நாகார்ஜுனாவின் மகனும் பிரபல நடிகருமான நாக சைதன்யா மற்றும் நடிகை சமந்தா தெலுங்கில் ரீ மேக் செய்யப்பட்ட விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சேர்ந்து நடித்தனர். அதில் அவர்களுக்கு பழக்கம் ஏற்பட்ட நிலையில், அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதனைத் தொடர்ந்து 2017ஆம் ஆண்டு இருவரும் வீட்டு சமதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
பிரிந்த சமந்தா - நாக சைதன்யா
இந்த திருமணம் உறவு நன்றாக சென்று கொண்டிருக்கும் வேளையில் 2021ஆம் ஆண்டு திடீரென இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்ததாக சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்தனர். அது ரசிகர்களுக்கு இடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த பிரிவிற்கு காரணம் நடிகை சமந்தாவுக்கு வந்த மையோசிடிஸ் நோய்தான் காரணம் என பலரும் கூறி வந்தனர். ஆனால் அவர்களது பிரிவு குறித்து சமந்தாவோ நாக சைதன்யாவோ சரியான காரணத்தை தெரிவிக்கவில்லை.
மேலும் படிங்க: அஜித் குமாருக்கு முன் பத்ம பூஷன் விருது வென்ற தமிழ் நடிகர்கள் யார் யார்?
ஆனால் திருமணம் உறவு முடிவுக்கு வந்த பின்னர் நடிகை சமந்தா நோய்க்கான சிகிச்சையை எடுத்துக் கொண்டு மீண்டும் நடிக்க தொடங்கினார். அவரது நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு தெங்கில் குஷி திரைப்படம் வெளியானது. அதனைத் தொடர்ந்து சிட்டாட்டல் என்ற வெப் சீரியஸில் நடித்தார்.
சமந்தா பேட்டி
இந்த நிலையில், நடிகை சமந்தா சமீபத்தில் ஒரு பேட்டி அளித்துள்ளார். அப்போது தமிழ் படங்களில் ஏன் தற்போது அதிகம் நடிப்பதில்லை என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, நிறைய படங்களில் நடிப்பது எளிதான ஒன்றுதான். ஆனால் என் வாழ்க்கையில் ஒவ்வொரு படமும் கடைசி படம் போல உணர வேண்டிய ஒரு கட்டத்தில் தான் நான் இருக்கிறேன் என நினைக்கிறேன்.
அப்படியான ஒரு தாக்கத்தை சினிமா தர வேண்டும். மேற்கூறியவற்றை நான் முழுமையாக நம்பவில்லை என்றால் நான் அந்த படங்களில் நடிக்கவே மாட்டேன். ஒரு நடிகையான நான் சவால் நிறைந்த கதாபாத்திரத்தில் நடிக்கவே வேண்டும் என விரும்புகின்றேன். எனக்கு மன நிறைவு தராத படங்களில் ஒருபோதும் நடித்ததே கிடையாது எனத் தெரிவித்தார்.
தமிழில் கடைசியாக நடிகை சமந்தா, கடந்த 2022ஆம் ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிங்க: ரஞ்சி விளையாட தயாராகும் விராட் கோலி.. வீடியோ வைரல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ