மூத்த குடிமக்களுக்காக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 70 வயது மேல் உள்ள மூத்த குடிமக்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்ச மதிப்பிலான இலவச சிகிச்சை பெற உதவும் மருத்துவக் காப்பீடு வழங்கும் திட்டத்தை இன்று பிரதமர் மோடி ஒரு மாத காலம் முன்னதாக தொடக்கின் வைத்தார். இந்த திட்டத்தின் கீழ், மூத்த குடிமக்கள் ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை பெற தகுதியுடையவர்கள்.
மத்திய அரசின் இலவச காப்பீட்டுத் திட்டம்
இந்திய அரசின் இந்த திட்டம் சுமார் 4.5 கோடி குடும்பங்களைச் சேர்ந்த 6 கோடி மூத்த குடிமக்களுக்கு உதவி வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டத்திற்குத் தகுதியான ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் இருந்தால், அவர்களுக்கிடையே ரூ. 5 லட்சம் சுகாதாரக் காப்பீடு பகிர்ந்து கொள்ளப்படும், அதாவது ஒரு குடும்பத்தின் அடிப்படையில் ரூ. 5 லட்சம் என்ற அளவிலான கவரேஜ் இருக்கும்.
ஆயுஷ்மான் பாரத் என்னும் PMJAY
ஆயுஷ்மான் பாரத் யோஜனா அல்லது பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ், 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்கள் அனைவருக்கும், 5 லட்சம் ரூபாய் வரை இலவச மருத்துவ சிகிச்சைக்கு தகுதியுடையவர்கள். இந்தத் திட்டத்தின் கீழ், 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட தகுதியுள்ள அனைத்து மூத்த குடிமக்களுக்கும் தனி ஆயுஷ்மான் அட்டை வழங்கப்படும்.
மேலும் படிக்க | ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அப்டேட்: மத்திய அரசின் 1 எச்சரிக்கை, 2 குட் நியூஸ்
70 வயது அல்லது அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள்
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் பதிவு செய்ய, 70 வயது அல்லது அதற்கு மேற்பட்ட மூத்த குடிமகன் ஆதார் வைத்திருப்பது அவசியம். தகுதியான மூத்த குடிமக்களுக்கு ஆயுஷ்மான் கார்டு பதிவு செய்வதற்கும் வழங்குவதற்கும் ஆதார் அடிப்படையிலான e-KYC கட்டாயமாகும். இது இல்லாமல், மூத்த குடிமக்கள் இந்த அட்டையை பெற முடியாது. 70 வயது மற்றும் அதற்கு மேல் உள்ள பயனாளிகள் பதிவு செய்த முதல் நாளிலிருந்தே இலவச சிகிச்சை பெற தகுதி இடையவர்கள் ஆவார்கள். எந்தவொரு நோய்க்கும் அல்லது சிகிச்சைக்கும் காத்திருக்கும் காலம் இல்லை. எனவே கவரேஜ் உடனடியாக தொடங்குகிறது.
இலவச சிகிச்சை பெறுவதற்கான நிபந்தனைகள்
இந்த சிறப்புத் திட்டத்திற்கான ஒரே தகுதி அளவுகோல், நபர் 70 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். அவர்களின் வருமானம் எந்த அளவில் இருந்தாலும், ஆதார் அட்டையில் பதிவு செய்யப்பட்ட பிறந்த தேதியின்படி 70 வயது பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும். மூத்த குடிமக்கள் திட்டத்தில் பதிவு செய்வதற்கு ஆதார் மட்டுமே தேவைப்படும் ஆவணம். 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட தகுதியுள்ள அனைத்து மூத்த குடிமக்களுக்கும் தனி ஆயுஷ்மான் அட்டை வழங்கப்படும்.
மேலும் படிக்க | ரூ.10,000 SIP மூலம் ரூ.1 கோடி கார்பஸ் சேர்க்க எவ்வளவு காலம் ஆகும்? முழு கணக்கீடு இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ