Manikandan Talks About Vijay Sethupathi : தமிழ் திரை உலகில் தற்போது வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் மணிகண்டன். இவரது குடும்பஸ்தன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மக்களின் வரவேற்பினை பெற்றுள்ளது. இந்த படத்தின் பிரமோஷனுக்காக பல்வேறு நேர்காணல்களில் கலந்து கொண்டார். அப்போது அவர் விஜய் சேதுபதி குறித்து பேசிய விஷயம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
விஜய் சேதுபதி மணிகண்டனுக்காக செய்த விஷயம்..
நடிகர் மணிகண்டன் விஜய் சேதுபதியை போல, துணை நடிகராக இருந்து ஹீரோவாக மாறியவர்தான். இவர்கள் இருவரும் சில படங்களில் சேர்ந்து நடித்திருக்கின்றனர். காதலும் கடந்து போகும் படம் தான் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த முதல் படமாகும். இந்த படம் 2016ஆம் ஆண்டு வெளியானது.
இந்த படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது விஜய் சேதுபதியுடன் ஏற்பட்ட ஒரு சுவையான அனுபவம் குறித்து மணிகண்டன் பேசி இருக்கிறார். ஒருமுறை தனது தங்கையின் அறுவை சிகிச்சைக்காக பணம் தேவைப்பட்டதால் தனது பேமெண்ட் முன்கூட்டியே கொடுத்து விடுமாறு பட குழுவினரிடம் கேட்டிருக்கிறார், மணிகண்டன். அப்போது இதை எப்படியோ தெரிந்து கொண்ட விஜய் சேதுபதி தங்கையின் ஆபரேஷன் நடக்கும் மருத்துவமனைக்கே நேரில் சென்று நலம் விசாரித்ததாக கூறியிருக்கிறார்.
மேலும், தனது தங்கையின் திருமணத்தின் போது பத்திரிகை எல்லாம் கொடுத்து கூட விஜய் சேதுபதியே மணிகண்டன் அழைக்கவில்லையாம். ஆனால், திருமணத்திற்கு விஜய் சேதுபதி வந்ததோடு மட்டுமல்லாமல் செலவிற்கு வைத்துக்கொள்ளுமாறு மணிகண்டனிடம் 3 லட்ச ரூபாயும் கொடுத்திருக்கிறார். இதை தான் அவரிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை என்றும் ஆனால் கடைசியில் இந்த தொகை தான் கல்யாண செலவுகளை சமாளிக்க உதவியதாகவும் மணிகண்டன் கூறியிருக்கிறார்.
நட்பு ஆரம்பித்தது எப்படி…?
காதலும் கடந்து போகும் படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும்போது, ஒரு நாள் மழை பெய்துள்ளது. அப்போது கேரவனுக்கு செல்ல முடியாத காரணத்தால் விஜய் சேதுபதி மணிகண்டன் நின்று கொண்டிருந்த இடத்திற்கு அருகில் வந்து நின்றிருக்கிறார். அப்போது இருவரும் தங்களின் சினிமா அனுபவத்தை பகிர்ந்து கொண்டதாகவும் தான் எங்கெல்லாம் வேலை பார்த்திருக்கிறேன் என்பதை கேட்டு விஜய் சேதுபதி ஆச்சரியப்பட்டதாகவும் மணிகண்டன் கூறியிருக்கிறார். உடனே தனது நம்பரை வாங்கி பதிவு செய்து கொண்டதாகவும் அதன் பிறகு அப்படியே அந்த நட்பு தொடர்ந்ததாகவும் மணி பேசியிருக்கிறார்.
இப்போதும் விஜய் சேதுபதி நடித்திருக்கும் சில படங்களுக்கு அவர் ஊரில் இல்லாத சமயங்களில் ஏதேனும் சில வசனங்களை மிமிக்கிரி செய்து பேசியதாகவும் மணிகண்டன் கூறியிருக்கிறார்.
குடும்பஸ்தன் படம் எப்படியிருக்கு?
நடிகர் மணிகண்டன், சில தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் தனது திறமையை வெளிப்படுத்தி வெளியுலகத்திற்கு கொஞ்சம் கொஞ்சமாக தெரிய ஆரம்பித்தவர். சில நிகழ்ச்சிகளில் துணை இயக்குனராகவும் பணி புரிந்திருக்கிறார். அவர் நடித்த கடைசி இரண்டு படங்களான குட் நைட் மற்றும் லவ்வர் ஆகிய இரண்டுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல குடும்பஸ்தன் படமும் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக அமைந்திருக்கிறது. இதனால் தொடர்ந்து மூன்று படங்களிலும் கொடுத்து ஹாட்ரிக் வெற்றி பெற்ற கதாநாயகனாக மணிகண்டன் விளங்குகிறார். இதற்கு பிறகும், நல்ல படங்களை அவர் தொடர்ந்து தேர்ந்தெடுத்து நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | குடும்பங்கள் கொண்டாடும் ‘குடும்பஸ்தன்’? படம் எப்படி? X தள விமர்சனம்..
மேலும் படிக்க | 'லவ்வர்’ மணிகண்டனின் அடுத்த படம் ‘இவர்’ கூடத்தான்! எந்த இயக்குநர் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ