமான அனுபவங்கள் ஏற்படும். அனைத்து பரிசோதனைகளையும் மேற்கொண்டு, ஆரோக்கியமான மனிதரையே விண்வெளிக்கு அனுப்பினாலும், இறப்பு என்பது எப்போது? என்ற கேள்விக்கு யாரால் விடையளிக்க முடியும்?
விண்வெளியில் ஒருவர் இறந்தால் என்ன செய்வது?
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவது என்பது மிகவும் கடினமான மற்றும் ஆபத்தான பணி. ஆனால் ஒருவர் இறந்து விட்டால் அவரது உடலை என்ன செய்வது என்பதும் கடினமான கேள்வி.
இதுவரை 20 பேர் விண்வெளியில் உயிரிழந்துள்ளனர்
மனித விண்வெளி ஆய்வு 60 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது, இதுவரை 20 பேர் அதில் இறந்துள்ளனர். 1986 மற்றும் 2003 க்கு இடையில், 14 விண்வெளி வீரர்கள் நாசா விண்கல விபத்தில் இறந்தனர். 1971 சோயுஸ் 11 பயணத்தின் போது மூன்று விண்வெளி வீரர்கள் கொல்லப்பட்டனர். அதேஓல, 1967 ஆம் ஆண்டில், அப்பல்லோ ஏவுதளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று விண்வெளி வீரர்கள் கொல்லப்பட்டனர்.
மேலும் படிக்க | விண்வெளியின் மாயங்களை மந்திரஜாலமாய் படம் பிடித்த புகைப்படக்காரர்கள்
இப்போது ஏன் அதிக ஆபத்து உள்ளது?
மனித விண்வெளிப் பயணம் சிக்கலானது? இருந்தாலுல்ம் இதில் இதுவரை வெகு சிலரே உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் முன்னோக்கி செல்லும் பாதை கடினமானது. 2025ல் நிலவுக்கு ஒரு குழுவையும், அடுத்த தசாப்தத்தில் செவ்வாய் கிரகத்திற்கு விண்வெளி வீரர்களையும் அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது. வணிக விண்வெளி விமானங்களும் அதிகரித்து வருகிறது. விண்வெளிப் பயணம் சர்வசாதாரணமாகி வருவதால், வழியில் யாரேனும் உயிரிழக்க வாய்ப்பு உள்ளது.
இது ஒரு ஏமாற்றமளிக்கும் ஆனால் அவசியமான கேள்வியை மனதில் கொண்டு வருகிறது: விண்வெளியில் ஒருவர் இறந்தால் - உடலுக்கு என்ன நடக்கும்? சர்வதேச விண்வெளி நிலையம் போன்ற குறைந்த-பூமி-சுற்றுப்பாதை பயணத்தில் யாராவது இறந்தால், குழுவினர் சில மணிநேரங்களில் உடலை ஒரு காப்ஸ்யூலில் பூமிக்கு திருப்பி விடலாம்.
சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்தில் மரணம்
இது சந்திரனில் நடந்தால், சில நாட்களுக்குள் குழுவினர் உடலுடன் பூமிக்கு திரும்பலாம். செவ்வாய் கிரகத்திற்கு 300 மில்லியன் மைல் பயணத்தின் போது ஒரு விண்வெளி வீரர் இறந்தால் விஷயங்கள் வித்தியாசமாக இருக்கும். குழுவினர் உடலைக் கொண்டு வந்துவிட்டு, மீண்டும் திரும்பிச் செல்ல முடியாது.
அதுபோன்ற சூழ்நிலையில், பணியின் முடிவில், சில ஆண்டுகளுக்குப் பிறகு, உடல் குழுவினருடன் பூமிக்குத் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குழுவினர் உடலை ஒரு தனி அறை அல்லது சிறப்பு உடல் பையில் பாதுகாப்பார்கள்.
விண்வெளிப் பயணச் சவால்கள்
ஆனால் விண்வெளி நிலையம் அல்லது விண்கலம் போன்ற அழுத்தமான சூழலில் யாராவது இறந்தால் மட்டுமே இந்த எல்லா காட்சிகளும் பொருந்தும். விண்வெளி உடையின் பாதுகாப்பு இல்லாமல் ஒருவர் விண்வெளியில் நுழைந்தால் என்ன நடக்கும்? விண்வெளி வீரர் உடனடியாக இறந்துவிடுவார். இரத்தமும் மற்ற உடல் திரவங்களும் கொதிக்க ஆரம்பிக்கும்.
இறுதி சடங்கு சாத்தியமில்லை
தகனம் விரும்பத்தக்கது அல்ல; இதற்கு அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. மேலும் புதைப்பதும் நல்ல யோசனையல்ல. உடலில் இருந்து பாக்டீரியா மற்றும் பிற உயிரினங்கள் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை மாசுபடுத்தும். அதற்கு பதிலாக, குழுவினர் உடலை பூமிக்கு திரும்பும் வரை ஒரு சிறப்பு உடல் பையில் பாதுகாப்பார்கள். இந்த மோசமான சூழ்நிலைக்கு திட்டமிடல் மற்றும் நெறிமுறை தேவைப்படும்.
நாசாவின் நெறிமுறை என்ன?
இத்தகைய சூழ்நிலைகளுக்கான விரிவான நெறிமுறைகளை நாசா ஏற்கனவே வகுத்துள்ளது. விரைவாக திரும்பும் பயணங்கள் தொடர்பான இறப்புகளில் உடலைப் பாதுகாப்பது நாசாவின் முக்கிய கவலையாக இருக்காது; மாறாக, மற்ற குழுவினர் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்புவதை உறுதி செய்வதே முதன்மையானதாக இருக்கும்.
மேலும் படிக்க | விண்வெளியில் அமெரிக்காவை முந்தும் சீனா... தயாராகும் சீன விண்வெளி நிலையம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ