Union Budget 2025: தனியார் துறை ஊழியர்களுக்கு இந்த பட்ஜெட் குறித்து பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. 2025 பட்ஜெட்டில் தனியார் துறை ஊழியர்களுக்கு ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) மூலம் நிர்வகிக்கபப்படும் இபிஎஃப், இபிஎஸ் கணக்குகள் சார்ந்த பெரிய அறிவிப்பு வெளியாகலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Budget 2025 Expectations: தற்போது, ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) கீழ் உள்ள தனியார் ஊழியர்கள் மாதத்திற்கு ஓய்வூதியமாக வெறும் ரூ.1000 மட்டுமே பெறுகிறார்கள். இந்த தொகை 10 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2014 இல் நிர்ணயிக்கப்பட்டது. அதற்கு முன்னர், ஓய்வூதியத் தொகை இன்னும் குறைவாக இருந்தது. 2014 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட மாற்றம் ஊழியர்களுக்கு சிறிது நிம்மதியைக் கொடுத்தது. இந்த முறை மத்திய பட்ஜெட்டில் தனியார் ஊழியர்களுக்கான குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் ரூ.7500 ஆக உயர்த்தப்படலாம் என்று கூறப்படுகின்றது. இது செயல்படுத்தப்பட்டால், ஊழியர்களுக்கு இது ஒரு பெரிய நிவாரணமாக இருக்கும்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்னும் சில நாட்களில் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். சாமானிய மக்கள் முதல் வணிக ஜாம்பவான்கள் வரை அனைவரும் இந்த பட்ஜெட்டில் வரப்போகும் அறிவிப்புகளுக்காக ஆவலுடனும் நம்பிக்கையுடனும் காத்திருக்கிறார்கள்.
தனியார் துறை ஊழியர்களுக்கும் இந்த பட்ஜெட் குறித்து பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. 2025 பட்ஜெட்டில் தனியார் துறை ஊழியர்களுக்கு ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) மூலம் நிர்வகிக்கபப்படும் இபிஎஃப், இபிஎஸ் கணக்குகள் சார்ந்த பெரிய அறிவிப்பு வெளியாகலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த முறை மத்திய பட்ஜெட்டில் தனியார் ஊழியர்களுக்கான குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் ரூ.7500 ஆக உயர்த்தப்படலாம் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது செயல்படுத்தப்பட்டால், ஊழியர்களுக்கு இது ஒரு பெரிய நிவாரணமாக இருக்கும். ஏனெனில் தற்போது அவர்களுக்கு மிகக் குறைந்த ஓய்வூதியம்தான் கிடைக்கிறது. இதை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.
இது தொடர்பாக சமீபத்தில், ஊழியர் அமைப்புகள் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தன. பல கோரிக்கைகள் நிதி அமைச்சகத்தின் முன்வைக்கப்பட்டன. இபிஎஸ் மூலம் அளிக்கப்படும் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை மாதத்திற்கு ரூ.7500 ஆக உயர்த்த வேண்டும் என்பது இவற்றில் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
தற்போது, ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) கீழ் உள்ள தனியார் ஊழியர்கள் மாதத்திற்கு ஓய்வூதியமாக வெறும் ரூ.1000 மட்டுமே பெறுகிறார்கள். இந்த தொகை 10 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2014 இல் நிர்ணயிக்கப்பட்டது. அதற்கு முன்னர், ஓய்வூதியத் தொகை இன்னும் குறைவாக இருந்தது. 2014 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட மாற்றம் ஊழியர்களுக்கு சிறிது நிம்மதியைக் கொடுத்தது.
குறைந்தபட்ச ஓய்வூதியம் அதிகரிக்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இந்தக் காலகட்டத்தில் பணவீக்கம் கணிசமாக அதிகரித்துள்ளது. பல அம்சங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை வைத்து பார்க்கும்போது, ரூ.1000 ஓய்வூதியம் மிகக் குறைவானது என்பது தெளிவாகிறது. ஆகையால், பணி ஓய்வுக்கு பிறகு, வசதியான வாழ்க்கை வாழ, ஓய்வூதியத்தை இப்போது மாதத்திற்கு ரூ.7500 ஆக உயர்த்த வேண்டும் என்று ஓய்வூதியதாரர்கள் கோருகிறார்கள்.
ஓய்வூதிய தொகையை அதிகரிப்பதால், ஓய்வூதியதாரர்களின் வாழ்க்கைத் தரம் உயரும். சுகாதாரப் பராமரிப்பு மற்றும் பிற செலவுகளுக்கு அவர்களிடம் போதுமான தொகை இருக்கும். மாத ஓய்வூதியமாக ரூ.7500 கிடைத்தால், அவர்களால் தங்கள் மருத்துவப் பராமரிப்பை நிம்மதியாகச் செய்ய முடியும்.
குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து இருந்து வருகின்றது. இதற்காக பலமுறை பல தொழிலாளர் அமைப்புகளும் சங்கங்களும் அமைச்சர்களையும், அதிகாரிகளையும் சந்தித்து தங்கள் நிலையை விளக்கியுள்ளன.
சமீபத்திலும், ஊழியர் சங்கங்கள், அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (AITUC) மற்றும் பாரதிய ஷ்ராமிக் மகாசங்கம் (BMS) ஆகியவற்றின் பிரதிநிதிகள் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தனர். இந்த அமைப்புகள் தங்கள் கோரிக்கைகளை முன்வைக்கும் போது, ஓய்வூதியத்தை அதிகரிப்பது பற்றிப் பேசின. மேலும் ஊழியர்களுக்கான பிற வசதிகளை மேம்படுத்துமாறும் அரசாங்கத்தை வலியுறுத்தின.
2025 பட்ஜெட்டில் மத்திய அரசு குறைந்தபட்ச ஓய்வூதியத்தை அதிகரிப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டால், அது தனியார் துறை ஊழியர்களுக்கு ஒரு முக்கியமான விஷயமாக இருக்கும். இந்த ஓய்வூதிய உயர்வை ஊழியர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். இப்போது அரசாங்கம் அவர்களின் தேவைகளைப் புரிந்துகொண்டு அவர்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை ஊழியர்களிடையே உள்ளது.