ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம்... நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு... முழு விபரம் இதோ..

அரசு ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு மத்திய அரசு பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை, சில மாதங்களுக்கு முன் ஒப்புதல் வழங்கிய நிலையில், குடியரசு தினத்தை முன்னிட்டு, ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் அறிவிக்கையை இந்திய அரசு வெளியிட்டுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 25, 2025, 10:30 PM IST
  • ஏப்ரல் 1, 2025 முதல் அமலுக்கு வரும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்.
  • ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்.
  • ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு தகுதியுடையவர்கள் எவர்கள்?
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம்... நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு... முழு விபரம் இதோ.. title=

அரசு ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு மத்திய அரசு பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை, சில மாதங்களுக்கு முன் ஒப்புதல் வழங்கிய நிலையில், குடியரசு தினத்தை முன்னிட்டு, ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் அறிவிக்கையை இந்திய அரசு வெளியிட்டுள்ளது. தேசிய ஓய்வூதியத் திட்டத்தை (NPS) தேர்வு செய்தவர்கள், வரும் நிதியாண்டு முதல் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு (UPS) தகுதியானவர்களாக இருப்பார்கள். 

மத்திய அரசு கொண்டுவந்துள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம், பழைய ஓய்வூதிய திட்டம் மற்றும் புதிய ஓய்வூதிய திட்டத்தின் சிறந்த அம்சங்களை கொண்டுள்ளது. மத்திய பட்ஜெட்டுக்கு முன்னதாக, மத்திய அரசு ஊழியர்களுக்கான தேசிய ஓய்வூதிய முறையின் (NPS) கீழ் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (UPS) நிதி அமைச்சகம் "ஒரு விருப்பமாக" அறிவித்துள்ளது. ஏப்ரல் 1, 2025 முதல் அமலுக்கு வரும் இந்தத் திட்டம், ஊழியர்களுக்கு உத்திரவாத ஊதியங்கள், கட்டமைக்கப்பட்ட ஓய்வூதியப் பலன் மற்றும் கூடுதல் நெகிழ்வுத்தன்மையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு தகுதியுடையவர்கள் எவர்கள்?

NPS திட்டத்தின் கீழ் உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு UPS திட்டம் பொருந்தும். இருப்பினும், திட்டத்தின் கீழ் உத்திரவாத ஓய்வூதியம் குறிப்பிட்ட சூழ்நிலைகளில் மட்டுமே கிடைக்கும்:

1. 10+ ஆண்டுகள் சேவையுடன் கூடிய ஓய்வு பெறும் ஊழியர்கள்

2. அபராதம் இல்லாமல் FR 56(j) விதியின் கீழ் ஓய்வு பெறும் ஊழியர்கள்

3. 25 ஆண்டுகள் சேவையை முடித்த பிறகு விருப்பு ஓய்வு பெறும் ஊழியர்கள்

4. ராஜினாமா, பணிநீக்கம் அல்லது சேவையிலிருந்து நீக்குதல் போன்ற சந்தர்ப்பங்களில் உத்திரவாத ஓய்வூதியங்கள் பொருந்தாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் (UPS) முக்கிய நன்மைகள்

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS) திட்டத்தை தேர்ந்தெடுக்கும் ஊழியர்களுக்கு கட்டமைக்கப்பட்ட ஓய்வூதியப் பலன்களை வழங்குகிறது.25 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் சேவையாற்றிய ஊழியர்கள் தங்கள் கடைசி 12 மாத சராசரி அடிப்படை ஊதியத்தில் 50%  தொகையை உத்திரவாத ஓய்வூதியமாக பெறுவார்கள். 25 ஆண்டுகளுக்கும் குறைவான சேவையாற்றியவர்களுக்கு, விகிதாசார அளவில் ஓய்வூதியம் வழங்கப்படும். கூடுதலாக, குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சேவையாற்றிய ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10,000 மாதாந்திர ஓய்வூதியம் உறுதி செய்யப்படும். ஓய்வூதியதாரர் இறந்துவிட்டால், சட்டப்பூர்வமாக திருமணமான வாழ்க்கைத் துணைக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய தொகையிலிருந்து 60% பேமிலி பென்ஷனாக வழங்கப்படும். இந்த விரிவான சலுகைகள், ஓய்வுக்குப் பிறகு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு நிதிப் பாதுகாப்பையும் ஆதரவையும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

மேலும் படிக்க | Budget 2025: காப்பீட்டு துறையின் எதிர்பார்ப்புகள் என்ன? 80C, 80D வரி விதிகள் மாறுமா?

ஊழியர் பங்களிப்புகளுக்கான இரட்டை நிதி அமைப்பு திட்டத்தின் கீழ், பங்களிப்புகள் பின்வருவனவற்றைக் கொண்டிருக்கும்:

1. தனிப்பட்ட கார்பஸ்: ஊழியர்களிடமிருந்து (அடிப்படை ஊதியத்தில் 10% + அகவிலைப்படி) மற்றும் மத்திய அரசு (10% உடன் பொருந்தக்கூடியது) பங்களிப்புகள்.

2. பூல் கார்பஸ்: உறுதிப்படுத்தப்பட்ட ஓய்வூதியத்தை பெற ஏதுவாக அடிப்படை ஊதியம் + அகவிலைப்படியில் தோராயமாக 8.5% கூடுதல் அரசு பங்களிப்புகள்.

3. ஊழியர்கள் தங்கள் கார்பஸிற்கான முதலீட்டுத் தேர்வுகளைப் பயன்படுத்தலாம், அதே நேரத்தில் அரசாங்கம் பூல் கார்பஸ் முதலீடுகளை நிர்வகிக்கும்.

4. தற்போதுள்ள ஊழியர்கள் மற்றும் புதிய ஊழியர்களுக்கான நெகிழ்வுத்தன்மை

கடந்த காலத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கான சிறப்பு ஏற்பாடுகள்:

UPS  திட்டம் தொடங்குவதற்கு முன்பு NPS திட்டத்தின் கீழ் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கும், புதிய திட்டம் நன்மைகளை வழங்குகிறது. இந்த ஓய்வு பெற்றவர்கள் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) வட்டி விகிதங்களுடன் நிலுவைத் தொகையையும்,  கடந்த காலத்தில் எடுக்கப்பட்ட பணத்தை செலுத்திய பிறகு மாதாந்திர நிலுவைத் தொகையை பெறுவார்கள்.

ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு மாறுவதற்கான வழிமுறைகள்

1. உத்திரவாத ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த ஊழியர்கள் தங்கள் NPS கார்பஸை UPS திட்டத்திற்கு மாற்ற வேண்டும்.

2. தனிப்பட்ட கார்பஸ் பெஞ்ச்மார்க் கார்பஸை விட குறைவாக இருந்தால், ஊழியர்கள் முழு பென்ஷன் பெறுவதை உறுதி செய்ய பற்றாக்குறையை தீர்க்கும் வகையில் பங்களிக்கலாம்.

3. பெஞ்ச்மார்க் கார்பஸை பெற்ற பிறகு தனிப்பட்ட கார்பஸில் ஏதேனும் அதிகப்படியான தொகை இருந்தால் ஊழியருக்குத் திரும்ப வரவு வைக்கப்படும்.

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் மத்திய அரசு ஊழியர்களுக்கு உத்திரவாத ஓய்வூதியம் மற்றும் மேம்பட்ட ஓய்வூதியப் பாதுகாப்பின் வாக்குறுதியைக் கொண்டுவருகிறது. நிதி அடிப்படையிலான ஓய்வூதியங்கள் மற்றும் முதலீட்டுத் தேர்வுகளில் நெகிழ்வுத்தன்மை ஆகியவற்றில் தெளிவான கவனம் செலுத்துவதன் மூலம், NPS கட்டமைப்பின் கீழ் ஓய்வூதியத் திட்டத்தை எளிதாக்க UPS தயாராக உள்ளது. ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஏப்ரல் 1, 2025 முதல் அமலுக்கு வரும், ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் விரிவான விதிமுறைகள் வெளியிடப்படும்.

மேலும் படிக்க | EPFO 3.0: மொபைல் செயலி முதல் ஏடிஎம் கார்டு வரை... PF உறுப்பினர்களுக்கு புத்தம் புதிய வசதிகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News