பிரபல திரைப்பட இயக்குநர் காலமானார்!

மலையாள திரையுலகின் பிரபல இயக்குநர் ஷாபி உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். 

Written by - R Balaji | Last Updated : Jan 26, 2025, 02:36 PM IST
  • மலையாள திரைப்பட இயக்குநர் ஷாபி காலமானார்
  • தமிழில் மஜா திரைப்படத்தை இயக்கி உள்ளார்
  • திரைத்துறை பிரபலங்கள் இரங்கல்
பிரபல திரைப்பட இயக்குநர் காலமானார்! title=

நடிகர் விக்ரம், அசின், வடிவேலு ஆகியோர் நடிப்பில் வெளியான மஜா திரைப்படத்தை இயக்கி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றவர் பிரபல மலையாள இயக்குநர் ஷாபி. கடந்த சில தினங்களாக உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிப்பட்டார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு (ஜன.25) காலமானார். 

யார் இந்த இயக்குநர் ஷாபி

பொதுவாக மற்ற படங்களை இயக்குவதைக் காட்டிலும் நகைச்சுவை படத்தை இயக்குவது மிகவும் கடினமான ஒன்று. அதை எளிதாக செய்து காட்டியவர் இயக்குநர் ஷாபி. எம்.எச். ரஷீத் என்ற பெயரில் பிறந்த அவர், பிரபல இயக்குநரான ரஃபியின் இளைய சகோதரர் ஆவார். திரைத்துறை துறையில் எளிதாக நுழைந்த அவர் மக்களின் மனங்களிலும் தனது படங்களின் மூலம் எளிதாக நுழைந்தார். இவர் மறைந்த திரைப்படத் தயாரிப்பாளர் சித்திக்கின் மருமகன் ஆவார். 

மேலும் படிங்க: அஜித் குமாருக்கு முன் பத்ம பூஷன் விருது வென்ற தமிழ் நடிகர்கள் யார் யார்?

சித்திக்கிடம் உதவி இயக்குநராக இருந்த அவர், நடிகர் ஜெயராமின் 'ஒன் மேன் ஷோ' திரைப்படத்தின் மூலம் 2001ஆம் ஆண்டு இயக்குனராக அறிமுகமானார். இப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது. தொடர்ந்து அவர் இயக்கிய கல்யாணராமன், புலிவால் கல்யாணம், தொம்மனும் மக்களும், மாயாவி, சாக்லேட் என தொடர்ந்து 6 படங்கள் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. இதனால் ஷாபி மலையாள வரலாற்றில் புதிய சாதனை படைத்ததோடு, மலையாள திரையுலகில் ஓர் தவிர்க்க முடியாத இயக்குநராக உருவெடுத்தார்.

தமிழில் அறிமுகம் 

பின்னர் 2005ஆம் ஆண்டு தமிழில் நடிகர் விக்ரம், அசினை வைத்து மஜா திரைப்படத்தை இயக்கி அறிமுகமானார். இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் வடிவேலுவின் காமெடிகள் இன்றளவும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், இயக்குநர் ஷாபி உடல் நலக்குறைவால் காலமானது ரசிகர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், மலையாள திரையுலகிற்கு இது ஒரு மிகப்பெரிய இழப்பாகும். இவரது மறைவிற்கு விக்ரம் உள்ளிட்ட ஏராளமான தமிழ் மற்றும் மலையாள திரை பிரபலங்கள் இரங்கள் தெரிவித்து வருகின்றனர். 

மேலும் படிங்க: ரஞ்சி விளையாட தயாராகும் விராட் கோலி.. வீடியோ வைரல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News