கோவாக்ஸினுக்கு உலக சுகாதார அமைப்பின் அவசர கால அங்கீகாரம் மிக விரைவில்..!!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிட் -19 தடுப்பூசி கோவாக்ஸினுக்கான அவசர பயன்பாட்டு அங்கீகாரத்தை (EUA) உலக சுகாதார நிறுவனம் அக்டோபர் மாதம் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 30, 2021, 11:42 AM IST
கோவாக்ஸினுக்கு உலக சுகாதார அமைப்பின் அவசர கால அங்கீகாரம் மிக விரைவில்..!!  title=

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிட் -19 தடுப்பூசி கோவாக்ஸினுக்கான அவசர பயன்பாட்டு அங்கீகாரத்தை (EUA) உலக சுகாதார நிறுவனம் அக்டோபர் மாதம் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

முன்னதாக, கோவாக்சின் குறித்த கூடுதல் தரவுகளை பாரத் பயோடெக் நிறுவனத்திடம் WHO கோரியிருந்த நிலையில், தடுப்பூசிக்கான EUA கிடைக்க இன்னும் சில நாட்கள் தாமதமாகும் என்று ANI தெரிவித்தது. இந்த தாமதம் இந்தியர்களை, குறிப்பாக மாணவர்களையும் சர்வதேச பயணம் மேற்கொள்பவர்களையும் பாதிக்கும் என்பதால், உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் எப்போது கிடைக்கும் என எதிர்பார்ப்பு அதிகரித்தது.

உலக சுகாதார அமைப்பின் அவசர கால அனுமதி (EUA) கோவாக்சின் (Covaxin) தடுப்பூசிக்கு மிகவும் முக்கியமாகும். ஏனெனில் இந்த அங்கீகாரம் இல்லாமல், கோவாக்ஸின் தடுப்பூசி பெரும்பாலான நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்படாது.

தடுப்பூசி (Vaccine) குறித்த நிபுணர்களின் மூலோபாய ஆலோசனைக் குழு (SAGE) அக்டோபர் 5 ஆம் தேதி, கோவாக்சினுக்கான EUA குறித்து முடிவெடுக்க கூடுகிறது. முன்னதாக ஏஎன்ஐ-க்கு அளித்த பிரத்யேக பேட்டியில், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் டாக்டர் பிரவின் பாரதி பவார், “ஆவணங்களை ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கும் நடைமுறை உள்ளது. WHO இன் அவசர பயன்பாட்டு அங்கீகாரம் விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.” என்று கூறினார்.

ALSO READ: WHO vs Covaxin: கோவேக்சின் தடுப்பூசியை WHO விரைவில் அங்கீகரிக்கலாம்…

பாரத் பயோடெக்கின் மூன்றாவது கட்ட பரிசோதனை தரவுகள், மூலம் கோவாக்ஸினுக்கு 77.8 சதவிகித செயல்திறன் கொண்டுள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

கோவாக்சின் பரிசோதனை தொடர்புடைய அனைத்து தரவுகளும் உலக சுகாதார அமைப்பிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. மேலும் ஐநா சுகாதார நிறுவனம் கேட்டுள்ள அனைத்து கேள்விகளுக்கான விளக்கங்களும் பாரத் பயோடெக் மூலம் அளிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ALSO READ: இந்தியாவின் ‘இந்த’ மாநிலங்களில் 100% மக்களுக்கு ஒரு டோஸ் தடுப்பூசி வழங்கி சாதனை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News