Union Budget 2025: புதிய வரி முறையில் வரி செலுத்துவோர் எதிர்பார்க்கும் முக்கிய அறிவிப்புகள் என்ன? நிபுணர்களின் கணிப்பு என்ன? முழுமையான அலசலை இங்கே காணலாம்.
Union Budget 2025: இந்த முறை பட்ஜெட்டில் வரி செலுத்துவோருக்கு பல நல்ல செய்திகள் காத்திருப்பதாக கூறப்படுகின்றது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டில் புதிய வரி விதிப்பு முறை தொடர்பான இரண்டு பெரிய அறிவிப்புகளை வெளியிடுவார் என வட்டாரங்கள் கூறுகின்றன. புதிய வரி முறையில் நிவாரணம் அளித்து, அதன் மூலம் அதை வரி செலுத்துவோர் இடையே பிரபலமாக்கும் நோக்குடன் அரசு சில அறிவிப்புகளை வெளியிடும் என நம்பப்படுகின்றது.
இன்னும் ஒரு வாரத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வார். பட்ஜெட் குறித்து பல வித எதிர்பார்ப்புகள் உள்ளன. வரி விலக்குகள், வரி வரம்பில் மாற்றம் ஆகியவற்றுக்காக வரி செலுத்துவோர் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.
இந்த முறை பட்ஜெட்டில் வரி செலுத்துவோருக்கு பல நல்ல செய்திகள் காத்திருப்பதாக கூறப்படுகின்றது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டில் புதிய வரி விதிப்பு முறை தொடர்பான இரண்டு பெரிய அறிவிப்புகளை வெளியிடுவார் என வட்டாரங்கள் கூறுகின்றன. புதிய வரி முறையில் நிவாரணம் அளித்து, அதன் மூலம் அதை வரி செலுத்துவோர் இடையே பிரபலமாக்கும் நோக்குடன் அரசு சில அறிவிப்புகளை வெளியிடும் என நம்பப்படுகின்றது.
புதிய வரி முறையில், வருமான வரி விலக்கில் அரசாங்கம் மாற்றங்களைச் செய்யக்கூடும் என கூறப்படுகின்றது. புதிய வரி முறையை மேலும் பிரபலமாக்க விலக்குகளின் வரம்பை அரசு அதிகரிக்க வாய்ப்புள்ளது. முதலாவதாக, நிலையான விலக்கு, அதாவது ஸ்டாண்டர்ட் டிடக்ஷனில் நிவாரணம் கிடைக்கலாம். இரண்டாவதாக ரூ.15-20 லட்சம் வரி வரம்பில் உள்ளவர்களுக்கு சலுகைகள் கிடைக்கலாம்.
புதிய வரி முறையில் வரி செலுத்துவோர் பல வித அறிவிப்புகளை எதிர்பார்க்கிறார்கள். இவற்றில் எந்த அறிவிப்புகள் எல்லாம் வரும் என கணிப்புகள் உள்ளன? 2 முக்கிய அறிவிப்புகளை நிபுணர்களும் எதிர்பார்க்கிறார்கள்.
புதிய வரி முறையில் (New Tax Regime) தற்போதைய நிலையான விலக்கு வரம்பு ரூ.75,000 ஆக உள்ளது. இந்த வரம்பு ரூ.1 லட்சமாக உயர்த்தப்படக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த பட்ஜெட்டிலும், அரசாங்கம் நிலையான விலக்குக்கான வரம்பை ரூ.50,000 லிருந்து ரூ.75,000 ஆக உயர்த்தியது.
நிலையான விலக்கு வரம்பு மேலும் உயர்த்தப்பட்டால், வரி செலுத்துவோருக்கு தங்கள் வருமானத்தில் ரூ.1 லட்சம் வரையிலான தொகையை வரியில்லா வருமானமாக்க வாய்ப்பு கிடைக்கும். இது அவர்களின் வரிக்கு உட்பட்ட வருமான அளவை குறைக்கும். இதன் மூலம் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் இருவரும் நேரடிப் பயனைப் பெறுவார்கள். இது வரி செலுத்துவோரின் கைகளில் அதிக பணத்தை இருக்கச் செய்யும்.
புதிய வரி முறையில் அரசாங்கம் 20% வரி அடுக்கின் வரம்பை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. இதுவரை, 12-15 லட்சம் ரூபாய் வருமானம் உள்ளவர்களுக்கு 20% வரி விதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இப்போது அதை ரூ.20 லட்சம் வருமானமாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. இந்த மாற்றம் வந்தால், அது குறிப்பாக ரூ.15-20 லட்சத்திற்கு இடைப்பட்ட வருமானம் உள்ளவர்களுக்கு நிவாரணம் அளிக்கும்.
வரி அடுக்குகளில் மாற்றம் ஏற்பட்டால், நடுத்தர மற்றும் உயர் வருமானக் குழுவில் உள்ள வரி செலுத்துவோருக்கு மிகவும் பயனளிக்கும். ஏனெனில் இந்த வரம்பு அதிகரிக்கப்பட்டால், இவர்கள் முன்பை விட குறைவாக வரி செலுத்தினால் போதும்.
பழைய வரி முறையை மெதுவாக நிறுத்த, புதிய வரி முறையை மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்றுவது அவசியம். தற்போது, புதிய வரி முறையில், ரூ.7 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் நிலையான விலக்கு கிடைக்கிறது. இதைத் தவிர, வேறு எந்த வகையான விலக்குளுக்கும் இதுவரை இதில் வசதி இல்லை.
பட்ஜெட்டில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டால், அது நடுத்தர மக்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக இருக்கும். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய வரி முறையில் பல வித மாற்றங்களை செய்வார் என்ற பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. பட்ஜெட் தாக்கலன்று இந்த எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகுமா இல்லையா என்பது புரியும்.