Central government | மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 லிருந்து 65 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது. இது அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய குட்நியூஸ் ஆகும்.
Central government | மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ் கொடுக்கும் வகையில் ஓய்வு பெறும் வயதை மத்திய அரசு பரிசீலித்து வரும் தகவல் வெளியாகியுள்ளது.
அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை அதிகாரப்பூர்வமாக 60லிருந்து 65 ஆக உயர்த்த மத்திய அரசு (Central government) திட்டமிட்டுள்ளது. இது குறித்து மிகப்பெரிய ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. மத்திய அரசு ஊழியர்களின் நிபுணத்துவத்தை பயன்படுத்திக் கொள்ளவும், அனைத்து துறைகளிலும் ஸ்திரத்தன்மையை கொண்டு வரவும் இந்த முடிவை மத்திய அரசு எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அதேநேரத்தில் அரசு வேலைக்காக படித்துக் கொண்டிருக்கும் மாணவ மாணவிகளுக்கு மத்திய அரசின் இந்த முடிவு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுப்பதாகவும் இருக்கும். ஏனென்றால் அரசு தேர்வுகள் மட்டும் தேர்வு இல்லாமல் நேரடி பணி நியமனங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் அனைத்து வேலைகளும் குறையும். இதனால் இளம் வயதினர் அரசு வேலை என்ற கனவை விட்டு விட்டு வேறு தொழில்களை நாடிச் செல்லும் சூழலுக்கு உள்ளாகலாம்.
இது ஒருபுறம் இருக்க, மத்திய அரசு ஓய்வு பெறும் வயதை நீட்டிக்க சில காரணங்களும் சுட்டிக்காட்டப்படுகின்றன. 60 வயதுக்கும் மேற்பட்டவர்களிடம் இருக்கும் அனுபவம், பொறுமை, சரியான முடிவெடுக்கும் திறன் அரசு துறைகளுக்கு அத்தியாவசிய தேவையாக இருக்கிறது என நம்புகிறது.
மூத்த ஊழியர்கள் பல வருட அனுபவத்தையும் கல்வித் திறனையும் கொண்டு வேலையில் எளிதாக முடிவெடுப்பார்கள். இது ஜூனியர்களுக்கு வழிகாட்டவும், சுமூகமான அறிவு பரிமாற்றத்தை உறுதி செய்யவும் உதவும்.
சுகாதாரம், கல்வி மற்றும் பொது நிர்வாகம் போன்ற முக்கியமான துறைகளுக்கு அனுபவம் வாய்ந்த ஊழியர்கள் தேவைப்படுகிறார்கள். இதனை கருத்தில் கொண்டே மத்திய அரசு இந்த முடிவை எடுக்க உள்ளது.
மேலும் இனி வரும் காலங்களில் ஆண்டு தோறும் ஓய்வு பெறுபவர்களின் எண்ணிக்கை பன்மடங்கு இருக்கும் என உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்கான ஓய்வூதிய பலன்களை ஒரே நேரத்தில் கொடுக்க வேண்டிய இக்கட்டான நிலைக்கு மத்திய அரசு தள்ளப்படும். அந்த சுமையை குறைக்கவும் ஓய்வு பெறுபவர்களின் வயதை அதிகரிக்க மத்திய அரசு ஆலோசிக்கிறது.
ஆட்சேர்ப்பு சரிசெய்தல்கள்: ஓய்வூதியங்களை ஐந்து ஆண்டுகள் தாமதப்படுத்துவது, ஆட்சேர்ப்பு இயக்கங்களைத் திட்டமிடவும், பணியாளர் தேவைகளை திறம்பட நிவர்த்தி செய்யவும் அரசாங்கத்திற்கு அதிக நேரத்தை அளிக்கிறது.
அரசு ஊழியர்களைப் பொறுத்தவரை மத்திய அரசு இந்த முடிவை எடுத்தால் டபுள் ஜாக்பாட் தான். பணிக்காலம் நீட்டிக்கப்படுவதுடன் ஓய்வூதிய பலன்களும் கூடுதலாக இன்னும் 5 ஆண்டுகளுக்கு கிடைக்கும். இதனால், சம்பளத்துடன் ஓய்வூதியமும் அதிகமாக வரும். இதனாலேயே மத்திய அரசு எடுக்கப்போகும் இந்த முடிவு டபுள் ஜாக்பாட் என்ற மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள் உள்ளனர்.
மத்திய அரசு பார்வையில் ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் கொடுக்க வேண்டிய ஓய்வூதிய பலன்களை இன்னும் 5 ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்க முடியும். மேலும் ஆண்டு தோறும் நடத்தப்பட வேண்டிய அரசு தேர்வுகளை நடத்துவது குறையும். புதிதாக ஆட்களை தேர்வு செய்ய வேண்டிய தேவை இருக்காது. இது இளம் தலைமுறைக்கு அதிர்ச்சியை கொடுக்கும் முடிவு என்றாலும் மத்திய அரசின் நிர்வாகத்துக்கு தேவையான ஒன்று என கருதப்படுகிறது.
மத்திய அரசு எடுக்கப்போகும் இந்த முடிவு அனைத்து மத்திய அரசு ஊழியர்களின் பணிக்கும் பொருந்தும். எனவே கூடிய விரைவில் மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட அதிக வாய்ப்பு