Benefits of Winter Fruits: பெரும்பாலான மக்கள் குளிர்காலத்தில் பழங்களை உட்கொள்ள அச்சப்படுகிறார்கள். ஏனென்றால் குளிர்காலத்தில் பழங்களை சாப்பிடுவதால் சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் வரக்கூடும் என்ற கருத்து மக்களிடையே உள்ளது. எனினும் பருவகால பழங்களை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. பருவகாலத்தில் எந்த பழத்தை உட்கொள்ள வேண்டும் என அறிந்து பழங்களை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்திற்கு எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படாது.
சில குறிப்பிட்ட பழங்களை உட்கொள்வதன் மூலம் குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து பருவகால நோய்களிலிருந்து உடல் பாதுகாக்கப்படுகின்றது. குளிர்காலத்தில் சாப்பிட வேண்டிய பழங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஆரஞ்சு
ஆரஞ்சு ஒரு பருவ கால பழமாகும். பருவகால பழங்களை உட்கொள்வது நல்லது என்பதால் குளிர்காலத்தில் ஆரஞ்சு உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றதாக இருக்கும். ஆரஞ்சு பழத்தை உட்கொள்வதால் உடலில் சளி சேரும் என்று பலர் கருதுகிறார்கள். ஆனால் அனைவருக்கும் இந்த பிரச்சனை ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது. குளிர்காலத்தில் ஆரஞ்சு பழம் உட்கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது. பகல் வேளையில் இதை உட்கொள்ளலாம். இதில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகமாக உள்ளன.
மேலும் படிக்க | தொப்பை கொழுப்புக்கு உடனடி தீர்வளிக்கும் சமையலறை மசாலாக்கள்: ட்ரை பண்ணி பாருங்க
பிளம்ஸ்
ப்ளன்ஸில் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளன. இதன் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது. குளிர்காலத்தில் ப்ளம்ஸ் பழத்தை உட்கொள்வது உடலை வலுவாக்கும் குளிர்காலத்தை கண்டிப்பாக உட்கொள்ள வேண்டிய ஒரு பருவ காலப் பழமாக இது உள்ளது.
வாழைப்பழம்
வாழைப்பழம் அனைத்து சீசன்களிலும் கிடைக்கும் என்றாலும் குளிர் காலத்தில் இதை உட்கொள்வது அதிக பலன்களை அளிக்கும். தினமும் ஒரு வாழைப்பழத்தை உட்கொள்வதால் குளிர்காலத்தில் உடனடி சக்தி கிடைக்கின்றது.
கொய்யாப்பழம்
கொய்யாப்பழம் குளிர்காலத்தில் வயிற்றை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும். இது செரிமானத்தை சீராக்குகிறது. சளி, இருமல் பிரச்சனையும் இதனால் நீங்கும். கொய்யாவில் வைட்டமின் சி மற்றும் இன்னும் பல சத்துக்கள் உள்ளதால் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றது.
மாதுளை
மாதுளை குளிர்காலத்திற்கு ஏற்ற பழமாக கருதப்படுகின்றது. இதை உட்கொள்வதால் இரத்த குறைப்பாட்டை சரி செய்யலாம். இதன் மூலம் உடலுக்கு பலவித ஆரோக்கிய நன்மைகள் கிடைப்பதோடு முகப் பொலிவை ஆதிகரிக்கவும் மாதுளை உதவியாக இருக்கின்றது.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ