President Droupadi Murmu Republic Day speech | நாட்டின் 76வது குடியரசு தின விழா வெகுவிமரிசையாக ஜனவரி 26 ஆம் தேதியான நாளை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாட்டு மக்கள் மத்தியில் உரையாற்றினார். அதில் ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு ஆதரவு தெரிவித்த அவர், உத்தரப்பிரதேசம் பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் மாநிலமாகவும், ஆன்மீகத்தின் அடையாளமாகவும் இருப்பதாகவும் பாராட்டு தெரிவித்தார்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பேசும்போது, " பல தசாப்தங்களாக நாட்டில் நீடித்து வரும் காலனித்துவ மனநிலையின் எச்சங்களை அகற்றுவதற்காக மத்திய அரசு தொடர்ச்சியான முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே பிரிட்டிஷ் கால குற்றவியல் சட்டங்கள் அகற்றப்பட்டு மூன்று புதிய நவீன சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய சீர்திருத்தங்களுக்கு ஒரு துணிச்சலான தொலைநோக்கு பார்வை தேவை. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் மேம்பட்ட நிர்வாகம் மற்றும் நிதி நெருக்கடியை குறைக்கும்.
பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்ஷய ஆதினியம் ஆகிய குற்றவியல் சட்டங்கள் தண்டனையை விட நீதி வழங்குவதை முன்னுரிமைப்படுத்துகிறது மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை நிவர்த்தி செய்வதற்கான முக்கியத்துவத்தை அளிக்கிறது. சுதந்திரத்தின் போது, நாட்டின் பல பகுதிகள் கடுமையான வறுமை மற்றும் பசியை எதிர்கொண்டன. இருப்பினும், நாம் நம் மீது நம்பிக்கை வைத்து வளர்ச்சிக்கான நிலைமைகளை உருவாக்கியிருக்கிறோம்.
விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் பங்களிப்புகள் மகத்தானது. இந்தியாவின் பொருளாதாரம் இப்போது உலகளாவிய பொருளாதார போக்குகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த மாற்றம் அரசியலமைப்பால் நிறுவப்பட்ட கட்டமைப்பில் வேரூன்றியுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் தொடர்ந்து உயர்ந்த பொருளாதார வளர்ச்சி விகிதம் காரணமாக வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. இது, விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு வருமானத்தை அதிகரித்துள்ளது. மேலும் பலரை வறுமையிலிருந்து மீட்டுள்ளது.
அனைத்து குடிமக்களுக்கும் வீடு மற்றும் சுத்தமான குடிநீர் வழங்குவதில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது. தாழ்த்தப்பட்ட சாதியினர் (SC), பழங்குடியினர் (ST) மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) ஆகியோருக்கு மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பிரதான் மந்திரி அனுசுசித் ஜாதி அப்யுதய் யோஜனா மற்றும் பிரதான் மந்திரி ஜன்ஜாதி ஆதிவாசி நியாய மகா அபியான் போன்ற திட்டங்கள் சமூக-பொருளாதார வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட பிரத்யேக திட்டங்கள் ஆகும்.
நாட்டில் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை வளர்ப்பதற்கும், அனைத்து குடிமக்களுக்கும் சமமான மற்றும் வளமான எதிர்காலத்திற்கான ஒரு தொலைநோக்கை உருவாக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. இதனை மனதில் வைத்து அனைத்து குடிமக்களுக்கும் 75வது குடியரசு தினம் நிறைவடைந்ததை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும்." என குறிப்பிட்டார். மேலும், பெண்கள் முன்னேற்றம் மற்றும் அவர்களின் பாதுகாப்பு குறித்தும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பேசினார்.
மேலும் படிக்க | குடியரசு தினம் 2025: நாளை ‘இந்த’ நிறுவனங்கள் இயங்கும்-மற்றது செயல்படாது..!
மேலும் படிக்க | குடியரசு தினம் 2025: நாளை ‘இந்த’ நிறுவனங்கள் இயங்கும்-மற்றது செயல்படாது..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ